ருத்ரமாதேவி - 43
அத்தியாயம் 43
யாழ் வேந்தனின் கூற்றில் கோபித்துக் கொண்டு அங்கிருந்து இனி அவனை பார்க்க மாட்டேன் என்று ருத்ரா சொல்லி சென்ற திசையை வெறித்து பார்த்து நின்று கொண்டிருந்தான் யாழ் வேந்தன்.
சிறிது நேரம் குகனுக்குமே அங்கு நடந்த நிகழ்வு மண்டையில் ஏறவில்லை. முதலில் தெளிந்த குகன் தன் நண்பனின் தோளை பற்றி உலுக்கி "வேந்தா" என்றான்.
நண்பனின் உலுக்களில் சுயம் பெற்ற யாழ் வேந்தனின் காதுகளில் ருத்ராவின் சொல்லே மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டு இருந்தது. இனி எப்படி அவளை சந்திப்பது. அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று எண்ணி குழம்பி போய் நின்றிருந்தான்.
அவன் குழப்பமான முகத்தில் மனம் வருந்திய குகன் தன் தோழனை தோளுடன் அனைத்து "கவலைப்படாதே நண்பா. அனைத்தும் சரியாகும்" என்று ஆறுதல் கூறினான்.
யாழ் வேந்தனிடம் கோபமாக கூறிவிட்டு அவனை விட்டு வெகு தூரம் வந்த பிறகும் ருத்ராவின் மனம் அமைதி அடையவில்லை. அவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
அவளின் எதிரில் அவளைத் தேடி அவளின் தோழி அத்வைதா வந்து கொண்டிருக்கிறாள். ருத்ராவை நிறுத்தி "எங்கே சென்று வருகிறாய் ருத்ரா?" என்று கேட்டாள் அத்வைதா.
அத்வைதா அவளின் சிறுவயது தோழி. முதல் மந்திரியின் மகள். பிறந்ததிலிருந்து இருவரும் ஒன்றாகவே வளர்கின்றார்கள். ருத்ராவின் சிறு அசைவும் அத்வைதாவிற்கு புரிந்துவிடும். அதேபோல் அத்வைதாவின் எண்ணத்தையும் எளிதில் புரிந்து கொள்வாள் ருத்ரா.
அப்படி இருக்க திடீரென்று மாளிகையில் இருந்த ருத்ராவை காணவில்லை என்றதும் அவள் கானகத்திற்கு தான் சென்று இருப்பாள் என்று அவளைத் தேடி கானகத்திற்கு விரைந்தாள் அத்வைதா.
அவளின் எண்ணம் பொய்க்காமல் அவளின் எதிரில் வந்து கொண்டிருந்த ருத்ராவை நிறுத்தினாள். அவளைக் கண்ட அத்வைதாவிற்கு பதட்டம் உண்டானது. அவளின் அழுத முகம் கண்டு உடனே அவளிடம் "ஏன் ருத்ரா அழுகின்றாய்? என்ன விஷயம்?" என்றாள் கவலையாக.
"ஒன்றுமில்லை" என்று கண்ணீரை புறங்கையால் துடைத்து, "நீ ஏன் இங்கு வந்தாய்?" என்றாள்.
"உன்னை தேடி தான் வந்தேன். நீ ஏன் என்னிடம் கூறாமல் இங்கு வந்தாய்?" என்று அவளை நோக்கி கேட்டாள் அத்வைதா.
ஒன்றுமில்லை என்று குதிரையை கோட்டையை நோக்கி விரட்ட அவளின் பின்னாலேயே அமைதியாக வந்த அத்வைதா மாளிகைக்கு வந்ததும் அவளிடம் மீண்டும் அதை கேள்வியை கேட்டாள்.
"ஏன் அவசரமாக மாளிகையில் இருந்து சென்றாய்? ஏன் அழுதாய்?" என்று.
அவளிடம் என்ன கூறலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது
மீண்டும் கூறினாள் "என்னிடம் பொய் மட்டும் உரைக்காதே" என்ற தன் உயிர் தோழியிடம் எதையும் மறைக்காமல் இன்று காலை யாழ் வேந்தனை சந்தித்து வந்ததைப் பற்றி கூறினாள்.
அவர்களுக்குள் நடந்த உரையாடலை பற்றியும் கூற அனைத்தையும் பொறுமையாக கேட்ட அத்வைதா "எனக்கு என்னமோ அவருக்கு உன்னை பற்றி முழுவதும் தெரியும் என்று தோன்றுகிறது. மேலும் அவர் உன்னிடம் விளையாடுவதற்கு தான் அப்படி பேசி இருப்பார் என்றும் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். நீ எதைப் பற்றியும் எண்ணாதே" என்று ஆறுதல் கூறி, தங்களின் அன்றாட வேலையை கவனிக்க செய்தாள்.
