ருத்ரமாதேவி - 7
அத்தியாயம் 07
சினிமா வசனம் போல் பேசிய ருத்ராவின் பேச்சில் ஆண்கள் இருவரும் சிரிப்பை அடக்கி அமர்ந்திருக்க, தோழிகள் இருவரும் அவளை விசித்திரமாக பார்க்க, அவர்களின் செயலில் அவளுக்கு அழுகையே வந்து விட்டது.
கண்களில் கண்ணீர் கோர்க்க, கலங்கி போய் இருக்கும் ருத்ராவின் விழிகளை கண்டதும் தமிழ் வேந்தனின் இதயமே கலங்கியது.
"ஏ ருத்ரா. இப்ப எதுக்கு கண் கலங்குர?" என்றான் குரல் உடைந்து.
அவனின் உடைந்த குரலில் தவித்து போனாள் ருத்ரா.
அவளின் கண்ணீர் அவனுக்கு ஏன் வலிக்கிறது என்று அவனுக்கு புரியவில்லை.
அதேபோல் அவனின் அவளுக்கான குரல் ஏன் தன் உயிர் வரை தாக்குகிறது என்று அவளுக்கு தெரியவில்லை.
இருவரும் சில நொடிகள் சிலை போல் அமர்ந்திருந்தனர். அந்த உறை நிலையில் இருந்து முதலில் மீண்டது தமிழ் வேந்தன் தான்.
தன் தொண்டையை செருமி, "என்ன ருத்ரா உன்னை பழி வாங்க தான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்ல வேண்டுமா. அப்படியே பழி வாங்க என்றால் ஏன் எல்லோர் முன்னிலையில் சொல்ல வேண்டும்? ஏன் இப்படி யோசிக்கிற."
"நான் உண்மையில் உன்னை காதலிக்கிறேன். என் காதலை உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையா" என்றான் சோகமாக.
"எப்படி புரிஞ்சிக்க முடியும்? இல்ல தெரியாம தான் கேட்கிறேன்? எப்படி புரிஞ்சிக்க முடியும்?" என்றாள் ஆத்திரமாக.
அவளின் கோப வார்த்தையில் அவன் அமைதியாக அவளை பார்க்க, ஐஸ்வர்யாவும் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
இது வரை ருத்ரா இவ்வளவு கோப பட்டு அவள் பார்த்தது இல்லை. சிறு வயதில் இருந்தே மிகவும் அமைதியானவள். எந்த ஒரு விசயத்தையும் மிகவும் நிதானமாகவே எதிர் கொள்வாள்.
அப்படி பட்ட ருத்ரா இவ்வளவு கோவமாக பேசியதில் இருந்தே தெரித்தது அவள் எவ்வளவு வெறுப்படைந்து உள்ளாள் என்று.
அவளின் கையை அழுத்தி அமைதி படுத்த முயன்றாள்.
ஐஸ்வர்யா கையை அழுத்தியதில் அமைதியாக அவளை பார்க்கும் போதே அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அவளின் வழிந்த கண்ணீர் அவனின் இதயத்தை கூறு போட்டது. அவன் அமைதியாக "நான் என் காதலை உன் பிறந்த நாளில் சொல்ல வேண்டும், அந்த நாள் உனக்கு என்றும் நினைவில் இருக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்தேனே தவிர, அது உன்னை இவ்வளவு பாதிக்கும் என்று சிறிதும் நினைக்கவில்லை. ரியலி ஐ அம் வெரி சாரி. பட் ஸ்டில் என் காதலில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
உனக்காக நான் காத்திருப்பேன். எத்தனை ஜென்மம் என்றாலும். ரிலக்ஸ், இனி உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றான்.
தான் கோபப் பட்டதால் தான் அவன் வருத்தமாக பேசி சென்றான் என்பதை அவன் சென்ற பிறகு உணர்ந்தாள்.
அவனின் வருத்த முகம் அவளை ஏதோ செய்தது ஏன் என்று குழம்பினாள். நேற்று தான் அவரை கண்டேன். கண்டது முதல் அவர் எனக்கு அதிர்ச்சியே தந்து கொண்டிருந்தார்.
இருந்தும் அவரின் இந்த சோகம் முகம் ஏன் எனக்கு கவலை அளிக்கிறது என்று பலவாறு யோசித்து கொண்டே இருந்தாள்.
அவளின் சிந்தனையை கலைத்து எல்லோரும் வகுப்புக்கு போங்க. எதுவாக இருந்தாலும் லஞ்ச் பிரேக்கில் பேசிக்கலாம் என்று அனுப்பி வைத்தான் அன்பரசு.
அவர்களும் வகுப்புக்கு சென்றனர். ஆனால் ருத்ராவால் பாடத்தை கேட்க, கவனிக்க சக்தி இல்லாது ஏதோ யோசனை அமர்ந்திருந்தாள்.
