Skip to content

Jeyalakshmi karthik review for என்னிரு உள்ளங்கை தாங்கும்

1 Posts
1 Users
0 Reactions
179 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 515
Member Admin
Topic starter
 

#jk_reviewz

விமர்சனம் வழங்கியவர்: ஜெயலட்சுமி கார்த்திக்(ரைட்டர்)

நாவல் பெயர் : என்னிரு உள்ளங்கை தாங்கும்

ஆசிரியர் : பிரவீணா தங்கராஜ் 

அவங்க எழுத்தில் நான் வாசிக்கும் எத்தனாவது கதைன்னு இன்னும் நான் கணக்கு பார்க்கல. நேரா கதை வாசித்த அனுபவத்துக்கு போய்டுவோம்.

என்னிரு உள்ளங்கை தாங்கும்.. பெயரைப் பார்த்ததும் சும்மா காதலை அள்ளி வழங்கி லவ் ஸ்டோரி தான் கொடுத்திருப்பாங்கன்னு போனேன். நோ.. இந்த முறையும் குடும்பம்,சஸ்பென்ஸ், சமூக அக்கறைன்னு பிரவீணா ஆன் டிராக்.

தெளிவான அழகான தைரியமான துணிச்சலான பத்திரிகையாளர் நிறைநிலவன்.. பேர் செமயா இருக்கு.. 

அமைதியான சற்றே நிறம் குறைந்த அழகி பிரநிதி. நல்ல புரிதல், சமத்து பொண்ணு.

பிரநிதியின் நிறத்தை காரணம் காட்டி ஒதுங்கும் மாப்பிள்ளை வீடுகளுக்கு மத்தியில் பார்க்காமலே திருமணம் செய்யும் நிலவன். அன்பான மாமியாரான ரோகிணி.

துடிப்பும் துள்ளலுமான கங்கனா, அவளை காதல் புரியும் ரவீஷ். இடையில் ஏற்படும் ஷிவானியின் கொலை, சாத்விகாவின் மீட்பு என்று கதை பரபரப்பாகிறது.

அதன் பின் நிலவனின் செயல்கள், நிலவனுக்கும் பிரநிதிக்குமான புரிதல்கள் என்று கதை அழகாக நகர்ந்து, அவினாஷின் காதல், அதற்கு சாத்விகாவின் நிலைப்பாடு என்று வேகமான நடையில் அழகாக தந்திருக்கிறார். அவினாஷின் தாயின் குண நலனில் இன்றைய பல பெண்களின் போட்டி மனப்பான்மையை அழகாக படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்.

நிறைவை நிறைவாய் நிலவன், பிரநிதி காதலோடும், புரிதலோடும் முடித்து நிலவன் தன் இரு உள்ளங்கைக்குள் பிரநிதியை தாங்கும் காரணம் கூறி முடித்திருக்கிறார்.

இயல்பான இல்லற வாழ்க்கைக்குள் அவனின் பணியால் ஏற்படும் குழப்பங்கள், கூடவே பிரநிதியின் நிறக்குறைபாடை பெரிதாகக் கருதி அவளே வருந்துவது, அதை நிலவன் அழகாக விலகுவது என்று தன்மையாகவும், சமூகத்தில் நடக்கும் சில வக்கர எண்ணங்கள் கொண்ட மனிதர்களையும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனையையும் தன்  வேகமான எழுத்து நடையில் கூறியிருக்கிறார்.

இன்னும் நிதானமான நடையில் விரித்து எழுதினால் சிறப்பிலும் சிறப்பாய் அமையும். இது தோழியாய் என் பார்வை அவ்வளவே.

மேலும் பல படைப்புகள் வழங்க என் வாழ்த்துக்கள் டார்லிங்..

புத்தகமாக

வாங்க அணுக வேண்டிய எண்👇

 

 
Posted : June 18, 2024 12:50 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved