Skip to content
வாசகர்களுக்கான போட்...
 
Share:
Notifications
Clear all

வாசகர்களுக்கான போட்டி அறிவிப்பு- விதிமுறை

8 Posts
6 Users
5 Reactions
710 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 956
Member Admin
Topic starter
 

அன்புள்ள வாசகர்களுக்கு,

     ஒரு அறிவிப்புடன் வந்திருக்கேன். 

 நம்ம சைட்ல மற்றுமொரு ஒரு புதிய முயற்சி. 

  'Secret Writer Story' அதாவது தளத்தில் பெயர் சொல்லாமல் எழுத்தாளர் கதை எழுத வர்றாங்க‌.

 என்ன கதை ஏதுன்னு வாசகர்களாகிய நீங்க படிச்சு கண்டுபிடிக்கணும். எழுத்தாளர்கள் உங்கள் பெயரை எங்கேயும் நீங்கள் சொல்லக்கூடாது. இது விதிமுறை. அதே போல நீங்க எழுதறிங்களா சைட்ல என்று எழுத்தாளரிடம் கேட்டு கள்ளாட்டம் ஆடக்கூடாது. ஓகேவா..😜

 😊 அப்படி கண்டுபிடிச்சு கடைசியாக எந்த ரைட்டர் என்று சரியாக சொல்லும் வாசகர்களுக்கு புத்தக பரிசு காத்திருக்கு. 

  இது முழுக்க முழுக்க வாசகர்களாகிய உங்களுக்கான போட்டி. 

  இதற்கு நீங்க செய்ய வேண்டியது.👇

 *சைட்ல ரிஜிஸ்டர் செய்து கதை வாசித்து லாகின் செய்து கதையின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் கமெண்ட்ஸ் பண்ணணும்.* என்னடா இது எப்பவும் நடப்பது தானே? என்று சிரிக்க கூடாது. வாசகர்களாகிய நீங்க போட்டியில் கலந்துக் கொள்கின்றீர்கள் என்றால், உங்கள் பெயரை என்னிடம் பதிவு செய்திருக்க வேண்டும். எழுத்தாளர் எப்படி கதை எழுத பெயர் தருகின்றனரோ அது போல வாசகர்களும் பெயரை தரணும்‌.

  அவ்வாறு பதிவு செய்த வாசகர்கள் அத்தியாயம் வாசித்து கருத்தளித்தால் மட்டுமே போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும். 

 அப்பறம் ஆட்டத்துக்கு யார் வர்றிங்க. ரீடர்ஸ்... 🎉

மேலும் விவரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளவும். 

விதிமுறைகள் கீழ்கண்டவற்றில் இணைக்கப்பட்டுள்ளது. 

 வாசகர்களுக்கான போட்டி விதிமுறை:

1.Dec 10 வரை வாசகர்கள் உங்கள் பெயரை பதிவிற்கு கொடுக்கலாம்.

எல்லா கதையின் அத்தியாயம் வாசித்து உங்கள் கருத்தை வழங்கி யார் எழுத்தாளர் என்று கண்டறிய வேண்டும். 

2.எந்த எழுத்தாளரிடமும் சென்று நீங்கள் இந்த தளத்தில் எழுதுகின்றீரா என்று கேட்க கூடாது. 

3.எழுத்தாளர் யார் என்று அறிந்துவிட்டால் நீங்கள் தளத்தின் அட்மினிடம் பகிரலாம். பொது வெளியில் பகிரக்கூடாது. 

4.தளத்திற்கான குரூப்பில் உங்கள் பங்கு, கருத்து வழங்குதல், எழுத்தாளருக்கு உற்சாகம் கொடுத்து நிறை குறையை கூறலாம். 

5.வார்த்தைகள் அநாகரீகமாக இருக்க கூடாது.

 
Posted : December 3, 2024 8:26 pm
Eswari reacted
(@eswari)
Posts: 12
Active Member
 

Super da 👌 👌 👌 

 
Posted : December 3, 2024 9:14 pm
(@vinoprakash)
Posts: 13
Eminent Member
 

@praveena sister new writer yaarachum write pannina how to identify

 
Posted : December 3, 2024 9:31 pm
Praveena Thangaraj
(@praveena)
Posts: 956
Member Admin
Topic starter
 

Vino prakash  apadi iruntha inform pandren ma. 

 
Posted : December 3, 2024 9:37 pm
Kalidevi
(@kalidevi)
Posts: 16
Eminent Member
 

@praveena kalidevi add panikonga sisy konjam try panren kandu pidika illana enala mudincha alavu padichi  comments kodupen ellarukum

 
Posted : December 4, 2024 4:17 pm
Priyarajan
(@priyarajan)
Posts: 13
Eminent Member
 

Priyarajan🤗

 
Posted : December 4, 2024 5:00 pm
(@nanthini-perumal)
Posts: 1
New Member
 

நானும் உங்க வாசகர் தான் அக்கா பெரிசா ரொம்ப  கமெண்ட்ஸ் பன்ன தெரியாது... உங்க தர்ஷனும் அஸ்வினும் என் பேவரிட்... என்னால் முடிந்த வரை முயற்சிக்கிறேன்...

 
Posted : December 4, 2024 6:00 pm
Praveena Thangaraj
(@praveena)
Posts: 956
Member Admin
Topic starter
 

@nanthini-perumal ஒரு வரி என்றாலும் உங்கள் உற்சாகம் எழுத்தாளரை எழுத வைக்கும் மா. நீங்க பெயர் கொடுத்து கமெண்ட்ஸ் பண்ணின போதும். pravee.thangaraj@gmail.com msg பண்ணுங்க. contact பண்றேன்

 
Posted : December 4, 2024 6:53 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved