Svs sangu review for காலமும் கடந்து போவோம் வா
எப்பவும் என் கதையை ஆஹா ஓஹோனு வர்ற விமர்சனங்களை பார்த்திருப்பிங்க. இங்க ஒரு ரைட்டர்? ஆர் வாசகர் யாருனு தெரியலை. பிரதிலிபி குழுவுல என் கதைக்கு நெகட்டிவ் விமர்சனம் அளித்துள்ளார்.
எனக்கு பொங்கல் வச்சதால நான் பொங்கி எழலாம் மாட்டேன். ரசனை என்பது வெவ்வேறு மனிதர்களின் ரசனையை பொறுத்தது.
இந்த கதை வாசித்தவங்களுக்கு புரியும் இருந்தாலும் விமர்சனம் என்று முகநூல்ல வந்ததை தொகுத்து வதிவிடும் என் எண்ணத்தில் பாஸிடிவ் விமர்சனம் நெகட்டிவ் விமர்சனம் என்ற பாகுபாடு இல்லை.
பிடிக்காதவங்களும் இருக்காங்கனு தெரிய வச்ச போஸ்ட. எல்லா கதையும் எல்லாருக்கும் பிடிக்கனும்னு சட்டமில்லை.
சரி வாங்க எனக்கு செய்த பொங்கலை படிங்க. படித்து விட்டு ஆமோதிக்கலாம். இல்லை உங்கள் கருத்தையும் பகிரலாம்
விமர்சனம் வழங்கியவர்: Svs Sangu
காலமும் கடந்து போவோம் வா..
ஆசிரியர்: பிரவீணா தங்கராஜ்
விஞ்ஞானம் சார்ந்த கதைகள் எழுதும் போது அதைப் பற்றிய அடிப்படை விஷயங்கள் கதையில் இருப்பது முக்கியம்..
சும்மா டைம்ட்ராவல்னு சொல்லிட்டா போதுமா.. ஹீரோ சைன்ஸ் படிச்சுருக்கார்.. சைன்ஸ் என்பது டிகிரி இல்ல.. அது ஒரு பாடம்.. சைன்ஸ்ல அவர் என்ன படிச்சார்.. ? சைண்டிஸ்ட்னா என்ன சைண்டிஸ்ட் அவரு.. குவாண்டம் பிசிக்ஸ் படிச்சவரா..
நீங்க என்ன படிச்சுருக்கீங்க..
நான் சைன்ஸ் படிச்சுருக்கேன்.. டைம் ட்ராவல் பத்தி ஆராய்ச்சி பண்றேன்..
அவரும் ஹீரோயினும் மோட்டார் ரூம் உள்ள போய் என்ன பண்றாங்க.. டைம் ட்ராவல் பண்றாங்க.. எப்படி.. மின்சாரத்தை வெச்சு..
எப்படி காலப்பயணம் பண்றார்.. என்ன டிவைஸ் கண்டுபிடிச்சார்.. எதுவுமே இல்லை..
இதெல்லாம் விட பெரிய கூத்து யாருன்னே தெரியாத ஒருத்தனுக்கு பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கும் ஒரு அப்பா.. எனக்கெல்லாம் இப்படி ஒரு ஆள் கிடைக்கலயே.. இருந்திருந்தா என்னிக்கோ கல்யாணாம் பண்ணிருப்பேன்.. அடுத்து முதல் ராத்திரில நான் சட்டப்படி கணவன் அந்த ரூம் உள்ள என்ன வேணா பண்ணலாம் பொண்டாட்டியைன்னு மனசுக்குள்ள சொல்றது..
படிச்சவன் அதுவும் ஒரு சைன்டிஸ்ட் இப்படியா ஒரு பிற்போக்குத்தனமா யோசிப்பான்..
10 அத்தியாயம் படிச்சும் கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் கதைல அறிவியலே கண்ணுல படலையேன்னு படிக்கும்போது கதறிட்டு இருந்தா திடீர்னு ஓலைச்சுவடியை படிச்சா டைம் ட்ராவல் பண்ணலாம்னு ஒரு இடி வந்து மண்டைல இறங்குது..
அந்த ஓலைச்சுவடியை சித்தர் நிகழ்காலத்துல ஹீரோவை பார்த்தப்போவே கொடுத்து இருக்கலாமே.. இவங்க ஏன் மின்சாரத்தையும் கல்லையும் தேடணும்...
சுஜாதா நல்லவேளை செத்துப் போய்ட்டாரு.. மீண்டும் பிறந்து வந்து இதை படிச்சா இன்னொரு வாட்டி சாவாரு.. தயவு செஞ்சு இது மாதிரி கதைகள் எழுதுவதை தவிர்த்து விஞ்ஞானத்தை காப்பாற்றவும்..
இதுல இந்த கதைக்கு செகண்ட் பார்ட் வேற போடப் போறதா சொல்லி அதுவும் 2 அத்தியாயம் வந்துடுச்சு.. தயவு செஞ்சு இதுலயாவது டைம் ட்ராவல் பத்தி எழுதினா கொஞ்சமாவது அறிவியலை படிச்சுட்டு எழுதவும்..
என்னோட 3 மணி நேரம் போச்சு.. டைம் ட்ராவல் பண்ணி இந்த கதையை படிக்காதேன்னு என் கிட்ட நானே சொல்ல நான் ஒரு டைம்மெஷின் கண்டுபிடிக்கணும் போல..
நன்றி வணக்கம் svs sangu.
முகநூல்ல வந்த முதல் நெகட்டிவ் விமர்சனம். நன்றி சகோ. 😊
எனது விளக்கம் : படிச்சவங்களுக்கு தெரியும் இதுல நிறைய நல்ல விஷயங்கள் பகிரப்பட்டதுனு. ஆனா எதுவும் அவர் கண்ணுக்கு தெரியலை. இட்ஸ் ஓகே. பிடித்தம் என்பது ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கண்ணோட்டம்.
இந்த நேற்று இன்று நாளை படம் பார்த்தவங்களுக்கு இந்த கதை பிடிக்கும். ஏன்னா நான் அது போன்றதொரு முயற்சியா கொடுத்தேன்னு நம்பறேன்.
- 130 Forums
- 2,083 Topics
- 2,351 Posts
- 2 Online
- 978 Members