Latha srithar mam review for 90s paiyan 2k ponnu

கருத்து பகுதியில் அளித்த விமர்சனம்.
நன்றி லதா மேம்.
நல்ல கலகலப்பாக தொடங்கி முடிவில் கொஞ்சம் மனதை பாரமாக்கி கடைசியில் நல்ல சிந்தனையோடு நல்ல கருத்தை சொன்னீர்கள். பாராட்டுகள் பிரவீணா. சரியான உணவு பழக்கத்தை இன்றைய தலைமுறையினர் நிச்சயம் கடை பிடிக்க வேண்டும். இல்லையென்றால் பின்னாளில் அவதிதான். இந்த காலத்து ஜங்க் புட்ஸ் எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பதை இக்கதையை படித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷி வேந்தன் உண்மையில் ஆண் தேவதை தான். தேவன் என்று சொல்ல வேண்டுமா? எப்படி சொன்னாலும் ரிஷி great ஹீரோ.
ஷிவாலி ஆரம்பத்தில் திமிர், குறும்பு, பிடிவாதம் இப்படி இருந்தாலும், ருஷியை புரிந்து கொண்டு கடைசியில் அவனை உணர்கிறாள்.
ஒவ்வொரு கதாாத்திரமும் அருமை. அதுவும் ரிஷியின் தாய் அருமை. மருமகளை அரவணைக்கும் பண்பு இப்படி சொல்லிட்டே போகலாம்.
ஷிவாலியின் தாத்தா பாட்டி மாதிரி எல்லோருக்கும் அமைந்தால் வாழக்கை மகிழ்ச்சியாகவே இருக்கும்.
ரிஷி தான் எவ்வளவு பொறுப்பு, அன்பு, காதல். அவனது பொறுமை சாலிதனத்தால் தான் ஷிவாலி மாறியது. அவன் பாசத்தால் ஷிவாலி மட்டுமில்ல படிக்கும் நம்மையும் யில்ல கட்டி போட்டு விட்டான்.
காதல், காமெடி, சோகம், கொஞ்சம் கண்ணீர் மொத்தம் கலந்த கலவை தான் 90's பையன் 2k பொண்ணு. அருமையான கதையை கொடுத்த ஆசிரியருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்...
இதுவரை படிக்காதவங்க படிக்கத் தொடங்கலாம். இல்லைன்னா நீங்க தான் ஒரு நல்ல கதையை மிஸ் பண்ணுவீங்க.
அடுத்த கதையோடு வாருங்கள் பிரவீணா. காத்திருக்கிறோம்.
Leave a reply
-
Kodhaihariram prasad review for உயிரில் உறைந்தவள் நீயடி6 months ago
-
Kokila Balraj review for மௌனமே வேதமா& பிரம்மனின் கிறுக்கல்கள்6 months ago
-
Sharnyah Lingeswaran review for பிரம்மனின் கிறுக்கல் & துஷ்யந்த6 months ago
-
பூ பூக்கும் ஓசை - Kalaikarthi1 year ago
-
பூ பூக்கும் ஓசை - Chitra Ganesan1 year ago
- 142 Forums
- 2,351 Topics
- 2,724 Posts
- 2 Online
- 1,871 Members