Skip to content

Selvarani review for இமயனே இதயனே

1 Posts
1 Users
0 Reactions
394 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 561
Member Admin
Topic starter
 

விமர்சனம் வழங்கியவர்: Selvarani

பிரவீணா தங்கராஜின்-இமயனே இதயனே.

 

    இமயன் ஒரு இதய மருத்துவன். திடீரென காணாமல் போகிறான். அவன் தங்கை இனியாவும் அவள் கணவன் அரவிந்தனும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

எங்கோ ஒரு கடற்கரையில் சாமியார் மாதிரி இமயன் இருக்கும் நேரம் ஸ்ருதி தன் கணவனும் அவன் நண்பனும் அவளை பலவந்தப்படுத்த தப்பித்து இமயனிடம் அடைக்கலமாகிறாள். அவளுக்காக ஊர் திரும்புகிறான். இனியாவிடம் ஒப்படைத்துவிட்டு திரும்ப நினைக்கும்போது இனியா ஸ்ருதியிடம் அவனை தடுத்து நிறுத்த சொல்கிறாள். இனியா ஸ்ருதியின் நட்பு, இமயனின் வாழ்வில் நடந்த திருமணம், மாயாவின் இழப்பு இப்படி எல்லா சம்பவங்களுக்கும் விடை ஒரு டயரியில் கிடைக்கிறது.

கதையில் எனக்கு பிடித்தது ஒரு ஆணின் இரண்டாம் திருமணம் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படும் நம் சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு நடக்கும்போது ஏன் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை?எத்தனை எத்தனை கருத்துகள்?அதை இந்தக்கதை உடைப்பது நல்லா இருக்கு.

 


 
Posted : June 18, 2024 1:10 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved