Skip to content

மௌனம்

1 Posts
1 Users
0 Reactions
160 Views
அனுஷா டேவிட்
(@fellik)
Estimable Member
Joined: 12 months ago
Posts: 77
Topic starter  

மௌனம்

உடுத்தியிருக்கும் உடையோ
உண்ணுகின்ற உணவோ
உறைவிட உட்சூழலோ
அனைத்துமே என் விருப்பத்திற்கு அப்பாற்பட்டது தான்...

விரும்பி வந்தும்
விரும்பாத ஒன்றில்
எனை நானே திணித்து
வாழ பழகிடும் சூழமைவு...

உயிர்க்கூட்டினை காப்பதிலிருந்து
விடுதலையை தேடுகிறேன்..
தேட மட்டும் தான் முடியும்..
ஆரத் தழுவ எல்லாம் முடியாது..

என் முடிவுகளை நானே
எடுக்கும் நேரம் எல்லாம்
கடந்து வந்து விட்டேன்..
காரணகர்த்தா நானாகவும் இருக்கலாம்..

உணர்வற்றவளாய் மௌனம்
சாதித்து என்ன பயன்..?
முன்பிருந்த பிணைப்பும்
ஆசைகளும் கனவுகளும்
உன்னிடம் பேசியதும்
உணர்வுகளை பகிர்ந்ததையும்
இனி மீண்டும் தொடர்ந்திடுமா..?
நிர்கதியாய் அற்று போகுமா..?

என் மௌனத்தின் பின்னிருக்கும்
புரிதலையும் காதலையும்
தவிக்க விட்டு செல்வது
உனக்கு அவ்வளவு எளிதெனில்
நம் காதலின் நிலைதான் என்ன.....?

✍️அனுஷாடேவிட்.


   
ReplyQuote