ருத்ரமாதேவி - 46
அத்தியாயம் 46
யாழ் வேந்தன் தன் அன்னையை அழைத்துக் கொண்டு வருவதாக விடியற்காலையில் கிளம்பிய பிறகு, ருத்ரா குளித்து ருத்ரமாதேவியின் கோயிலுக்கு சென்றாள்.
அதன் பிறகு தன் காலை பயிற்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டு அத்வைதாவை தேட, அவளோ அரண்மனையில் எங்கும் இல்லை.
நேரம் மிகவும் மெதுவாகச் செல்ல கானகத்திற்காவது செல்வோம் என்று தன் வெண் குதிரையில் ஏறி கானகத்திற்கு சென்றாள்.
தடாகத்தின் அருகே யாரோ இருவர் அமர்ந்திருப்பது போல் தெரிய, தன் குதிரையை அங்கே நிறுத்திவிட்டு வேங்கை போல் பதுங்கி பதுங்கி அருகே வர அங்கே அமர்ந்து இருப்பவர்களை கண்டு அதிர்ந்து நின்றாள்.
அவளின் உயிர் தோழி அத்வைதாவும் அவள் உயிரானவனின் உயிர்த்தோழன் குகனும் அமர்ந்து தன்னிலை மறந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் முன் சென்று திடீரென்று நின்ற ருத்ராவை கண்டு இருவரும் அதிர்ந்து எழுந்து நின்றனர். தன் தோழியை கண்டதும் அத்வைதா அவளின் அருகில் வந்து அவளை அணைத்து "என்னை மன்னித்துவிடு ருத்ரா. நான் இவரை உயிருக்கு உயிராய் விரும்புகிறேன். உன்னிடம் மறைத்ததற்கு மன்னித்துவிடு" என்றாள்.
அவளும் பொய் கோபத்துடன் "என்னிடமே மறைத்து விட்டாயா? என்ன செய்கிறேன் என்று பார்? தந்தையிடம் சொல்லி உங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கின்றேன்" என்றாள்.
ருத்ராவின் முகம் கோபமாக இருக்க, உதிர்த்த வார்த்தைகள் அவளுக்கு சாதகமாக இருப்பதில் மகிழ்ந்து தோழியை இறுக கட்டி அணைத்து தன் நன்றியை தெரிவித்தாள் அத்வைதா.
தன் தோழியை விலக்கி நிறுத்தி "நீ என்னை அணைத்து இருப்பதை பார்த்து தமையனுக்கு கோபம் வருகிறது" என்றாள் குகனை பார்த்தவாறு.
அவனும் ருத்ராவை பார்த்து வெட்கப் புன்னகை சிந்தி "என்னை உன் தமையனாக ஏற்றதில் மிகவும் மகிழ்ச்சி ருத்ரா" என்று அவள் முன் தலையை சிறிது சாய்த்து தன் நன்றியை தெரிவித்தான்.
மூவரும் பேசி சிரித்து மகிழ்ந்து இருந்தனர். பின்னர் குகன் இருவரிடமும் விடை பெற்று தன் கானகத்தை நோக்கி சென்றான்.
அரண்மனையில் ராஜமாதா தன் பேத்தி காதல் நிறைவேற வேண்டும் என்று நினைத்து நல்ல நாள் பார்த்து அவளின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அரண்மனை ஜோதிடரிடம் சென்றார்.
ஜோதிடரும் ருத்ரா தேவியின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து பார்த்தார். அவரின் முகத்தில் கவலை படர்ந்தது. அதை கண்ட ராஜமாதா "என்ன ஜோதிடரே உங்கள் முகத்தில் தெரியும் கவலையை கண்டு என் உள்ளம் பதறுகிறது. ஏதும் அசம்பாவிதமா? என்றார் பயந்த படி.
"கவலையான செய்தி தான். ருத்ரா தேவிக்கு அவரின் இருபத்தியோராம் வயதில் ஒரு கண்டம் இருக்கிறது" என்று தெரிவித்தார்.
அதில் மிகவும் அதிர்ந்த ராஜமாதா என்ன கண்டம்? அதற்கு ஏதும் பரிகாரம் உண்டா? என்று கேட்டார்.
பரிகாரம் செய்ய அவசியம் இருக்காது. அவருக்கு திருமணம் நடக்க வில்லை அல்லவா? ஆகையால் அவரின் தலைக்கு வந்த ஆபத்து தலை பாகையுடன் சென்று விடும் என்று கூறினார்.
ருத்ரா தேவிக்கு திருமணம் எப்போது செய்யலாம் என்று கேட்ட ராஜமாதாவிடம் இளவரசியின் பிறந்த நாள் அன்றே சிறப்பாய் செய்யலாம் என்று பதில் கொடுத்தார் ஜோதிடர்.
