Skip to content

Zeenath sabeeha review for ஏறெ(ரெ)டுத்து பாரடா முகிலனே

1 Posts
1 Users
0 Reactions
265 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 520
Member Admin
Topic starter
 

விமர்சனம் வழங்கியவர்: Zeenath sabeeha

    பிரவீணா தங்கராஜ் சிஸ்டர் எழுதிய "ஏறெ(ரெ)டுத்து பாரடா முகிலனே"

மாமன் மகன் வெண்முகிலன்.. அத்தை மகள் நுவலி (வித்தியாசமான பெயர்) அவனுக்கு மட்டும் நுணலு 🥰 

    முகிலன் லட்சத்தில் சம்பாதிக்கும் ஐடி வேலையை விட்டுவிட்டு விவசாயமும் அதில் ஹைட்ரோபோனிக்ஸ் என்ற புதிய முறையையும் செயல்படுத்தி அதில் வெற்றியும் காண்கிறான் 👏👏

ஆனால் ஐடி துறையில் இருக்கும் இவன் அதை விடுத்து விவசாயத்தில் முழுமூச்சாக இறங்குவதற்கான காரணம் என்ன...?

மதிமுகமாக அவன் மனதில் நிறைந்து விட்ட மது யார்? அவளுக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்? என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    இதில் நுவலி இவனை சுற்றி சுற்றி வரும் போது இவனின் மனமும் சிறிது தடுமாறுகிறது.. இப்படி இருக்கையில்  இவனின் முன்னாள் காதலியாக அவனின் ஊருக்கு அவனை கையோடு தன் முகிலாக மாற்றி தன்னோடு அழைத்து செல்ல வேண்டும் என நினைத்து தன் திருமண பத்திரிகையோடு வருகிறாள் ஷிவானி.

 

நுவலியிடம் மாட்டுவானா அல்லது ஷிவானி இடம் மாட்டுவானா முகிலன் என்பது கதையில் 🥰

 

   😀 நுவலி... படபட பட்டாசு துள்ளி ஓடும் மான்தான் இவள் 🥰

மாமனின் மேல் அதிக பாசம் கொண்டிருக்கிறாள் அவனை வம்பு இழுத்துக் கொண்டும் இருக்கிறாள் 😀 படிப்பு தான் சரியாக ஏறவில்லை என்றாலும் கண் பார்த்து கை செய்து விடும் என இவள் கூறுவது அருமை 👏👏 

 

அதே நேரத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் சரியாக புரிந்து கொண்டு தந்தைக்கும் படம் நடத்தும் இடங்கள்  சூப்பர் 👏👏🥰 வேதநாதன் அருமையான கதாபாத்திரம் மகனின் மனதை அறிந்து நடக்கும் ஒரு சூப்பர் தந்தை 👏👏 சித்தாரா வெகுளியான தாய் சந்திரிகா அப்பத்தா என அழகான குடும்பம் 🥰

 

ஐடி வேலையில் ஏசியில் இருப்பதை விட்டு வேர்வையில் நனையும் மகனுக்கு புத்தி சொல்லக்கூடாதா என ஷிவானி கேட்கும்போது அங்கு ஏசி உங்களுக்கு போடவில்லை அந்த கம்ப்யூட்டருக்கு போட்டு வைத்திருக்கிறான் என அப்பத்தா சொல்வது சூப்பரோ சூப்பர் 👏👏👏

 

கிருஷ்ணா கோபக்காரராக இருந்தாலும் நியாயவாதியாக பாசக்காரராக இருக்கிறார் 🥰 ஆரம்பம் மெதுவாக இருந்தாலும் போகப்போக சூடு பிடித்தது கதை 👏🥰

 

மதுரா முகிலனின் நேசம் புரிந்து கொள்ள முடிந்தது 🥰

அருமையான கதை 👏🥰

Good luck dear 🥰

❤️💐

Keep rocking 🌹🥰💐

 


 
Posted : June 19, 2024 6:59 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved