Skip to content

Absareezbeena loganathan review for ஏரெடுத்து பாரடா முகிலனே

1 Posts
1 Users
0 Reactions
89 Views
Site-Admin
(@veenaraj)
Prominent Member
Joined: 12 months ago
Posts: 255
Topic starter  

விமர்சனம் வழங்கியவர் :Absareezbeena loganathan

ஏரெடுத்து பாரடா முகிலனே
ஆசிரியர் : பிரவீணா தங்கராஜ்

நாயகன்  :வெண்முகிலன்
நாயகி  : நுவலி

எப்பொழுதும் மாமனை சுற்றும் மாமன் மகள் நுவலி
ஏரெடுத்து பார்க்காமல் சுத்தும் மாமன் முகிலன்....

நன்கு படித்து
நல்ல வேலையில்
நல்ல சம்பளம் வாங்கி
நண்பர்களுடன் சந்தோசமாக
நன்றாக போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடீரென்று திருப்புமாய்
நண்பனின் கிராமத்திற்கு செல்ல அங்கு தடம் மாறுகிறது முகிலனின் வாழ்க்கை......

தன்னை சுற்றும் நுவலியை   தெரிந்தாலும் முகிலன்
தவிர்க்கும் காரணம் என்னவோ
தனக்குள்ளே மருகி
தள்ளி நின்று நுவலியை
தவிக்க வைத்து விட்டு
தானும் தவித்துக் கொண்டிருக்கும் முகிலன்.....

கம்பெனியில் வேலை செய்து
கை நிறைய சம்பாதித்து
காதலி ஷிவானியுடன் 
காதலனாய் வலம் வந்தவன் கிராமத்திற்கு வந்து
விவசாயத்தில் நுழைந்தது   ஏனோ....

கல்யாணத்தை தவிர்க்க 
கல்லூரிக்கு செல்ல 
காதலுக்காக கல்வியை
கையில் எடுக்கும் நுவலி....
படிப்பு என்றதும் சற்று
மனம் இளகி முகிலன் சொல்லிக் கொடுக்கும் இடம் அருமை......

பேசிப்பேசியே முகிலனை கவுத்து
படிக்காத மேதையாய்
பார்க்கும் விஷயங்களை வைத்து பக்குவமாய் செயல்படும் நுவலி
பாசக்கார பெண்
பிரமிக்க வைக்கிறாள்......

நுவலியை நூணல் என்று அழைப்பது... கடைசியில் அவனே மாட்டிக் கொள்வது....
சைலண்ட் கில்லேர் 🤩🤩🤩🤩
வாயாடி பெண்ணாக இருந்தாலும்
வாழ்க்கையை அழகாக எடுத்துச் சொல்லும் வல்லமை கொண்ட பெண்.......

குடும்பமே மதுவை புரிந்து கொண்டது அருமை....
மது அனைவரையும் ஏற்றுகொண்டு மீண்டு வருவது
அம்மா அப்பா இறப்பை நேரில் பார்க்கும் கொடுமை...
சொந்தங்களை இழந்து
தனியாக நிற்கும் இடம்
கண்கள் கண்ணீரில் கரையும்....

வேலையை விட்டதால்
காதலை இழந்தது
நம்பி ஊருக்குச் சென்ற போது
நண்பன் காதலுக்காக
நண்பர்களை விட்டு ஓடி செல்வது நண்பனின் குடும்பத்தை
தன் குடும்பமாக எண்ணி அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது
மதுராவின் குடும்பத்தையும் அவர்களின் நிலையும் கண்டு உருகுவது
மதுவின் நிலை எண்ணி
மனதுக்குள் வருந்துவது
மீண்டும் அதிலிருந்து
மீண்டு வந்து
விவசாயத்தில் வெற்றி பெற்று வாழ்க்கையிலும் வெற்றி பெற்ற முகிலன்💕 நுவலிl

வாழ்த்துக்கள் சகி.....💐💐💐💐💐

 


   
ReplyQuote