தன் அறைக்கு வந்த ராஜமாதா ருத்ராவிற்கு எந்த கண்டமும் வர கூடாது. அவளை நீ தான் காக்க வேண்டும் என்று ருத்ரமாதேவியிடம் வேண்டிக் கொண்டார்.
ருத்ரா தேவி எதைப் பற்றியும் கவலை இல்லாமல் யாழ் வேந்தனை நினைத்து எப்பொழுதும் கனவிலேயே மிதக்கலானாள்.
யாழ் வேந்தன் என்று அவனின் அன்னையை அழைத்து வருவான் என்று எதிர்பார்த்து காத்திருக்கலானாள்.
மகாதேவனும் மயூரா தேவியும் அவர்கள் மகள் ருத்ரா தேவியின் செயலில் வித்தியாசம் தெரிய அவளுக்கு என்ன ஆயிற்று என்று புரியாமல் இருந்தனர்.
அவர்களின் குழப்பம் கண்ட ராஜமாதா அவர்களிடம் நம் நாட்டிற்கு மருத்துவம் கற்றுக் கொள்ள வந்த யாழ் வேந்தனை ருத்ரா தேவி காதலிப்பதாக கூறினார்.
ராஜமாதா கூறியதை கேட்டு மகாதேவனுக்கு உள்ளுக்குள் ஏதோ மகிழ்ச்சியாக இருப்பது போல் இருந்தது. தன் மகள் காதலித்தவனுடன் நலமாக வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். மயூரா தேவியும் அப்படி என்றால் அவளுக்கு அவனுடன் விரைவில் திருமணம் செய்து வைத்து விடலாம் என்றார்.
இப்படி இவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்க அவ்விடம் வந்த சேவகன் கோட்டை வாயிலில் யாழ் வேந்தன் தன் குடும்பத்துடன் மகாராஜாவைக் காண அனுமதி வேண்டி காத்திருப்பதாக கூறினான்.
உடனே அவர்களை தகுந்த மரியாதையுடன் அழைத்து வருமாறு உத்தரவு விட்டுவிட்டு, அவனும் அவர்களை எதிர் கொள்ள வாயில் நோக்கி தன் மனைவி மற்றும் தாயுடன் சென்றான்.
இவர்கள் மூவரும் வாயிலுக்கு செல்லவும், யாழ் வேந்தன் தன் குடும்பத்தினருடன் வரவும் சரியாக இருக்க, யாழ் வேந்தனின் அருகில் வந்த அவனின் தாயைக் கண்ட மயூரா கண் கசக்கி அவரின் அருகில் சென்று "மாதங்கி" என்க, அவளும் ஆமாம் என்ற தலை ஆட்ட, அவளை இறுக அணைத்து அழளானார்.
மகா தேவனுக்கு அந்தப் பெண்மணி மயூரா தேவியின் உயிர்த்தோழியும் அவளின் அண்ணனின் மனைவியும் ஆன மாதங்கி என்பது புரிய அவர் யாழ் வேந்தனை பார்த்தார்.
யாழ் வேந்தன் தன்னுடன் வந்திருக்கும் அனைவரையும் காட்டி இவர்கள் அனைவரும் என் சொந்த பந்தங்கள். தன் அருகில் இருந்த மாதங்கியை தோளுடன் அணைத்து இவர் என் தாய் என்று அறிமுகப்படுத்தி, வரிசையாக சீர்வரிசைகளை அடுக்கினான்.
நான் உங்கள் மகள் ருத்ரா தேவியை திருமணம் செய்ய உங்களின் அனுமதி வேண்டி காத்திருக்கின்றேன் என்றான்.
மயூரா தேவிக்கு தன் அண்ணனின் மகன் தன் பெண் ருத்ரா தேவியை மனம் முடிப்பதில் மிகவும் மகிழ்ந்தார். மகாதேவனும் மயூரா தேவியும் சம்மதம் சொல்லி தன் மகளை யாழ் வேந்தன் மணமுடிக்க சம்மதித்தனர்.
அனைவரும் சம்மதித்ததும் மகாதேவன் ராஜ குருவை அழைத்து வரும் நல்ல நாளில் ருத்ரா தேவிக்கு மணமுடிக்க ஒரு நல்ல நாள் பார்க்க கூறினார்.
அவரும் ருத்ராவின் பிறந்தநாள் அன்று நல்ல நாளாகவே இருப்பதை தெரிவித்து அன்று திருமணம் செய்யலாம் என்று கூறினார். அனைவருக்கும் அதுவே சரியாகப் பட்டது. ராஜமாதா ருத்ராவிற்கு இருபத்தியோராம் வயதில் கண்டம் இருப்பதை அறிந்து இத்திருமணம் அவளை காக்கும் என்று பெரிதும் நம்பினார்.
கண்டத்தில் இருந்து தப்பிப்பாளா ருத்ரா.....
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்1 week ago
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
- 143 Forums
- 2,623 Topics
- 3,132 Posts
- 3 Online
- 2,141 Members
