பூ பூக்கும் ஓசை - Chitra Ganesan
விமர்சனம் வழங்கியவர்: Chitra Ganeshan
பூ பூக்கும் ஓசை-பிரவீணா தங்கராஜ்.
ஆரம்பமே அதிரடியா (அடியுடன்னு சொல்லணுமோ😁)
தங்கையின் திடீர் காதல் கல்யாணத்தில் அக்காவின் எதிர்பாரா வரவும், அதை தொடர்ந்து அவளை சமாதான படுத்த ஹீரோ அவளை நிறுத்தி அதுவும் கைய பிடிச்சு பேச ஆரம்பிக்க பட்டுன்னு கைநீட்டும் நாயகியா பூர்ணா அறிமுகம் அமர்க்களம் தான்.
தங்கை காதலினால் மனம் உடைந்த பெற்றோர்களுக்கு தன் திருமணம் உங்கள் விருப்பம் என்று சொன்ன பூர்ணா ஹீரோவின் குணத்தை பார்த்து காதலித்து பெற்றவர்கள் விருப்பத்தை பெற்று காதலனை கை பிடிக்கும் கதை.
இதில் கயலின் அவசர கல்யாணத்திற்கான காரணம் அவளின் கர்ப்பம் என்பதும்,அதற்கு அவங்க சொன்ன ரீசனும் டிபரெண்ட் ஆக இருந்தது.🙄அதை ரீடேர்ஸ் ஏற்றுக்கொள்ளும் படியும் சொல்லி இருந்தாங்க.😁
ஹீரோ தேவ் ஏன் இதை முன் நின்று நடத்தி வச்சான் என்பதும், அதற்கான காரணமும் ரொம்ப சரி.
இதுக்கு நடுவுல கோமாளியா( ரைட்டரே சொன்னது) சூர்யா பூர்ணா மேலே ஒன் சைடு லவ், மாப்பிள்ளையா வந்த சரவணா வில்லனா மாறி ட்விஸ்ட் கொடுத்தது, நண்பர்களின் கலகலப்பு எல்லாமே நல்லா இருந்தது.
ஸ்ரீ விளையாட்டு பிள்ளையா இருக்கா. அவளுக்கும் பொறுப்பு வரும் என்று நம்புவோம்😁
முதலில் ஆரம்பிச்சு முதலில் முடிந்த கதை.
Feel good story.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்😍😍😍
குறிப்பு: போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது 🤩
-
Kodhaihariram prasad review for உயிரில் உறைந்தவள் நீயடி3 days ago
-
Kokila Balraj review for மௌனமே வேதமா& பிரம்மனின் கிறுக்கல்கள்3 days ago
-
Sharnyah Lingeswaran review for பிரம்மனின் கிறுக்கல் & துஷ்யந்த3 days ago
-
பூ பூக்கும் ஓசை - Kalaikarthi9 months ago
-
பூ பூக்கும் ஓசை-கௌசல்யா முத்துவேல்9 months ago
- 130 Forums
- 2,074 Topics
- 2,342 Posts
- 1 Online
- 975 Members