ருத்ரமாதேவி - 53
அத்தியாயம் 53
அன்பரசு கலைச்செல்வியை ஆறுதல்படுத்த நடந்தவற்றை எல்லாம் மறந்து விடு என்று கூறினான்.
அவளோ 'இல்லை' என்று மறுப்பாக தலையாட்டி, "நீங்கள் வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு வேண்டாம்" என்று கைகளால் முகத்தை மூடி அழுக ