Skip to content

Zeenath sabeeha review for பூ பூக்கும் ஓசை

1 Posts
1 Users
0 Reactions
401 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 520
Member Admin
Topic starter
 

பிரவீணா தங்கராஜ் அவர்கள் எழுதிய "பூ பூக்கும் ஓசை"

சத்திய தேவ்... பூர்ணா..

தேவ் தன் நண்பனின் திருமணத்திற்கு பரிசளிப்பதற்காக பேரரளி பூவை வாங்கிக் கொண்டு பேருந்தில் பயணிக்க.. 

பேருந்தில் அமர்ந்திருந்த பூர்ணாவிடம் அது நசுங்காமல் இருப்பதற்காக கொடுக்க அவளும் காதல் கொண்டு இவன் அதை தன்னிடம் கொடுப்பதாக நினைத்து கோபப்பட.. 

அதற்கு அவனின் விளக்கத்தைக் கேட்டு  புரிந்து கொண்ட நிலையில்...

அவனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் மலரை மறந்து கீழே இறங்கிய இவன் பின்னே அவள் துரத்திச் செல்ல... 

அங்கு திருமண ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸில் மணமகளாக தன் தங்கையை பார்த்து அதிர்ந்து நிற்கும் இவள் தன் நண்பனோடு தன் தங்கைக்கு திருமணம் முடிக்க அனைத்து முயற்சியும் மேற்கொள்ளும் சத்யதேவ்க்கு பளிரென ஒரு அறையை விட்டு தன் வீடு நோக்கி செல்கிறாள்.

சத்யதேவ் கூற வந்த விளக்கத்தை  கேட்காமலேயே துயரத்துடன்..

சத்திய தேவ்.. பூர்ணா தன் தங்கையை திருட்டுத் திருமணம் புரியும் விக்னேஷை அறையாமல் தன்னை அறைந்த கோபத்தில் புது ஊரில்  புதிதாக சேர்ந்த வேலைக்கு சென்ற இடத்தில் அவளை கண்டு அதிர்ந்து நிற்கிறான் தன் டீம் ஹெட்டாக... 😀

இப்படி ஆரம்பமே அதிரடியாக  தொடங்கும் கதை போக போக எண்ணானது என்பதை கதையை  படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

சத்யதேவ் விக்னேஷ் சக்தி பத்ரி என கலகலப்பான நண்பர்கள் பட்டாலும் சூப்பர் 👏👏 தவிர்க்க முடியாத சூழ்நிலையால் ஏற்படும் சில தவறுகளை பேசி புரிய வைத்திருந்தாலே அனைத்தும் சுமூகமாக முடிந்திருக்கும்.. என்பதை நமக்கும் புரிய வைத்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள்👏 நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰

Good luck dear 💐🥰❤️

 


 
Posted : June 19, 2024 7:20 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved