Jeyalakshmi karthik review for oh my butterfly
#jk_reviewz
விமர்சனம் வழங்கியவர்: ஜெயலட்சுமி கார்த்திக்(ரைட்டர்)
Story name: ஓ மை பட்டர்ப்பிளை
Writer : பிரவீணா தங்கராஜ்
எவ்வளவு அழகான தலைப்பு.. ஓ மை பட்டர்ப்பிளை.. உண்மை தான். அவனுடைய பட்டாம்பூச்சியாக பறக்க அவளுக்கு ஆசை இருந்தும் அவள் தங்கைக்காய் தன் சிறகுகளை மறைத்த அழகான பட்டர்ப்பிளை தான் ஆர்கலி.
வித்யுத், என்ன மாதிரி பாத்திரம்.. அன்பு, பாசம், திறமை என்று தேர்ந்த தெளிவான பாத்திரப்படைப்பு. அவன் திருமணத்திற்கு சம்மதித்தபோது எனக்கெல்லாம் இதயமே நின்று விட்டது. நீயா டா என்று. ஆனால் அவனின் அழகான கண்ணாமூச்சி ஆட்டத்தால் அவன் காதல் மட்டுமின்றி அனைவரும் மகிழ்ச்சி அடையும் விதமான முடிவு ஏற்பட்டது சிறப்பு.
முக்கியமா நாம கேஸுக்கு வருவோம்.
வேகமான ஒரு ரயில் பயணம் மேற்கொண்ட உணர்வு தான் கதை முழுவதும். முதல் அத்தியாயத்தில் தப்பித்து ஓடிய ஆர்கலி கடைசி வரை பிரச்சனைகளை சமாளித்து வந்த விதம் அருமை.
ஆத்விக், ஆருத்ரா, சரண், மஹதி, வம்சி, வதனி, செல்வம், விநாயகம் என்று ஒவ்வொரு பாத்திரமும் சிறப்பு.
தன்வீர், திருநாவுக்கரசு போன்ற கார்ப்பரேட் ஆட்களின் நடவடிக்கை சில இடங்களில் பயம் கொள்ளும் விதமாகவும், சில இடங்களில் தப்பு செய்யறவன் விடுற தடயம் அவனுக்கே தெரியாது.. மாட்டினியா என்று கைத்தட்டி மகிழ வைத்தது.
இன்னும் நிறைய சொல்லணும் போல இருக்கு. ஆனா அது கதையை சொல்ற மாதிரி ஆகிடும்.
நிறைய கருத்துக்களை ஆங்காங்கே தெளித்து, அழகாக கதை படைத்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
எழுத்துப்பிழை, மற்றும் வாக்கிய அமைப்பில் இன்னும் கவனம் செலுத்தினால் நன்று. கதையை வார்த்தை எண்ணிக்கைக்காக சுருக்கி எழுதி இருக்கிறீர்கள் என்பது வாசிக்கும்
போது உணர முடிந்தது .
- 130 Forums
- 2,083 Topics
- 2,351 Posts
- 4 Online
- 978 Members