நர்மதா சுப்ரமணியம்-எனை நீங்காதிரு கதைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு

💝நர்மதா சுப்ரமணியம்-எனை நீங்காதிரு கதைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு 💝
Selvarani selvarani review
நர்மதாவின் எனை நீங்காதிரு.
காதலின் இனிமையான பக்கங்களை மட்டும் இல்லாமல் கசப்பான பக்கங்களையும் பார்வைக்கு வைத்திருக்கிறார்.தெரிந்தே இப்படி கஷ்டப்படணுமா என்று சக்தியை கேள்வி கேட்க தோன்றுகிறது.அவளின் பெற்றோரின் மனநிலையை குற்றம் சொல்லவே முடியாது.விஷ்வாவின் அளவுக்கு மீறிய துணிச்சலை பாராட்டினாலும் கொரானாவால் அடி வாங்குவது விதி.வேலையை விடுவது பெரிய முட்டாள்தனமாக தோன்றியது. இதில் இரண்டு குழந்தைகள் பெற்று வளர்த்து... படிக்கும்போதே டயர்டா கிட்டேன்!காதலிக்கும்போது குடிசையில் வாழ தயார் என்று சொன்னாலும் நிஜத்தில் அது எத்தனை அபத்தம் என்பது நிஜமோ நிஜம்.
நல்ல நிலைக்கு வந்ததும் பெற்றோர் சேர்வது அநியாயம்.முதலிலேயே உதவியிருக்கலாம்.
காதலின் கசப்பான பக்கங்ஙளை அழகா எழுதி இருக்காங்க.
---------------------------------
அனுஷா டேவிட் ரிவ்யூ
#கதை விமர்சனம்
எனை நீங்காதிரு-நர்மதா சுப்பிரமண்யம்
கதையோட கதாபாத்திரம் தானாக பேசி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதாய் எழுத்து வித்தியாசமான அனுபவம் தந்தது. ஆரம்பத்தில் வாசித்து என்ன இது என்று நிறுத்தி வைக்க எண்ணி அடுத்த எபி எப்படி இருக்கிறது என்று வாசிக்கலாமென்று வாசித்து கதையினுள்ளே தொலைந்து போனேன்.
காதல் மணமோ வீட்டில் பேசி வைத்த மணமோ பிரச்சினைகளும் நெருக்கடிகளும் வந்தே தீரும் அதை சமாளிப்பதில் இருக்கிறது அவரவர் சாமர்த்தியம்.
இங்கு எதேச்சையாக சந்தித்த உள்ளங்கள் நட்பில் தொடங்கி மணத்தில் தங்கள் வாழ்வை தொடங்குகின்றனர். ஒருவர் நிலை ஒருவர் தெரிந்து அறிந்து தான் மணம் செய்ய ஒரு சந்தர்ப்பத்தில் அவள் பேசும் வார்த்தை அவனை வலித்திட செய்ய அவளை விட்டு செல்கிறான். இறுதியில் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதை ரொம்ப எதார்த்தமா சொல்லி இருகாங்க.
அவங்க அவங்க பக்கம் நியாயத்தை அவங்க அவங்களே சொல்லும் போது ஆமாதானேனு தோணாமல் இல்லை. அந்த போர்ஷன் எல்லாம் ரொம்ப கேஷூவலா இருந்தது. எந்த இடத்திலும் செயற்கை இல்லை.
இரண்டு பேரும் தொலைதூரமா இருந்தாலும் அவங்க உணர்வுகளை போன் மூலமா மெஸஜ் மூலமா பகிர்ந்து கொண்டது உணர்வுபூர்வமா இருந்தது எக்ஸாட்லி இன்னிக்கு நிறைய பேர் அப்படி தான் இருகாங்க வீட்டு சூழல் கருதி.
காதல் மணம் புரிந்தவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்னு இந்த கதையை படிச்சா உணரமுடியும். சாதாரண வீட்டு வேலை தொடங்கி வேலை செல்வது குழந்தை பேறு அந்த நேர ஹார்மோன் இம்பாலன்ஸ் அழுத்தம் அதை கடந்து செல்ல தவிக்கும் தவிப்பு வலி பிரிவு எல்லாம் அச்சு அசலா நிஜ வாழ்க்கையில் நடந்ததை எழுதிய போல இருந்தது. எனக்கு ரொம்ப பிடிச்சது. புது முயற்சி. வாழ்த்துக்கள் அக்கா.
Leave a reply
- 137 Forums
- 2,165 Topics
- 2,458 Posts
- 8 Online
- 1,472 Members