ருத்ரமாதேவி - 47
அத்தியாயம் 47
பெரியவர்கள் அனைவரின் சம்மதத்துடன் ருத்ரா தேவியின் திருமண வேலைகள் தொடங்கியது. ருத்ரா தேவி மாளிகையில் யாழ் வேந்தன் தன் குடும்பத்துடன் வந்து அவளை மணம் முடிக்க தன் தாய் தந்தையரிடம் சம்பந்தம் வாங்கியது தெரிவிக்கப்பட்டது.
மிகவும் மகிழ்ந்த ருத்ரா தேவி யாழ் வேந்தனின் வருகைக்காக ஆவலாக காத்திருந்தாள்.
நாட்கள் கடக்க நாளை அவள் பிறந்தநாள் மற்றும் யாழ் வேந்தன் ருத்ரா தேவி இருவருக்கும் திருமணம்.
வேங்கை நாடே விழாக்கோலம் கொண்டிருந்தது. கோட்டை முழுவதும் மாவிலைத் தோரணங்களாலும் வண்ண பூக்களாலும் அலங்கரித்து திருமணத்தை விழா போல கொண்டாட காத்து இருந்தனர்.
விடிந்தால் திருமணம் என்ற நிலையில் இதுவரை யாழ் வேந்தனை பார்க்க எவ்வளவோ முயன்ற ருத்ராவால் அவனை சந்திக்க மட்டும் முடியவே இல்லை.
அவள் தன் தோழி அத்வைதாவிடமும் தெரிவித்து இருக்க, அவளும் குகனிடம் தெரிவித்திருந்தாள். இருந்தும் யாழ் வேந்தன் அவளை சந்திக்க வரவே இல்லை.
அதனால் கோபம் கொண்ட ருத்ரா தான் தனியாக இருக்க விரும்புவதாக கூறி தோழிகள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு கதவை தாளிட்டுக் கொண்டாள்.
கோபத்தில் எப்பொழுது தூங்கினால் என்பதை அறியாமல் உறங்கிவிட உறக்கத்தில் ஏதோ அவளை பார்ப்பது போல் உள்ளுணர்வு தோன்ற சற்றென்று கண் விழித்தாள் ருத்ரா.
அவளையே பார்த்து அமர்ந்து கொண்டிருந்தான் யாழ் வேந்தன். அவனை கண்டதும் எழுந்து அமர்ந்து கோபம் மறந்து மகிழ்வாய் அவனிடம் "எப்படி இருக்கிறீர்கள்?" என்று சிறிது அணைத்தாள்.
அவள் அணைப்பை அவன் மேலும் இறுக்கி, "எனது தாய் உன்னை பார்க்க கூடாது என்று கூறி விட்டதால் என்னால் உன்னை பார்க்க வர இயலவில்லை. ஆனால் இன்று எப்படியாவது உன்னை பார்த்து விட வேண்டும் என்று உன் முன்னே வந்து விட்டேன்" என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
வெகு நாள் கழித்து சந்தித்த காதலர்கள் இருவரும் உலகம் மறந்து பேசிக் கொண்டிருக்க அரண்மனையில் புதிதாய் ஒரு படை மெதுவாய் உள்ளே நுழைந்து கொண்டிருந்தது.
பேச்சின் முடிவில் அவளை அவன் நாட, அவளோ விடிந்தால் திருமணம் தயவு செய்து இப்பொழுது வேண்டாம் என்று மறுக்க, அவளின் கழுத்தில் முகம் புதைத்து "நாளை வரை காத்திருக்க என்னால் இயலாது தேவி" என்று மோகம் வழிய மெதுவாய் கூறி, அவளை மெல்ல பின் நகர்த்தி மஞ்சத்தில் கிடத்தினான்.
அகம்பனன் அவனின் பாட்டனாரின் படை மற்றும் அவருக்கு உதவிய இரு சிற்றரசர்கள் படை என்று மூன்று படைகள் வேங்கை நாட்டு கோட்டைக்குள் அகம்பனனின் உதவியுடன் நுழைந்தது.
இறுதி நாழிகையிலேயே வேங்கை நாட்டு வீரர்களுக்கு தெரிய உடனே அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு செய்தி கூறப்பட, மகாதேவன் நம்பிக்கையான அமைச்சர்களை ரகசியமாக சந்திக்க அழைத்தான்.
அழைத்த அரை நாழிகைக்குள் அனைவரும் ஒன்று கூட, கோட்டையைச் சுற்றி மட்டும் அல்ல கோட்டைக்குள்ளும் எதிரிகள் வந்ததை அறிந்து மகாதேவன் மிகவும் அதிர்ந்தான். எப்படி இது சாத்தியமாயிற்று. எங்கே நம் வீரர்கள் கோட்டை விட்டனர்? என்று கேட்டு விட்டு, இனி அதைப் பற்றி யோசிப்பதில் ஒரு பயனும் இல்லை. எப்படி இதில் அவர்களை எதிர்கொள்வது என்று சேனாதிபதியிடம் கேட்க, "நம் வீரர்கள் எப்பொழுதும் தயாராகவே இருக்கின்றார்கள். இப்பொழுது கோட்டையிலேயே யுத்தம் என்பதால் ஒன்றும் பிரச்சனை இல்லை. இன்னும் அரை நாழிகைக்குள் அனைவரையும் தயார்படுத்தி விடுவேன்" என்று கூறி அரசரை வணங்கி தன் படையை திரட்ட வெளியேறினான்.
