Skip to content

Chitrasaraswathi review for மடவரல் மனவோலை

1 Posts
1 Users
0 Reactions
203 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 520
Member Admin
Topic starter
 

கதை பெயர்:  மடவரல் மனவோலை

விமர்சனம் வழங்கியவர்: Chitrasaraswathi 

பிரவீணா தங்கராஜின் மடவரல் மனவோலை எனது பார்வையில்.

தலைப்பின் படி இது ஒரு பெண்ணின் வாழ்க்கை குறிப்புகள்தான் கதை. நித்திலா ஐந்து வயதில் இருக்கும் பொழுது தாய் மற்றும் தந்தை இருவரின் மணவிலக்கினால் வேறு வாழ்க்கை முறைக்கு செலுத்தப்பட்ட ஒரு பெண் திருமணத்திற்கு முன் அவள் எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை பற்றிய கதை. 

இந்தக் கதையின் முக்கிய கதாப்பாத்திரங்கள் உண்மை என்று சொல்லியிருக்கிறார். 

ஐந்து வயதிலிருந்து நித்திலா அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்ட பாடங்களும் அந்த அனுபவத்தை விட காலம் பல புதிய பாடங்களையும் கற்றுத் தருகிறது.

பாலியல் ரீதியான தொந்தரவுகளை அனுபவிக்கும் குழந்தைகள் ஒற்றை பெற்றோரின் குழந்தைகள் என்பதும் வருத்தம் தரக் கூடியது. நித்திலாவின் சுயக்குறிப்பு என்பதால் அவளின் அண்ணன் ஜீவா எத்தகைய சூழ்நிலைகளை எதிர் கொள்ள நேரிட்டது என்ற விவரங்கள் கதையில் அதிகமில்லை. 

கணவன் மனைவி பிரியலாம்.  ஆனால் பெற்றோர் பிரிந்தால் அந்தக் குழந்தைகளின் மனம் எத்தனை பாதிப்பு அடையும் என்பதையும் அந்த சூழ்நிலையிலும் நித்திலா தவறான வழியில் செல்லாமல் நேர்மறையாக வாழ்வை எதிர் கொள்வது பலருக்கு உந்துதலாகவும் முன்னுதாரணமாகவும் இருப்பது நல்ல செயல்.

இந்தக் கதையில் வரும் அகல்யா

பாவம்தான். 

 


 
Posted : June 19, 2024 6:52 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved