: jen jen jero jesusreview for 90's பையன் 2k பொண்ணு
கதை : 90's பையன் 2k பொண்ணு
விமர்சனம் வழங்கியவர்: jen jen jero jesus Jen Jen Jero Jesus
கலாட்டாக் கதையாக மகிழ்ச்சியாகச் தொடங்கிய கதை முழுவதும் குடும்பத்தை விட்டுப் பிரியாமல், கடைசி வரை அப்படியே குடும்பத்தோடு கொண்டு போனது மிக அருமை அக்கா.
கதையின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அப்படியே எங்கள் வாழ்க்கையோடு ஒட்டிப் போகிறவர்கள்.
ஒவ்வொருவரும் ஒரு குணம். கவிதா, சரிகா, சந்தியா போல சகோதரிகளும் மச்சினிகளும் அப்படியே இருக்கிறார்கள். அப்பப்போ கோபம் சண்டை ஆனால் அதைவிட பாசம். ஷிவாலிக்கு கிடைத்த மாமியார், மாமனார் சூப்பர்.
வெள்ளிக் கிழமை முட்டைத்தோசை கேட்டதும் மறுக்காமல் கொடுத்தார். அந்தப் பொறுமை ஷிவாலியை அப்படியே மாத்திடுது. ஐயையோ இன்று வெள்ளியாச்சே அத்தை ஒன்றுமே சொல்லலையே என்று அடுத்த தடவை ஞாபகம் வைத்து செய்கிறாள். இதுவே சரணியா சண்டை போட்டிருந்தால் அதுவே ஒரு பிரச்சனையாகி அடுத்தடுத்த பிரச்சனைகளுக்கு வழி ஏற்படுத்தியிருக்கும்.
ரிஷ மற்றும் தாய் சரண்யாவின் பாசம் அப்பப்போ கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கும்.
ரிஷி அக்கா தங்கையை தாங்கும் போது, அப்படியே எங்கள் அண்ணா ஞாபகம். அப்பாவின் மேல் இருக்கும் பாசம், பாசத்துடன் சேர்ந்த கண்டிப்பு அரவணைக்கும் குணம் அப்படியே அழகு தான்.
ஷிவாலியின் அம்மா அப்பா இவர்களைப் போலவும் நிறைய நம் வாழ்வில் அன்றாடம் காணும் மனிதர்களே. காதல் என்பதால் வெறுப்பு இருந்தாலும் மகளின் காதலன் மகள்மேல் வைத்திருக்கும் காதலுடன் பொறுப்பையும் சரிவரச் செய்தால் யாருக்குத் தான் காதல் பிடிக்காது.
ஷிவாலி 2k யா இருந்தாலும் பொறாமை இல்லாதது மற்றவர்கள் வாழ்வில் தலையிடாதது தாத்தா பாட்டியை நேசிப்பது ரிஷியின் அன்பைப் புரிந்து ஏழு ஜென்மத்திற்கும் அவன் தான் வேண்டும் என்பது அழகுதான்.
தாத்தா பாட்டி அப்படியே எம்வீடு தான். இதிலே ஷிவாலியின் குணத்திற்கு ரிஷி தான் சமாளித்துப் போவான் என்ற தாத்தா பாட்டியின் கருத்து மிகவும் அருமை. கடைசியில் ஷிவாலிக்கு கான்சர் என்றதும் கண்ணீர் மழை தான். ஆனால் அதற்காகத் தந்த விளக்கம் சூப்பர். இப்போதைய உணவுப் பழக்கங்கள் அப்படித்தான் இருக்கின்றது. எப்பபாரு இந்தச் சின்ன சின்ன வாண்டுகள் எல்லாம் சிப்ஸ் சிப்ஸ் என்று ஒரே அதைக் கொறித்துக் கொண்டே இருப்பார்கள். வீட்டுச் சாப்பாடு என்றால் பிடிக்காமல் போய்விட்டது. அதில் இருக்கும் ருசியும் சத்தும் பாஸ்ட் ஃபூட்டில் கிடைக்குமா என்ன? அதனால் ஏற்படும் விளைவுகள் எக்கச்சக்கம் என்பதை வந்தபிறகே உணர்கிறார்கள். ஷிவாலிக்காக ரிஷி எல்லாவற்றையும் இழந்தாலும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. அத்துடன் அவனது முழுக்குடும்பமும் பக்கபலமாக இருந்தது. இப்படி வாழ்வு தான் நிறைவு தரும். ஷிவாலியும் அதை அப்படியே உணர்ந்து குடும்பத்துடன் ஒன்றித்து ரிஷிவா என்ற குழந்தைக்கும் அதே அன்புத் தாயாகினாள்.
குடும்பம் காதல் கலாட்டா காமடி எல்லாம் இருந்த கலவை சூப்பர் சிஸ். வாழ்த்துகளும் நன்றிகளும் 👏👏👏👏💐
💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
- 130 Forums
- 2,074 Topics
- 2,342 Posts
- 1 Online
- 975 Members