மெய்யனெக் கொள்வாய்
தேவியின் மெய்யெனக் கொள்வாய் எனது பார்வையில். ஸ்ரீகீர்த்தி திரைப்பட நடிகை. பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையை தேர்வு செய்து நடிப்பவள். மீ டூ விசயத்தில் கருணாகரன் என்ற தயாரிப்பாளரின் கருத்துக்கு எதிராக கருத்து சொல்லியதால் அவர் கீர்த்தி யின் அம்மா சத்யா பேசிய பழைய பதிவினை வெளியிட்டு அவமானப்படுத்துகிறார். அதிலிருந்து மீண்டு வருகிறார்களா என்பது கதை என்றாலும் இதில் சத்யாவின் கதையே அதிகம். சத்யா அவரது கணவர் இராணுவத்தில் பணிபுரிய சில நாடகங்களில் ஆர்வத்திற்காக நடித்திருக்கும் சத்யாவை அவரது மாமியார் குடும்ப அரசியல் காரணங்களுக்காக இருவரையும் பிரித்து வைக்கிறார். பிரிந்த தம்பதியர் மகளுக்கு நல்ல பெற்றோராக இருக்கின்றனர். கணவனுடன் சேர்ந்திருந்த சீதையே தன்னை நிருபிக்க தீக்குளிக்க வேண்டியிருந்தது. தற்போது வேலை செய்திடும் பெண்கள் ஆண்கள் ராமனாக இருந்தால் தங்களை நிருபிக்க வேண்டியது அவசியம் இருக்காது என்று சொல்லி இருப்பது நன்றாக இருக்கிறது. எழுத்தாளரின் எழுத்து நம்மை கீழே வைக்காமல் படிக்க வைக்கிறது. கதையை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். நாயகன் ஏறக்குறைய கதையின் நிறைவில் வருகிறான். ஆனால் இதில் சத்யாவும் சந்திரனும் தான் முதன்மை கதாபாத்திரங்கள். உமா மகேஸ்வரி உண்மையில் அருமையான கதாபாத்திரம். தப்பு செய்தது கணவன் என்றாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நிற்பதற்கு தைரியமும் நேர்மையும் வேண்டும். வாழ்த்துகள் மா.
- 129 Forums
- 1,914 Topics
- 2,174 Posts
- 8 Online
- 870 Members