👇 கதைகள் வாசிக்க / கேட்க 👇
💎 Premium Site🛒 Amazon Kindle▶️ YouTube Audio
Skip to content
Share:
Notifications
Clear all

ருத்ரமாதேவி - 52

1 Posts
1 Users
0 Reactions
82 Views
Arulmozhi Manavalan
(@arulmozhi-manavalan)
Posts: 148
Member Author Access
Topic starter
 

அத்தியாயம் 52

 

       ருத்ரா ஃபோன் செய்ததும் அவள் சொன்ன இடத்தில் இருந்த மூவரையும் அடித்து கட்டி வைத்துவிட்டு அவர்கள் அறைக்கு வந்து கதவைத் தட்டினான். 

 

      கதவு திறந்ததும் நேராக உள்ளே வந்து கலைச்செல்வி இடம் "உன்னை அங்கு வரச் சொன்னவன் யார் என்று தெரியுமா?" என்று கேட்டான். 

அவள் அவன் முகத்தை பார்க்க தயங்கி, தலை குனிந்து, இல்லை என்று தலையாட்டினாள். 

 

தன் தோழி இருக்கும் மனநிலையில் அவள் பிற ஆண்களை பார்க்கத் தயங்குவது தெரிய ருத்ரா தமிழ் வேந்தனிடம்,  "கலைச்செல்வியின் ஃபோனுக்கு ஒரு வீடியோ அனுப்பியுள்ளார்கள். அது இந்த அறையின் குளியல் அறையில் கலைச்செல்வி குளிக்கும் பொழுது எடுக்கப்பட்டிருக்கிறது" என்று தயங்கிய படியே கூறினாள் ருத்ரா. 

 

அதைக் கேட்டதும் தமிழ் வேந்தனுக்கு கோவம் தலைக்கு ஏறியது. அவர்களை அடித்தே கொல்லும் அளவிற்கு வெறி ஏறியது. 

 

இருந்தும் நடந்த செயலின் வீரியம் உணர்ந்து உடனே தங்கள் கல்லூரிக்கு அழைத்து விஷயத்தை தெரியப்படுத்தினான். 

 

பின்னர் ருத்ராவின் தந்தைக்கு அழைத்து அவரிடம் தெரிவிக்க அவர் பிள்ளைகளை பயப்படாமல் பார்த்துக் கொள்.  நான் உடனே அங்கு வருகிறேன் என்று அவனிடம் கூறினார். 

 

கலைச்செல்வியின் பெற்றோருக்கு தெரிய படுத்தவா என்ற தமிழ் வேந்தனிடம், வேண்டாம் முதலில் நான் அங்கு வருகிறேன். பின்னர் நேரில் சென்று அவர்களிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டார்.

 

கல்லூரி நிர்வாகம் மூலம் உடனே சென்னை கமிஷனருக்கு செய்தி தெரிவிக்கப்பட அவர் கேரளாவில் அந்த ஏரியா காவல் நிலையத்திற்கு அழைத்து உடனே நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். 

 

அடுத்த அரை மணி நேரத்திற்குள் அங்கு கேரள காவல்துறையினர் வந்து விசாரிக்க தொடங்கினர். 

 

விசாரணை தொடங்கிய சிறிது நேரத்திற்குள் சங்கிலி தொடர் போல் வரிசையாக நிறைய பெயர்கள் அடிபட ஆரம்பித்தது. அவர்கள் கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவன் ஒருவன் உதவியில் அந்த மூவருக்கும் இன்று சுற்றுலா போவது தெரிய, அவர்களில் ஒருவன் அவர்கள் தங்கும் இந்த விடுதியில் இந்த அறையில் அங்கு வேலை செய்யும் ஊழியன் ஒருவன் உதவியுடன் குளியல் அறையில் கேமரா வைத்து பதிவு செய்துள்ளார்கள். 

 

முதலில் அந்த ஊழியனை பிடித்து விசாரிக்க பணத்திற்கு ஆசைப்பட்டு இப்படி செய்து விட்டதாக கூறி, மன்னிப்பு கேட்டு சரண் அடைந்தான். 

 

அந்த மூவரும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பொழுது போக்கிற்கு சாதாரண குடும்பத்து பெண்களை இதுபோல் வீடியோ எடுத்து மிரட்டி தங்கள் ஆசைக்கு இணங்க வைப்பார்கள். திமிரினால் அடித்து பணிய வைப்பார்கள். இல்லை என்றால் வீட்டிற்கு தெரியப்படுத்தி நெட்டில் உலவ விட்டு விடுவோம் என்றும் மிரட்டி பயமுறுத்தி பணிய வைப்பார்கள். 

 

அவர்களின் இலக்கு ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவின் குடும்பம் சாதாரண குடும்பம் அவர்கள் மானத்திற்கு பயந்து நடுங்குபவர்கள். ஆனால் இன்று மாட்டியது கலைச்செல்வி. 

 

அந்த மூவரையும் அடித்து விசாரித்ததில் அதில் ஒருவன் எக்ஸ் எம்எல்ஏவின் மகன். ஒருவன்  தஞ்சை அரசு கலைக்கல்லூரி முதல்வரின் மகன். ஒருவன் கோடீஸ்வரனின் மகன். இப்படி பணமும் அதிகாரமும் இருந்த கொழுப்பில் தங்கள் தேவைக்கு, இல்லாதவர்களை மிரட்டி பயன்படுத்திக் கொண்டார்கள். 

