கௌசல்யா முத்துவேல் review for முத்தமிட்டு சுவடுபதி ஆலியே
#Gowsireviews
Gowsalya Muthuvel
முத்தமிட்டு சுவடுபதி ஆலியே
பிரவீணா தங்கராஜ்
அருமையான பல திருப்பங்கள் நிறைந்த குடும்பக் காதல் கதை!!!.. எதிர்பாரா மோதலில் தொடங்கும் கதை பல எதிர்பாரா மோதல்களோடு தொடர்கிறது!!!... காதல் வந்தாலே களவாணித்தனங்களும் வந்துவிடும் என்பது போல் பல களவாணித்தனங்கள் செய்து காதல் கொண்டவளை கைப்பிடிக்கிறான் அவன் அவளின் கோபத்தோடு!!!... அவளின் கோவம் எதனால்??!!!.. அவளுக்கே தெரியாமல் அவளை சுற்றி உள்ள மர்மங்கள் என்ன??!!!.. பதில் அனைத்தும் கதையில் அட்டகாசமான விதத்தில்!!!.. ஒரு ட்விஸ்டாய் பதில் தொன்ன விதமும், கதை போக்கும் அருமை!!!.. காதலியை சமாதானப்படுத்தியது அருமை!!!.. சகோதரர்கள் மீதான அன்பை வெளிப்படுத்திய ஒவ்வொரு விதமும் ரொம்ப பிடித்தது கா!!!.. பாசமில்லை என்று நினைத்த ஒவ்வொரு செயலுக்கு பின்னும் இருந்த அன்பு பிரமிக்க வைத்தது!!!.. சிறியவன் மீதான இருவரின் உரிமை போராட்டமும் வேர லெவல்!!!.. எத்துனை பரிசுத்தமான அன்பு!!!.. மருத்துவமனை காட்சிகள் அத்துனை அழகு!!!.. நேர்த்தியான காட்சியமைப்புகள்!!!.. நிறைவான குடும்பமாய் மாற்றிய விதம் அசத்தல்!!!.. ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு விதமான அழகு!!!.. கடைசி அத்தியாயம் ரொம்ப ரொம்ப பிடித்தது!!!.. ஒவ்வொருவரின் உணர்வுகளையும், மனநிலையையும் சொல்லிய விதம் கதையின் தனி அழகு!!!.. மொத்தத்தில் அருமையான, நிறைவான
கதை💖
- 130 Forums
- 2,083 Topics
- 2,351 Posts
- 6 Online
- 978 Members