நீயென் காதலாயிரு
போலிஸ் சஸ்பென்ஸ் த்ரில்லர் சோசியல் மெஸெஜ்னு இவங்க கதையை வாசிச்சிட்டு காதல் கதை வாசித்ததும் ரொம்பவே வித்தியாசமான அனுபவமா இருந்தது.
காதலும் நகைச்சுவையும் ரொமான்ஸ் சென்டிமென்ட்னு எல்லாம் கலந்த கலவையா இருந்தாலும் கதை முழுவதும் இந்தர் தான் நிறைஞ்சி இருக்கான்.
திருமணம் நடக்கும் வீட்டில் நகை காணாமல் போகவே அதை நாயகி தான் எடுத்திருப்பாள் என்று பழி விழுகிறது. அதுவும் அத்தனை நாட்கள் மருமகளே என்று வாய் நிறைய அழைத்தவர்களே பழி சுமத்தும் போது நாயகி நொருங்கி போய் எவரிடமும் சொல்லாமல் ஊரை விட்டு போகிறாள். அவளை தேடி நாயகன் பயணம். எங்கே இருக்கிறாள் என்று திக்கு திசை தெரியாது தன் காதலை மட்டும் நம்பி தேடுகிறான். அவள் கிடைத்தாளா அவனின் காதலை ஏற்றுக்கொண்டாளா வீண்பழியை சுமத்தியதை கண்டு பிடித்தார்களா என்பதே கதை.
கதையில் ரொம்ப பிடித்த கேரக்டர் இந்தர் தான். பேசிகிட்டே இருக்கான் லவ்லி அவன் வரும் இடமெல்லாம். அவனுக்கு அடுத்த படியா மோகன் கேரக்டர் சூப்பர் கேரக்டர். இப்படி ஒரு பேரண்ட்ஸ் தான் எல்லாருக்குமே வேணும். கலகலனு ஜாலியா ஒரு வித ஏக்கத்தை உண்டு பண்ணிய கேரக்டர்ஸ்.
ஒரு பூரிக்கு ஆசைப்பட்டு இப்படி உதட்டை வீங்க வச்சிட்டாளே பிரியா பாவம் 🤭🤭🤣🤣🤣 முத்தம் கொடுப்பாங்க சரி இவன் கடிச்சி வச்சிட்டானா 🤭🤭🤭 அவனோட சீண்டல் பேச்சுகளும் தீண்டல் பார்வைகளும் கணக்கில்லா முத்தங்களும்னு வாசிக்கிற எங்களையும் ஒரு வழி ஆக்கிட்டான்.
அன்வர் பாய் எதார்த்த கேரக்டர்👏👏👏 இப்படியும் மனுஷங்க இருகாங்க. கவிதாம்மா நாய் விட்டு கடிக்க சொல்லவா கேட்க, ஏதே இந்த பப்பியவானு இந்தர் கேட்க வெடி சிரிப்பு தான். சந்தியாக்கு கண்ணன் சரியான ஆளு தான். சந்தோஷ் மேல ரொம்ப வருத்தம் தான் ஒரு வார்த்தை கேட்கலயேனு அதுக்கு என்ன சொன்னாலும் நோ அக்செப்ட். நடுவில் மாட்னது விலாசினி தான்.
டைட்டில் பாத்ததும் மனசுல ரொம்ப பிடிச்சிருச்சி. டைட்டிலுக்கேத்த லவ்லி கதை. காதல் ரொமான்ஸ் நகைச்சுவை விரும்பிகள் மிஸ் பண்ணாம வாசிங்க. ஆப்டர் லாங் டைம் பீல் குட் லவ் ஸ்டோரி.
- 130 Forums
- 2,074 Topics
- 2,342 Posts
- 1 Online
- 975 Members