 

இப்படி விசாரணை தொடர்ந்து போய்க்கொண்டிருக்க பத்து மணி அளவில் ருத்ராவின் தந்தை சதாசிவம் அங்கு வந்து சேர்ந்தார். 

 

தந்தையை கண்டதும் ருத்ரா விரைந்து வந்து அணைத்துக் கொள்ள, அவரும் அவளின் உச்சி முகர்ந்து, கலைச்செல்வி ஐஸ்வர்யா இருவரையும் சிறிது அணைத்து ஆறுதல் கூறினார். 

 

பின்னர் கலைச்செல்வியிடம் இதை இப்பொழுதே மறந்து விடு. இதைப்பற்றி இனிமேல் யோசிக்காதே. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ஆறுதல் கூறினார். 

அவளும் சரி என்று மௌனமாய் தலையாட்டினாள். 

இந்த குற்றத்தை செய்தவர்கள் ஹோட்டல் ஊழியனைத் தவிர மற்ற அனைவரும் முழுக்க முழுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.  ஆகவே கேரள காவல்துறையினர் தமிழ்நாட்டு காவல்துறையினரிடம் அம்மூவரையும் ஒப்படைத்தனர். 

 

காலை பத்து மணி அளவில் ஐஸ்வர்யா, ருத்ரா, கலைச்செல்வி, தமிழ்வேந்தன் இவர்களைத் தவிர மற்றவர்களை அழைத்துக் கொண்டு கல்லூரி சுற்றுலா பேருந்து கிளம்பி, அவர்கள் திட்டமிட்டபடி சுற்றுலா முடித்து இரவு ரயில் நிலையம் சென்று இருந்தார்கள். 

இங்கு கேரளா போலீஸ் தமிழ்நாட்டு போலீஸ் உடன் பேசி அம்மூவரையும் ஒப்படைக்க மணி மாலை 7 ஆகியது. அதன் பிறகு மகாதேவன் பிள்ளைகளையும் தமிழ் வேந்தனையும் அழைத்துக் கொண்டு ரயில் நிலையம் வந்தார்.

அவர்கள் வந்த பிறகு சுற்றுலா சென்று இருந்த கல்லூரி மாணவர்களும் வர அனைவரும் ஒன்றாகவே சென்னை நோக்கி பயணம் மேற்கொண்டனர். 

 

அவர்கள் சென்னை வருவதற்கு முன்பே செய்தி அறிந்த சில பெற்றோர்கள் சென்னை ரயில் நிலையத்தில் கூடி இருந்தனர். ரயில் வந்ததும்  அவரவர் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். 

 

மகாதேவன் மூன்று பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது வீட்டிற்கு வந்தார். கலைச்செல்வி ஏதோ இழந்தது போல் கவலையாகவே இருந்தாள். அவள் வந்ததும் மகாதேவி அவளிடம்  கவலைப்படாதே. அனைத்தையும் மறந்துவிடு. எதையும் யோசிக்காதே என்று அணைத்து ஆறுதல் கூற, மகாதேவியை கண்டதும் அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது. 

 

அதே நேரம் அங்கு வந்த அன்பரசுவை கண்ட கலைச்செல்வி அவனை பார்க்க தயங்கி ருத்ராவின் அறைக்கு ஓடினாள். 

 

முதலில் அவள் ஏன் ஓடுகிறாள் என்று புரியாமல் நின்ற அன்பரசுக்கு மகாதேவன் போனில் சொன்ன செய்தி நினைவு வர, அவள் தன்னை பார்க்க தயங்கி ஓடுகிறாள் என்று புரிய மனது சிறிது வலித்தது. 

 

சோகமாக அவன் மகா தேவனை காண அவர் 'போய் பேசு' என்ற படி தலையாட்டினார். உடனே அவன் ருத்ராவின் அறைக்குச் செல்ல அங்கே கட்டிலில் அமர்ந்து முட்டியில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள் கலைச்செல்வி

 

.

அவளின் முதுகு குலுங்குவதிலேயே அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து மெதுவாய் அவள் முதுகை தடவி விட்டான். 

 

அன்பரசுவின் கை பட்டதும் நிமிர்ந்து அவனைப் பார்த்த கலைச்செல்வி அவனை வயிற்றுடன் கட்டி அணைத்துக் கொண்டாள். 

 

அவளுக்கு அந்த வீடியோ நினைவே வந்தது. அதை நிறைய பேர் பார்த்திருப்பார்களோ? என்று பயந்து போய் இருந்தாள்.

 

அன்பரசுவை கண்டதும் அவளுக்கு அழுகை பீரிட்டு வந்தது. அவன் அவள் முதுகை தடவி ஆறுதல் அளித்து "தயவுசெய்து இதை மறந்துவிடு கலை" என்றான் மென்மையாக.

 

தொடரும்...

 

- அருள்மொழி மணவாளன்...


 
Posted : December 27, 2025 1:26 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved