Skip to content

Nithya Mariappan review for பூ பூக்கும் ஓசை

1 Posts
1 Users
0 Reactions
351 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 561
Member Admin
Topic starter
 

விமர்சனம் வழங்கியவர் Nithya Mariappan

கதை : பூ பூக்கும் ஓசை
ஆசிரியர் : பிரவீணா தங்கராஜ்

பூங்கொத்தில் ஆரம்பித்து பூங்கொத்தில் முடிந்த ஃபீல் குட் கதை...

பூர்ணா - ஐ.டியில் பணியாற்றும் தெளிவும் நிமிர்வும் கொண்ட பெண். பெற்றோருக்கு பொறுப்பான மூத்தமகள். தங்கை கலைவாணிக்கு அன்பான தமக்கை.

சத்யதேவ் - நட்பை உயிராக மதிப்பவன். அன்றாட வாழ்வில் நாம் கடந்து போகும் ஆண்களில் இவனும் ஒருவன். குடும்பப்பிரச்சனையால் தந்தையால் ஒதுக்கப்பட்டு வாழ்பவன்.

இந்த இருவரும் சந்திக்க காரணமான Daffodils பூங்கொத்து சில மணித்துளிகளில் அவர்களிடையே மோதலுக்கும் வழி வகுக்கிறது.

மோதலுக்கு முன்னர் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற பூர்ணா சத்யதேவையும் அவனது நண்பர்களையும் தவறாக எண்ணியதோடு அச்சம்பவத்தால் மனமுடைந்து போகிறாள். அச்சம்பவம் அவளது குடும்பத்தையும் பாதிக்கிறது. பின்னர் பணியிடத்தில் சந்தித்துக் கொண்டனர் பூர்ணாவும் சத்யதேவும். பின்னர் நடப்பதே கதை.

ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. முக்கியமாக கதையில் குடும்ப வன்முறை, அழுது வழியும் கதாநாயகி, அவளைப் பழி வாங்கும் சைகோ கதாநாயகன் இவை எதுமில்லாதது என்னை போன்ற ஃபீல் குட் கதை விரும்பிகளுக்கு பெருத்த நிம்மதி.

 


 
Posted : June 19, 2024 7:34 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved