பசி தூண்டி
பசி தூண்டி
தினமும் விடியலை உணர்த்திய
ஆடி ஓடி களைத்து போன
நாட்டுக்கோழி உண்டிக்கு
தன்னை ஒப்புவித்தது...
ஆம்...
தன் உயிர் இழைய
வெளிப்புற உறையை
களைந்து நீராடி
சருமத்தில் கீரலிட்டு
சிட்ரஸ் சாற்றினையும்
காஷ்மீர் செம்மிளகாய்
மஞ்சள் பொடியையும்
சுவைக்கு உப்பையும்
பூசிக்கொண்டு தளர்வாக
ஓய்வெடுத்தது...
இன்னும் மசாலா
சேர்க்கவில்லையே
என்றெண்ணி எழுந்து வந்து
வெண் தயிரேட்டையும்
மேல்தோல் களைந்து நசுக்கப்பட்ட
நாட்டு வெள்ளை பூண்டு இஞ்சியையும்
கொஞ்சம் கரம் மசாலாவும்
கஸ்தூரி மேத்தியையும்
பூசிக்கொண்டு
இன்னும் சற்றே
ஓய்வெடுக்க எண்ணி
ஓரமாக பதமாக சென்று
படுத்துக்கொண்டது...
நேரமோ செல்ல அங்கு
அடியில் நெருப்பு துண்டங்கள்
எரிமலை பிழம்பாய்
புகையுடன் மின்னி தகிக்க
கம்பிகளின் மேல்
ஒய்யாரமாக சமைந்து
பசி தூண்டி சிக்கன் தந்தூரியாய்
ருசி பார்க்க தயாராகி கொண்டிருந்தது...
ஆஹாஹா...
இதுவல்லோ தேனமிர்தம்
சுவைத்திட சுவைத்திட
பசி தூண்டுகிறதே
என்று சொல்லும் வண்ணம்
நாவின் மங்கி போன
சுவை மொட்டுக்களையும்
உயிர் பெற செய்தது...
நாசியின் வாசனை
நரம்புகளும்
எழுந்து கொண்டு
சுவைத்திட ஆவலுடன்
தேடும் வண்ணம்
தந்தூரியின் வாசனை
எங்கும் சுவையூட்டியது...!
✍️அனுஷாடேவிட்
- 138 Forums
- 1,981 Topics
- 2,241 Posts
- 2 Online
- 882 Members