Skip to content
விமர்சனம் வழங்கியவர...
 
Share:
Notifications
Clear all

விமர்சனம் வழங்கியவர்: நித்திலா (ரைட்டர்) Oh my butterfly review

1 Posts
1 Users
0 Reactions
111 Views
Site-Admin
(@veenaraj)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 373
Topic starter  

விமர்சன கதையின் பெயர் : ஓ மை பட்டர்பிளை 

விமர்சனம் வழங்கியவர்: நித்திலா (ரைட்டர்)

🦋ஓ மை பட்டர்பிளை🦋

❤️மனதை வருடிய வண்ணங்கள்❤️  

 

🦋அனைவரும் ரசிக்கும் பட்டாம்பூச்சி கொண்டு,ரசிக்கும்படியான அழகான தலைப்பு.

சொல்லும் போதே உதடுகள் புன்னகை கொள்ளும்.

🦋ஸ்பீட்  படம் பார்ப்பது போல நொடிக்கு நொடி படபடப்பு,கடைசி வினாடி வரை நீடித்தது சபாஷ் சொல்ல வைத்தது👏👏👏👏👏

🦋வித்யுத்,ஆர்கலி அழகான பெயர்த்  தேர்வுகள்.

🦋பார்த்தவுடன் தோன்றிய நேசத்தில்,அத்தனை இன்னல்கள் இருந்தும்,வித்யுத் உறுதியாக இருந்து கை பிடிப்பது👌👌👌👌

🦋அன்பு,அக்கறை,கோபம்,உறுதி  என்று வித்யுத் காதலின் வண்ணங்கள் அனைத்துமே ரசனைக்குரியது.

🦋வேதனையில் தோய்த்திடும் 

கொடுமைகளைக் காட்சிப் படுத்தாமல் சொல்லிச் சென்றது,கதையின் கனத்தைக் குறைத்து மனதை இலகுவாக்கியது.

🦋நேசம்,அக்கறை,கோபம்,நிதானம், விவேகம் கொண்டு வித்யுத் மிளிர்வது அழகு👏👏👏👏👏👏அருமையான படைப்பு.

🦋ஆர்கலி தன் நேசத்தை மறைத்துத் 

தவிப்பது,கண்ணாடி அறைக்குள் 

மாட்டிக் கொண்ட பட்டாம்பூச்சியின் 

தவிப்பு.அவள் உணர்வுகளைப் பதிவு 

செய்திருந்த பாங்கு அருமை.

🦋 ஆரு முதலில் தவறான முடிவு 

எடுத்தாலும்,மனம் தேறி வாழ்வில் 

பற்று கொண்டது நிறைவு.

🦋ஆத்விக்,சரண்,மஹதியின் கதாபாத்திரங்கள் சிறப்பு👏👏👏👏

🦋ஜானியை மிகவும் பிடித்தது.

🦋கதை எங்கும் விதைத்திருந்த 

கருத்துக்கள் அத்தனையும் ஆழமானவை.

பெரும் பாராட்டிற்கு உரியவை👏👏👏👏👏👌👌👌👌👌👌

🦋காதல் காட்சிகள் அனைத்தும் அழகு.ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு வண்ணம்.மூன்று காதலும் மனதைத் தொட்டது.

 

காதலின்றி 

இவ்வுலகம் 

இயங்காது!

யாவருக்கும் 

யாதுமான 

காதலின்றி 

உலகில் 

வண்ணங்கள் 

கிடையாது!

தனக்கு யாதுமான  

பெண்ணிற்கு 

யாதுமாகி நிற்கும் 

காதலனின் 

வண்ணம் சொல்லும் 

காதல் கதை!

மனமார்ந்த பாராட்டுக்களும்,

வாழ்த்துக்களும் மா💐💐💐💐💐💐

 

ப்ரியமுடன்,

நித்திலா🙂

 

இவங்க விமர்சனம் கவிதை மழையில நனைந்ததாக எண்ணினேன்.

 


   
ReplyQuote