தாமரையின் தழலவன்
பானுரதி துரைராஜசிங்கம் இன் தாமரையின் தழலவன் எனது பார்வையில். கவிவாணன் மதிவேணி தம்பதிகளின் மகன் தமிழரசன். தமிழுக்கு தன் மறைந்த நண்பனின் மூன்று மகள்களில் மூத்த மகள் தாமரைச் செல்வியை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் கவிவாணன். தமிழ் தான் காதலித்த பெண் தனக்காக காதல் செய்கிறாளா என்று தன் நண்பன் மூலம் சோதனை வைத்ததில் வரலட்சுமி தோற்றுப் போக தாமரையை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறான். தன் மனைவியும் தன்னிடம் உள்ள செல்வத்திற்காக திருமணம் செய்து கொண்டாளா என்று சோதனை செய்ய அதைத் தெரிந்துக் கொண்டு கோபம் கொள்கிறாள் தாமரை. தாமரையின் கோபம் தணிந்ததா இல்லையா என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார். எழுத்தாளர் எடுத்துக் கொண்ட கதைக் களம் பழையதாகவும் காட்சிகளும் பழையதாகவே இருக்கிறது என்றாலும் இலங்கையில் நடப்பதாக இயல்பாக கதையை கொண்டு சென்றிருக்கிறார். வாழ்த்துக்கள் மா.
- 141 Forums
- 2,298 Topics
- 2,571 Posts
- 7 Online
- 1,044 Members