ஒரு வழியாக வகுப்பு முடிய மதிய உணவிற்கு அவர்கள் எப்பொழுதும் கூடும் இடத்திற்கு செல்ல அங்கு அன்பரசு அவர்களுக்காக காத்திருந்தான்.
இன்று பிரணவ் ப்ரணித் இருவரும் கல்லூரிக்கு வரவில்லை. பெண்கள் வந்ததும் அன்பரசு ருத்ராவிடம், "ருத்ரா தமிழ் சார் அனுப்பிய படங்கள் அனைத்தும் உண்மைதான்.
அப்படி என்றால் அவருக்கு உன்னை முன்பே தெரிந்திருக்கிறது என்று தான் அர்த்தம். நீ நன்றாக யோசித்துப் பார்" என்றான்.
அதற்கு அவள், "நானும் காலையில் இருந்து யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு அவரை சிறிதும் பார்த்தது போல் ஞாபகம் இல்லை" என்றாள்.
சரி நீ எதற்கும் கவலைப்படாதே. நான் இன்னும் கொஞ்சம் விசாரித்து நாளை உன்னிடம் சொல்கிறேன் என்றான்.
நீ எதையும் பற்றியும் யோசித்து உன்னை குழப்பிக் கொள்ளாதே. உன் குழப்பத்தை கண்டு உன் பெற்றோர்களுக்கு வருத்தமாக இருக்கும் என்றான்.
அதன் பிறகு தான் அவளுக்கு ஞாபகம் வந்தது. நேற்று கல்லூரியில் நடந்த எதையும் தன் பெற்றோருக்கு சொல்லவில்லையே என்று.
உடனே அண்ணா நான் இதைப் பற்றி அப்பாவிடம் சொல்லி விடுகிறேன். இதை எப்படி நான் நேற்று மறந்தேன் என்று எனக்கே தெரியவில்லை.
அன்பரசு வேண்டாம். இப்பொழுது எதையும் அவரிடம் சொல்லாதே. நாளை வரை பொறுத்து இரு. நாளை கொஞ்சம் விசாரித்து விட்டு உன்னிடம் சொல்கிறேன் என்றான்.
அவன் சொல்லுவது சரியாக இருந்தாலும் தன் பெற்றோரிடம் மறைப்பது அவளுக்கு வருத்தமாக இருந்தது. அரை மனதாக தலை ஆட்டினாள்.
மூவரையும் வற்புறுத்தி உணவு உன்ன வைத்து வகுப்பிற்கு அனுப்பி விட்டு கிளம்பினான் அன்பரசு.
இன்றைய பொழுது ஒருவாறு கல்லூரி நேரம் முடிந்து. வீட்டிற்கு வரும் வரை எப்படி அப்பா அம்மாவிடம் சொல்லாமல் இருப்பது என்று நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்த ருத்ரா, வீட்டிற்கு வந்ததும் வழக்கம் போல் தன் வேலையை முடித்து படுத்துவிட்டாள்.
அவளின் தாய் பள்ளி முடிந்து வர, கட்டிலில் படுத்து இருக்கும் ருத்ராவை பார்த்து வந்ததும் பால் காய்ச்சினால் என்ன? தினமும் சொல்றேன்ல. பால் காச்சி பூஸ்ட் போட்டு குடிச்சிட்டு இருக்கலாம்ல. பால் சூடா இருந்தா நானும் காஃபி குடிப்பேன்ல என்று திட்டிக் கொண்டே பாலை அடுப்பில் வைத்தார்.
அவரின் பின் புறம் வந்து கட்டிக்கொண்டு, ஏன் மா திட்டுறீங்க? என்று கொஞ்சினாள்.
அவ்வளவு தான் அவளின் அம்மா. அவளின் கொஞ்சலில் அனைத்தையும் மறந்து அவளை கொஞ்சிய படியே அவளுக்கு பூஸ்ட் கலந்து கொடுத்து, தானும் காஃபி குடித்த படியே அன்றைய தினம் அவரின் பள்ளியில் நடந்தவற்றை பற்றி பேசி கொண்டு இருக்க, அவளின் தந்தையும் வந்து விட எல்லோரும் ஒன்றாக பேசிக் கொண்டு இருந்தார்கள்.
தந்தை தாயுடன் பேசிக்கொண்டு இருந்ததில் இன்று கல்லூரியில் நடந்ததை சுத்தமாக மறந்தேவிட்டாள் ருத்ரா.
விதி தன் வேலையை காட்ட தொடங்கி விட்டது.
தொடரும்....
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 62 days ago
-
ருத்ரமாதேவி - 53 days ago
-
ருத்ரமாதேவி - 35 months ago
-
ருத்ரமாதேவி - 25 months ago
- 143 Forums
- 2,490 Topics
- 2,973 Posts
- 6 Online
- 2,061 Members
