Skip to content
புவனாசந்திரசேகர் ரி...
 
Share:
Notifications
Clear all

புவனாசந்திரசேகர் ரிவ்யூ - ஓ மை பட்டர்பிளை

1 Posts
1 Users
0 Reactions
278 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 561
Member Admin
Topic starter
 

கதை பெயர் : ஓ மை பட்டர்ஃப்ளை

விமர்சனம் வழங்கியவர்: புவனா சந்திர சேகரன் (ரைட்டர்)

ஓ மை பட்டர்பிளை

ஆசிரியர்: பிரவீணா தங்கராஜ்.

அமர்க்களமான ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படம் பார்த்த திருப்தி.‌ பிரவீணாவின் கற்பனைக்கதை என் கண் முன்னே ஒரு திரைப்படமாகத் தான் விரிந்தது. 

ஆர்கலி, ஆருத்ரா, வித்யுத், ஆத்விக் அழகழகாகப் பாத்திரங்களுக்குப் பெயர் சூட்டியிருப்பது மகிழ்ச்சி தந்தது.

இரட்டையர்களான ஆர்கலி, ஆருத்ராவின் அழகான குடும்பம் வில்லன்களான திருநாவுக்கரசு, தன்வீரால் சீரழிக்கப் படுவது தான் கதை.

தில்லியில் வில்லனிடம் இருந்து ஆர்கலி தப்பி ஓடி வரும் போது ஆரம்பிக்கும் கதை விறுவிறுப்பாக ஓடிக் கொண்டேயிருக்கிறது. எங்கேயும் விறுவிறுப்பு குறையவே இல்லை. 

வாயில்லா ஜீவனான ஜானி கதையில் முக்கிய கதாபாத்திரமாக ஒன்றி விடுகிறது. 

ஆர்கலி, வித்யுத்தைக் காதலித்தாலும் காதலை மனதில் ஒளித்து வைத்து ஆருத்ராவை வித்யுத்துடன் சேர்த்து வைக்க ஏன் ஆசைப்படுகிறாள் என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

மஹதி நல்லதொரு தோழியாகக் கதை முழுவதும் பயணித்து இறுதியில் மனம் விரும்பியவனைக் கைப்பிடிக்கிறாள். அது யார் என்று படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வித்யுத்தின் பட்டர்ஃப்ளையான ஆர்கலி அவனுக்கு யாதுமானவளாக மாறுகிறாளா என்பதையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். 

நல்லதொரு கதையைத் தந்த ஆசிரியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.‌

புவனா சந்திரசேகரன்,

24/02/2021.

 


 
Posted : June 18, 2024 1:05 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved