👇 கதைகள் வாசிக்க / கேட்க 👇
💎 Premium Site🛒 Amazon Kindle▶️ YouTube Audio
Skip to content
Share:
Notifications
Clear all

ருத்ரமாதேவி - 51

1 Posts
1 Users
0 Reactions
132 Views
Arulmozhi Manavalan
(@arulmozhi-manavalan)
Posts: 148
Member Author Access
Topic starter
 

அத்தியாயம் 51

 

       ருத்ராவின் கல்லூரியிலிருந்து கேரளாவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார்கள். அதில்  முதல் நாளான இன்று ஆலப்புழாவில் போட் ஹவுஸ் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

 

ஒரு நாள் முழுவதும் போட் ஹவுஸ் பயணம். மிதக்கும் படகு வீட்டில் பயணித்துக் கொண்டே ரம்யமான இரு புறமும் தென்னை மரங்கள் நிறைந்த இடத்தை ரசித்துக் கொண்டும் அந்த பரந்த ஆற்றில் எதிரிலும் தங்களை தொடர்ந்து வரும் விதவிதமான போட் ஹவுஸ்களை ரசித்து பார்த்துக் கொண்டும் மாணவர்கள் மகிழ்ச்சியாக பயணித்தார்கள். 

 

மறுநாள் மதியத்திற்கு மேல் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி செல்ல திட்டம். அதன் படியே போட் ஹவுஸில் இருந்து கிளம்பி அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த ரிசாட்டில் மாணவர்களை தங்க வைத்தார்கள் பேராசிரியர்கள். 

 

அறையின் அளவைப் பொறுத்து இருவர் மூவர் நால்வர் ஐவர் என்று பிரித்துக் கொடுத்துக் கொண்டிருக்க, இருவர் தங்கும் அறை கலைச்செல்விக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கிடைத்தது. ருத்ராவிற்கு வேறு தோழிகளுடன் தங்க அறை கிடைக்க, அவள் பேராசிரியர்களிடம் கூறிவிட்டு தன் தோழிகள் இருவருடன் ஒரே அறையில் தங்கி கொண்டாள். 

 

மறுநாள் காலை அனைவரும் கிளம்பி அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி நோக்கி சென்றார்கள் நீர்வீழ்ச்சியின் மேல் பரப்பிற்கு முதலில் சென்று பார்த்தனர். அந்த பரந்த இடத்தில் நீர் கிளைகள் கொண்டு ஓடும் இடம்  மிகவும் அருமையான காட்சியாக இருந்தது.  

 

பின்னர் சிறிது இறங்கி நீர்வீழ்ச்சியின் உயரத்தை கீழ் இருந்து பார்க்கும்போது அவர்கள் மேல் தெரிக்கும் நீர்ச்சாரல் அவர்களை பரவசப்படுத்தியது. 

 

மாணவர்கள் தண்ணீரில் இறங்கி குளிக்க முயற்சிக்க அங்கு வந்த காவலர்கள் தண்ணீரில் இறங்கக்கூடாது என்று அனைவரையும் மேலே செல்லும்படி கூறி அனுப்பினார்கள். கல்லூரி மாணவர்கள் சொல்பேச்சு கேட்பார்களா என்ன?. 

 

கேலி கலாட்டா விளையாட்டு என்று அன்றைய பொழுது மகிழ்ச்சியாக அனைவருக்கும் கழிந்தது. இரவு அவர்கள் தங்கி இருந்த ரெசாட்டில் கேம்ப்ஃபயர் ஏற்பாடு செய்திருக்க ஆடல் பாடல் என்று மாணவர்கள் விளையாண்டு மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். 

 

நாளையபொழுது போகும் வழியில் உள்ள ஒரு சில இடங்களை பார்த்துவிட்டு நாளை இரவு ரயில் ஏற வேண்டும் என்று பேராசிரியர்கள் அவர்களுக்கு நாளைய நேர பட்டியலை கூறிவிட்டு அனைவரையும் உறங்க அனுப்பினார்கள். 

 

மிகவும் களைப்பாக அறைக்கு வந்த ருத்ரா ஐஸ்வர்யாவிடம் சொல்லிவிட்டு படுத்து உடனே உறங்கி விட்டாள். 

 

சிறிது நேரம் ஐஸ்வர்யாவும் கலைச்செல்வியும் பேசிக்கொண்டே இருக்க இருவரும் அப்படியே கண்  அயர்ந்தனர். 

 

ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது கலைச்செல்வியின் கைபேசியில் மெசேஜ் வந்த சப்தம் கேட்க, மெதுவாய் கண் திறந்து மெசேஜை பார்த்த கலைச்செல்வி அதிர்ந்து எழுந்து அமர்ந்தாள். 

 

ஐந்து நிமிடத்தில் அவளுக்கு மற்றொரு மெசேஜ் வந்தது நடுக்கத்துடன் எடுத்து படிக்க உடனே அவளை இங்கு (ஒரு இடம் குறிப்பிட்டு) வந்து காணும் படி இருந்தது. 

 

கண்களில் நீர் நிற்காமல் வழிய என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் பித்து பிடித்தது போல் அமர்ந்திருந்தாள். 

