ருத்ரமாதேவி - 35
அத்தியாயம் 35
மகாதேவனின் சிம்ம குரலில் அதிர்ந்தார் சகாதேவனின் தாய்.
தமையனை ஆழ்ந்து நோக்கினான் சகாதேவன். 'என்ன அண்ணா. இவன் சிறுவன் தானே இவனுக்கு என்ன தெரிய போகிறது என்று நினைத்தீர்களா? அல்லது ஒன்றும் தெரியாத முட்டாள் என்று நினைத்தீர்களா?' என்றான் பார்வையிலேயே.
அவனின் பார்வையின் பொருள் புரிந்த மகாதேவன் தன் தமையனை தோளோடு அணைத்து, "உன்னை சிறுவன் என்றோ, முட்டாள் என்றோ, நினைத்திருந்தால் என் மாமியார் வீட்டிற்கு சென்று ஒரு வருட காலம் சுகமாய் இருந்து விட்டு வந்திருப்பேனா?
உன் திறமையின் மீது இருந்த நம்பிக்கையில் தானே நான் தைரியமாகச் சென்றேன். இந்த ஒரு வருட காலம் உன் ஆட்சியை பற்றி அறியாமலா இருக்கின்றேன்? ஏன் இப்படி நினைக்கின்றாய்" என்று வாய் வார்த்தையாகவே கேட்டு விட்டான்.
தன் மகனின் பார்வைக்கு இவ்வளவு பதில் கூறும் மகாதேவனை வியந்து பார்த்துக் கொண்டிருந்தார் அவனின் சிற்றன்னை.
பின்னர் தன் சிற்றன்னையிடம் திரும்பி, "என்ன சிற்றன்னையே" என்று சிற்றன்னையில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து, "தன் இளவல் பார்வையின் பொருள் புரிந்து பேசும் தமையனை கண்டு வியந்து போய் நிற்கின்றீகளோ?" என்றான் இலக்காரமான குரலில்.
தான் நினைப்பதை உடனுக்குடன் தெரிந்து கொண்டு, அதற்கு பதில் உரைக்கும் மகாதேவனை கண்டு சற்று பயந்து, "அது.. இல்லை.." என்று திணறினார்.
"எனக்கு ஒரு சிறு சந்தேகம் சிற்றன்னையே" என்று அவன் அவர் முகம் பார்த்து நின்றான்.
அவன் என்ன கேட்க போகிறான் என்று அவரும் உள்ளுக்குள் பயந்தவாறே முகம் பார்க்க, அவனே தொடர்ந்து, "உங்களுக்கு ஒரு வேலை எடுத்துச் செய்தால், அதை முழுவதுமாக சரியாக முடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா?" என்றான்.
'இவன் எதைச் சொல்கின்றான்' என்று ஒன்றும் புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவனே தொடர்ந்து, "நீங்கள் மயூராவுக்கு, என் மனைவி மயூராவிற்கு" என்று "மனைவியில்" அழுத்தம் கொடுத்து, அவரின் முகம் காண, அவர் குழம்பி போய் நிற்பது தெரிந்து.
"உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். புரியும் படியே சொல்கிறேன். "என் மனைவியின்" வயிற்றில் உள்ள "என் குழந்தையை" அழிக்க மருந்து கொடுக்க ஒரு தாதிப் பெண்ணை ஏற்பாடு செய்திருந்தீர்களே? அவள் எங்கே என்று பிறகு என்றாவது ஒரு முறை யோசித்தீர்களா? அதி புத்திசாலியாக இருந்தால் இந்நேரம் உங்களுக்கு தெரிந்திருக்குமே! எங்கே சொல்லுங்கள் பார்ப்போம்! அவள் எங்கே இருக்கிறாள் என்று?" என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து கேட்டான்.
தன் மகனின் முன்பு தான் செய்த தவறை சுட்டிக்காட்டியதில் பயந்தே விட்டார் அவனின் சிற்றன்னை. பயத்துடன் தன் மகனை காண அவனின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இன்றி நின்றிருந்தான் சகாதேவன்.
"உங்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன். நானே கூறிவிடுகிறேன். நமது மேற்கு எல்லையில் மலை அடிவாரத்தில் யார் உதவியும் இன்றி தனியாய் இருக்க உத்தரவிட்டுள்ளேன். அவள், அவளின் குடும்பம், அவளின் இரு தலைமுறை வாரிசு, என்று மூன்று தலைமுறைக்கு தண்டனை கொடுத்துள்ளேன்.
குடும்பமாய் இருப்பது என்ன தண்டனை என்று யோசிக்கிறீர்களா?" என்று அவரின் முகம் காண, அவர் பயத்தில் வெளிறி போய் நின்று இருந்தார்.
அவனே தொடர்ந்து, "அவர்களே வேலை செய்து அவர்களே சாப்பிட வேண்டும். வெளி மனிதரின் உதவி எந்த விதத்திலும் அவர்களுக்கு கிடைக்காது. ஊரைவிட்டு அல்ல என் நாட்டை விட்டு விலக்கி வைத்திருக்கிறேன் அவளை அவள் குடும்பத்துடன் என்று கண்கள் சிவக்க கூறினான்.
அவனின் கூற்றில் அந்தப் பெண்ணிற்கு கொடுக்கப்பட்ட தண்டனையை நினைத்து உண்மையில் பயந்து நடுங்க ஆரம்பித்தது சகாதேவனின் தாயின் உடல். அவன் வாரிசை அழித்ததற்கு உறுதுணையாக இருந்த பெண்ணிற்கு மூன்று தலைமுறைக்கு உணவு, உடை, கல்வி என்று எதுவும் இல்லாமல் செய்து விட்டு, தன் முன் கம்பீரமாக நிற்கும் மகாதேவனை நடுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
"இந்த தண்டனை பற்றி ஊரில் உள்ள அனைவருக்குமே தெரியுமே! அரசாங்க துரோகத்திற்கான தண்டனை என்று! உங்களுக்கு எப்படி தெரியாமல் போனது? அதுதான் சொல்கின்றேன், ஒரு வேலையை எடுத்தால் ஆதி முதல் அந்தம் வரை கனகச்சிதமாக முடிக்க வேண்டும் என்று" என்று இலக்காரமாக கூறினான்.
"அரசருக்கு, அரசாங்கத்திற்கு துரோகம் செய்யும் ஒவ்வொருத்தருக்கும், அது யாராயிருந்தாலும் தண்டனை உண்டு. உங்களுக்கும் இன்றிலிருந்து தண்டனை தொடங்கும்" என்று அவரின் முகம் காண, அவரோ 'என்னை சிறை சேதம் செய்து விடுவானோ' என்று பயந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரின் முகம் பார்த்து, "அவ்வளவு சுலபமாக உங்களை சிறை சேதம் செய்து இப் புவியிலிருந்து அனுப்பி விடமாட்டேன்" என்று சிரித்தான்.
"நாளையிலிருந்து அத்தண்டனை உங்களுக்கு ஆரம்பிக்கப்படும் அது என்ன என்று உங்களுக்கு எப்பொழுது புரிகிறது என்று பார்ப்போம். அதில் தெரியும் உங்கள் புத்திசாலித்தனம்" என்று சிரித்து விட்டு… தன் இளவலைக் காண அவனின் முகத்தில் தன் தமையனின் தீர்ப்பில் இருந்த நியாயம் மட்டுமே தெரிய, தன் அன்னைக்காக சிறிதும் அவன் வருந்தவில்லை.
அதைக் கண்டு பெருமிதத்துடன் அவனை நெருங்கி, "நீ என்ன நினைக்கிறாய் தம்பி. விட்டு விடலாமா?" என்று கேட்டான்.
நொடி பொழுதும் தாமதிக்காமல் "வேண்டாம் அண்ணா. நீங்கள் செய்ய நினைத்ததை அப்படியே செய்யுங்கள். அது தான் அரசுக்கு துரோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் ஒவ்வொருவருக்கும் இது பாடமாக அமையும்" என்றான் நிமிர்வாக.
இருவரும் புன்னகைத்துக் கொண்டே அவ்வறையை விட்டு வெளியேற முயல, தன் மகனை அழைத்தார் ராஜமாதா. அவரின் அழைப்பிற்கு தன் தாயை பார்த்து வணங்கி, அன்னையே! தயவு செய்து தண்டனையை மாற்ற மட்டும் கூறி விடாதீர்கள்" என்று கைகூப்பி வேண்டினான்.
தன் மகன் கைகூப்பி நிற்பதை தடுத்து, "கொஞ்சம் யோசிக்க சொல்லலாம் என்று நினைத்தேன். நீ இப்படி என்னிடம் யாசிக்க வேண்டாம். அரசு நிர்வாகத்தில் என்றும் நான் தலையிடுவதில்லை. ஒரு அரசாக நீ என்ன செய்தாலும், அது நியாயமாக இருக்கும் வரை என்னிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வராது" என்று புன்னகைத்து, இரு மகன்கள் தலையிலும் கை வைத்து ஆசீர்வதித்து, தன் தங்கையை பார்த்து முறைத்துவிட்டு தன் மருமகளை காண அவளின் அறையை நோக்கி சென்றார்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்1 week ago
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
- 143 Forums
- 2,623 Topics
- 3,132 Posts
- 1 Online
- 2,142 Members