அரசரை எதிர்க்க ஒருவன் துணிந்து இருக்க, அரசருக்கு ஆதரவாக பலர் கூடி நின்றனர். இப்படி நடு ஜாமத்தில் அரண்மனை அமைதியாக இருப்பது போல் பரபரப்பாக இருந்தது. இதை எதையும் அறியாத ருத்ரா தேவி தன் தலைவனுடன் கூடி துயில் கொண்டிருந்தாள். நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் வெளியில் ஏதோ சத்தம் சத்தம் கேட்பது போல் தோன்ற, மெதுவாய் கண் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். அருகில் யாழ் வேந்தன் ஆழ்ந்து நித்திரையில் இருந்தான். மெதுவாய் எழுந்து கதவை திறந்து வெளியே பார்க்க வீரர்கள் அங்கும் இங்கும் சென்று கொண்டிருப்பது தெரிய, திருமண வேலை தொடங்கி விட்டது என்று நினைத்து குளித்து தயாராகச் சென்றாள்.
அவள் குளித்து முடித்து நீல நிற மேலாடை, செந்நிற புடவை அணிந்து வெளியே வர அபாய மணி ஒலித்தது. அதில் அதிர்ந்த ருத்ரா தேவி விரைந்து தன் வாள் எடுத்து வெளியே வர, யாழ்வேந்தன் அந்த அபாய மணி ஓசையில் எழுந்து அமர்ந்தான். என்ன ஓசை இது என்று உப்பரிகையில் இருந்து பார்த்தான். அப்பொழுது அரண்மனை முழுவதும் வீரர்கள் வேகமாக சென்று கொண்டு இருப்பது தெரிய, ஏதோ ஆபத்து என்று உணர்ந்தான். தன் அறையை நோக்கி செல்ல நினைத்தவன் ருத்ராவிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என்று அறைக்குள் வர அங்கு செந்நிற புடவையில் தேவதை போல் இருக்கும் ருத்ராவை கண்டு அவளின் அருகில் நெருங்க, அவள் கையில் வாள் ஏந்தி போர் செய்ய தயாராக நிற்கும் காட்சியில் என்ன என்று புருவம் உயர்த்தி கேட்டான்.
"வேந்தே, அபாயமணி ஒலித்திருக்கிறது. ஏதோ ஆபத்து அரண்மனையில் நிகழ்கிறது. என்ன என்று தந்தையைக் பார்த்து கேட்க வேண்டும். நான் அவ்விடம் செல்கிறேன். தாங்கள் என்னுடன் வருகிறீர்களா?" என்று படபடப்பாக கேட்டாள்.
"நான் விருந்தினர் மாளிகைக்குச் சென்று தாயிடம் தெரிவித்துவிட்டு வருகிறேன். நீ முன்னால் செல்" என்று அவளை தனியே அனுப்பி மீண்டும் ஒரு தவறு செய்தான்.
விருந்தினர் மாளிகைக்கு வந்த யாழ் வேந்தன் தன் தாயிடம் "வேங்கை நாட்டு கோட்டையில் ஏதோ ஆபத்து. நான் அரண்மனைக்குச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என்று கூறிவிட்டு வேகமாக அரண்மனை நோக்கி சென்றான்.
தன் மாளிகையில் இருந்து அரண்மனை நோக்கி வேகமாக சென்ற ருத்ரா தேவியை, கார் இருள் வண்ண உடை அணிந்த வீரர்கள் சுற்றி வளைத்தனர்.
அவர்கள் உடையை வைத்து அகம்பனனின் ஆட்கள் என்று தெரிந்த ருத்ரா, மனதிற்குள் தன் அண்ணனே தன்னை கொள்ள ஆள் அனுப்பியுள்ளான் என்று சிறிது வருந்தினாலும் அந்த வருத்தத்தை உடனே களைந்து அவர்களை எதிர்த்து போரிட தொடங்கினாள்.
சூரியன் உதிக்கும் முன்பே அரண்மனை முழுவதும் போர் தொடங்கியது. எங்கும் எதிரிகள் சூழ்ந்து இருந்த வேங்கை நாட்டின் கோட்டையை காப்பாற்ற வேங்கை நாட்டு வீரர்கள் வேங்கை என போரிட்டுக் கொண்டிருந்தார்கள்.
போர் வலுப்பெற்றது.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்1 week ago
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
- 143 Forums
- 2,623 Topics
- 3,132 Posts
- 3 Online
- 2,141 Members
