வஞ்சிப்பதோரும் பேரவா
பார்கவி முரளி யின் வஞ்சிப்பதோரும் பேரவா எனது பார்வையில். ஹர்ஷாவின் காதலி செய்த துரோகத்தால் திருமண வாழ்க்கையின் மீது பிடிப்பு இல்லாமல் இருக்கிறான். பெற்றோர் விருப்பப்படி அப்பாவின் நண்பரின் மகள் பிரியம்வதாவை திருமணம் செய்து கொண்ட பின்பும் பிடித்தம் இல்லாத நிலையில் முன்னாள் காதலி மௌனிகாவை அவளது கணவனுடன் ஒரு உணவகத்தில் சந்திக்கிறான். அங்கு இருவருக்கும் ஏற்படும் தனிமையில் மௌனிகா தான் நன்றாக இல்லை சிறிய ஆபத்தில் இருக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்துகிறாள். மௌனிகாவிற்கு உதவி செய்ய ஹர்ஷா முயல அதனால் அவனுக்கும் அவனது குடும்ப வாழ்க்கைக்கும் வரும் பிரச்சினைகளை தன் உறவினரான காவல் துறையை சேர்ந்த அபிஜித் மூலம் தீர்வு காண உதவி கேட்கிறான். இந்த தலைமுறை இளையவர்கள் சமூக வலைதளங்களில் டார்க் வெப்சைட்டில் ஈடுபாடு கொள்வதால் ஏற்படும் விளைவுகளையும் படிக்க நமக்கு அச்சமாக இருக்கிறது. நல்ல விறுவிறுப்பான சுவாரசியமான கதை. வாழ்த்துகள் மா.
Leave a reply
- 133 Forums
- 2,122 Topics
- 2,379 Posts
- 29 Online
- 1,437 Members