Skip to content
கௌசல்யா முத்துவேல் ...
 
Share:
Notifications
Clear all

கௌசல்யா முத்துவேல் review for Oh my butterfly

1 Posts
1 Users
0 Reactions
196 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 515
Member Admin
Topic starter
 

விமர்சனம் வழங்கியவர் : கௌசல்யா முத்துவேல் (#Gowsireviews )
கதையின் பெயர் : ஓ மை பட்டர்பிளை-Praveena Thangaraj

சுவாரஸ்யமான கதை!!!!.. காதல், குடும்பம், நட்பு, ஆக்ஷன், அமைதி, என அனைத்தும் இருக்கும் அருமையான கதை!!!.. ஆரம்பமே போராட்டம் தான்!!!.. யாருக்கு?!!!.. எதனால்??!!.. ஒரு கார்ப்பரேட் கிரிமினலை எதிர்க்கும் சாதாரண விவசாயி!!!. யாருக்கு வெற்றி?!!!.. எப்படி!!!! என பல கேள்விகளுக்கு தனக்கே உரிய அட்டகாசமான எழுத்து நடையில் பதில்களை அருமையாக கொடுத்துள்ளார் எழுத்தாளர்!!!... பெண்னாயினும் இக்கட்டான சூழ்நிலையில் தைரியமாக செயல்பட்ட அவளின் தைரியமும், வேகம் மட்டுமில்லாத அவளின் விவேகம் மனதை கவர்ந்தது!!!... தங்கை, தாயிற்கு நடந்த கொடுமைகள் கண்கலங்க வைத்தது!!!.. நடைமுறையில் நடக்கும் பிரச்சினையையும், அதனால் பாதிக்கப்படுபவர்களின் உணர்வுகளையும் இயல்பான எழுத்து நடையில் கூறியது அருமை!!!.. பெண்வளுக்கு கிடைத்த பாதுகாப்பும், ஆறுதலும், அன்பும் அனைவருக்கும் கிடைப்பதில்லை என்பது கசப்பான உண்மை!!!.. இரயில் சி வேகம் பிரமிக்க வைத்தது!!!.. தொடர்ந்த நட்பு உறவானது ரசிக்க வைத்தது!!!.. அண்ணன் வாழ்க்கைக்காக போராடிய தம்பி, நம்பிக்கையோடு அமைதி காத்த தங்கை இவர்களின் சகேதர பாசம் வேர லெவல்!!!.. நண்பனின் மௌனத்தையும் புரிந்து அவன் மனம் போல் வாழ்க்கை அமைத்து கொடுத்த நட்பு மனதை கவர்ந்தது!!!.. விட்டுக்கொடுப்பதிலும் விவஸ்த்தை வேண்டும் என உணர வைத்ததும் மிகவும் பிடித்தது!!.. பிள்ளைகளின் மனம் புரிந்து நடந்த பெற்றோர்களும் அழகு!!!. அனைவரையும் தாண்டி மனம் கவர்ந்த கதாப்பாத்திரம் ஜானி🤩!!!.. அவனும் அன்பில் யாருக்கும் சளைத்தவனில்லை!!!.. ஒவ்வொருவரின் உணர்வுகளையும், உறவுகளையும் சொன்ன விதம் அருமை!!!.. அனைத்தையும் ரசிக்கக்கூடிய அழகான கதை!!!.. வாழ்த்துக்கள் அக்கா💖

 

 
Posted : June 18, 2024 12:48 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved