Jenitha d krish review for காதல் மந்திரம் சொல்வாயோ
விமர்சனம் வழங்கியவர்: Jenitha D Krish
நாவல் பெயர்: காதல் மந்திரம் சொல்வாயோ
அருமையான கதை... ஸ்டார்டிங்ல கஜினி படத்துல வர்ற அசின் மாதிரி கருணையுள்ளதோட சேர்ந்த கராரான ஹீரோயின்... பர்ஸ்ட் சீன்லயே நம்ம ஹேண்ட்சம் ஹீரோ எண்ட்ரி ஆகி கீழ விழப்போன ஹீரோயினை இடைவளைத்து பிடிக்குறாரு... ஆஹான் பர்ஸ்ட் சீன்லயை ஹனிமூனுக்கு பாரீன் போய்ட்டு வர்றதா கனவு காணுவாங்கன்னு நினைச்சா அது தான் தப்பு...
ஹீரோ ஹீரோயினை பேலன்ஸ் பண்ணி விட்டுட்டு கிளம்பி போறாரு... அரைநிமிஷ கேப்புல அவரு ரசிச்சு பார்த்ததெல்லாம் வேற கதை... இங்க இப்படின்னா முகில்னு ஒரு கேரக்டர்...
முகில்னு சொன்னது வாயெல்லாம் பல்லாகி போச்சுது😁😁😁 இவன் தான் ஹீரோ எனக்கு... அப்பாப்பா.... இவன மாதிரி ஒருத்தனை காட்டுனா அவங்களுக்கு லைஃப் டைம் செட்டில்ட்.😎😎
இவ்ளோ ஒரு நல்லவனா... வேலையில அப்படி ஒரு பெர்பெக்ட் வீட்ல அப்படி ஒரு ரெஸ்பெக்ட்... தங்கச்சி கிட்ட அப்படி ஒரு பாசபக்கெட்.... நீதி நேர்மை நியாயம்னு பேசுனாலும் எறும்புக்கு கூட துரோகம் நினைக்காத ஒரு நல்ல மனசு. இப்படி இருந்த முகிலுக்கு மூளையில வியாதி😥😥
வர்மா பார்த்த பொண்ணுக்கும் முகிலோட தங்கச்சிக்கும் என்ன சம்பந்தம்... அட முகிலுக்கும் வர்மாக்குமே என்ன சம்பந்தம்... காதல்ல ஸ்டாராங்கா அடம் பிடிக்குற ஒருத்தர்... லவ்வை ஒருதலையா பண்ணுற சைலண்ட் லவ்வர்... வீட்ல பேசிக்கோங்கன்னு சொல்ற லவ்வர்... அப்பிடியெல்லாம் லவ் பண்ண முடியாதுன்னு சொல்ற லவ்வர்...
இந்த நாலு பேரோட லைஃப்ல அவங்களுக்கு அவங்களே ஆப்பு வச்சது பத்தாதுன்னு ரைட்டரே விதின்னு சொல்லிட்டு ஒரு ஆளை உள்ள இறக்கி நாலு பக்கமா பிச்சு போட்டுட்டு போயிட்டாங்க😭😭
அப்புறம் எப்படி சேருறாங்கன்றது தான் கதை... வர்மாவோட பிடிவாதம் கோபம் முரட்டு தனம் குற்ற உணர்ச்சியை போக்க வர்ற வர்மா... காயமாகுமா காயமாறுமா... முகிலுக்கு விபத்துலயே ஆப்பை ரெடி பண்ணி அனுப்பி வச்ச ரைட்டர் அதுனால அவன் பட்ட அவமானம்... பாசம் நேசம் கலந்து சீன்ஸ் எல்லாம் வேற லெவல்.
கமெண்ட் பாக்ஸ்ல பப்ளிக்கா மிரட்டுற அளவுக்கு ரைட்டரை தொறத்திட்டேன் கிளைமாக்ஸ் வரை🤕 என்னா ஓட்டம்.
விதியோடு விளையாடுற காதல் கதை
-
பூ பூக்கும் ஓசை - Kalaikarthi7 months ago
-
பூ பூக்கும் ஓசை - Chitra Ganesan7 months ago
-
பூ பூக்கும் ஓசை-கௌசல்யா முத்துவேல்7 months ago
-
பூ பூக்கும் ஓசை - ஜெயலட்சுமி கார்த்திக் ரிவ்யூ7 months ago
-
பூ பூக்கும் ஓசை -Selvarani review7 months ago
- 130 Forums
- 1,899 Topics
- 2,159 Posts
- 17 Online
- 867 Members