இங்கு ருத்ரா தன் காதல் தோல்வியா வெற்றியா என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க, அங்கு யாழ் வேந்தன் தன் காதல் வெற்றி அடைய வேண்டும் என்று ருத்ரா தேவியின் குல தெய்வம் ருத்ரமாதேவியிடம் பிராத்தனை செய்து கொண்டு இருந்தான்.
அகம்பனன் பகல் இரவு பாராமல் எப்பொழுதும் காமத்தில் திளைத்துக் கொண்டிருந்தான். அவனின் எண்ணம் முழுவதும் பெண்கள் பெண்கள் பெண்கள்.
மகாதேவன் இனியும் அகம்பனனை இப்படியே விட முடியாது என்று அவனுக்கு கிடைக்கும் போதை பொருட்களை தடை செய்ய ஆரம்பித்தார். அது அகம்பனனுக்கு கோபத்தை தூண்ட மகாதேவனிடம் "என்னை கட்டுப்படுத்த என்றும் நீங்கள் முயலாதீர்கள். அப்படி முயன்றீர்கள் என்றால் முடிவு விபரீதமாக இருக்கும்" என்று மிரட்டி சென்றான்.
அவன் மிரட்டலுக்கு சிறிதும் அஞ்சாத மகாதேவன் அவனை திருத்தும் செயல் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து, அவனை சுற்றி வளைத்து திருத்த முயற்சி செய்தார். அவர் அவனை திருத்த முயற்சி செய்யும் ஒவ்வொரு வழியையும் முறியடித்து அவன் தன் சுகம் ஒன்றே கதி என்று இருந்தான்.
ஒரு கட்டத்தில் மகாதேவனின் செயலால் அவனின் தேவைகள் தடைப்பட இனியும் சும்மா இருக்க முடியாது என்று தன் பாட்டனாரின் உதவியுடன் இந்த வேங்கை நாட்டை தான் ஆள வேண்டும் என்ற எண்ணத்தை தீவிரமாக நிறைவேற்ற துணிந்தான். ஆட்சி தன்னிடம் இருந்தால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது அல்லவா.
அனைத்து நல்லதையும் கூறி ஆட்சியை அவனிடம் கொடுக்க மகாதேவன் தயாராக இருந்தாலும் அவன் தன் பாட்டனாரின் உதவியுடன் தீய வழிகளில் குறுக்கு வழியில் அரியணை ஏற முடிவு செய்தான். அதற்கான நாளையும் குறித்து விட்டான்.
அவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடும் ருத்ராவின் இருபத்தியோராம் பிறந்த நாள் அன்று அனைவரையும் வீழ்த்தி தான் அரியணை ஏறும் நாள் என்று.
அகம்பனன் இப்படி திட்டம் தீட்டி கொண்டிருப்பதை அறியாத மகாதேவன் தன் ஆட்சியை சீரும் சிறப்புமாகவே செய்து கொண்டிருந்தார். அரசு வேலையில் கவனமாய் இருந்தாலும் அகம்பனனையும் ருத்ராவையும் கவனிப்பதில் அவர் சிறிதும் விலகவில்லை.
அகம்பனன் அதிகம் அவனின் பாட்டனாருடன் இருப்பதில் சிறிது சந்தேகம் வர, ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொள்ள முயன்றார். ஆனால் அவரால் அவனின் திட்டத்தை ஒரு சதவிகிதம் கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு திறமையாக திட்டம் தீட்டி இருந்தான் அகம்பனன்.
யாழ் வேந்தனை மறக்கும் முயற்சியில் ருத்ரா எப்பொழுதும் கானகமே கதி என்று கிடந்தாள். அன்றும் அப்படி தன் தோழியர்களுடன் கானகத்தில் வேட்டையாடிக் கொண்டிருந்தாள்.
வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென்று தன் முன் குதித்து நிற்கும் ஆணை எதிர்க்கும் பொருட்டு அனிச்சையாக அவள் கை இடையில் இருக்கும் வாளை உருவி அவனை தாக்க, அதைவிட வேகமாக அவன் அவளை வாள் கொண்டு தடுத்தான்.
தன்னுடன் வாள் போர் தொடுக்கும் யாழ் வேந்தனை வியந்து பார்த்து தன் வாளை சுழற்ற, அவளுக்கு ஈடு கொடுக்கும் விதமாக அவனும் வாள் போர் புரிந்தான்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்1 week ago
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
- 143 Forums
- 2,623 Topics
- 3,132 Posts
- 4 Online
- 2,141 Members