 

இயற்கை உபாதைக்கு எழுந்த ருத்ரா அமர்ந்து கொண்டிருந்த கலைச்செல்வியை பார்த்து "கலை, கலை" என்று அவளை அழைக்க, அவளோ எங்கேயோ வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். 

 

அவளின் கவனம் இங்கு இல்லை என்பதை உணர்ந்த ருத்ரா அவள் கையில் இருக்கும் கைபேசியை பார்த்தாள். அதை எடுத்து பார்க்க யாரோ அவளை அழைத்து இருப்பது தெரிந்தது. அதற்கு முன் இருந்த வீடியோவை பார்த்து அதிர்ந்தாள் ருத்ரா. 

 

ஒரு நிமிடம் அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தன் தோழியை உலுக்கி அவளை சுய உணர்வுக்கு கொண்டு வந்தாள். ருத்ராவை கண்டதும் அவளை இறுக்கி அணைத்து அழ ஆரம்பித்து விட்டாள் கலைச்செல்வி. 

 

அவளின் அழுகை சத்தத்தில் விழித்த ஐஸ்வர்யாவிற்கு கலைச்செல்வி ஏன் அழுது கொண்டே இருக்கிறாள் என்பது தெரியவில்லை. ருத்ரா அவளை ஆறுதல் படுத்தி அமைதியாக இருக்கும்படி செய்து, தன் கைபேசியில் இருந்து தமிழ் வேந்தனுக்கு அழைத்தாள். 

 

நல்ல உறக்கத்திலிருந்து தமிழ்வேந்தன் இந்த நேரத்தில் யார் என்று கைப்பேசியை எடுத்துப் பார்க்க, ருத்ரா என்றதும், வெகு நாள் கழித்து அவளாகவே முதல் முறை அவனை அழைத்து இருக்கிறாள் என்பதில் மகிழ்ந்து உடனே ஆன் செய்து "என்ன ருத்ரா?" என்றான். 

 

அவள் உடனே அவனுக்கு கலைச்செல்வி ஃபோனில் உள்ள இடத்தை குறிப்பிட்டு அங்கு சென்று இருப்பவர்களை பிடித்த வைத்துக் கொள்ளுங்கள் என்று கூற, அவன் என்ன விஷயம் என்று கேட்க, ஒரு ஆபத்து கலைச்செல்வியை அந்த இடத்திற்கு வரச் சொல்லி மிரட்டி உள்ளார்கள். அங்கு உள்ளவர்கள் அது யார் என்று தெரியவில்லை தயவு செய்து விரைவாக சென்று அவர்களை பிடித்து விடுங்கள் என்றாள். 

 

அவள் கூறியதும் தமிழ் வேந்தன் ராஜசேகரன் மற்றும் மற்றொரு பேராசிரியருடன் ருத்ரா குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்றார்கள். 

 

அங்கு மூன்று பேர் அமர்ந்து குடித்துக் கொண்டு இருந்தார்கள். அதில் ஒருவன் "என்னடா குட்டி வருமா? வராதா? இவ்வளவு நேரம் ஆகிறது" என்றான். 

 

"கண்டிப்பாக வரும். கவலைப்படாதே டா. இன்று உனது நாள் தான்" என்று மற்றொருவன் சொல்லிக் கொண்டிருக்க, தமிழ் வேந்தனுக்கு ஓரளவு புரிந்தது. 

 

உடனே அவர்கள் எதிரில் சென்று, அவர்கள் மூவரையும் அடிக்க ஆரம்பித்தார்கள் பேராசிரியர்கள். திடீரென்ற தாக்குதலில்  அவர்கள் கீழே விழுந்தனர். 

 

பின்னர் கல்லூரி பேராசிரியர்கள் என்று உணர்ந்து‍, தங்கள் செயல் அவர்களுக்கு தெரிந்து விட்டது என்று பயந்து, அங்கிருந்து ஓட முயன்றார்கள். அதற்குள் அந்த சத்தத்தில் ஹோட்டல் ஊழியர்களும் அவ்விடம்  கூடிவிட்டனர். 

 

அந்த ரெசார்டின் மேனேஜர் வந்து இவர்கள் அடிப்பதை தடுத்து என்ன என்று விசாரிக்க,  தமிழ் வேந்தன் அவரிடம் கல்லூரி பெண்களை கலாட்டா செய்துள்ளார்கள் இம்மூவரும்.  இவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி அம்மூவரையும் கட்டி வைத்துவிட்டு, இவர்களை தப்பிக்க வைத்து விடாதீர்கள் என்று கூறி ராஜசேகரை காவலுக்கு வைத்துவிட்டு ருத்ராவின் அறைக்குச் சென்றான். 

 

அவளின் அறைக்குச் சென்று கதவை தட்டினான். பயந்து போய் மூவரும் கட்டிப்பிடித்து அமர்ந்து கொண்டிருந்தார்கள். அவன் கதவை தட்டியதில் பயந்த ருத்ரா "யாரது" என்றாள். 

 

"நான் தான். கதவை திற" என்ற தமிழ் வேந்தனின் குரலில் வேகமாய் வந்து கதவை திறந்தாள் ருத்ரா. 

 

தொடரும்....

 

- அருள்மொழி மணவாளன்...


 
Posted : December 26, 2025 6:26 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved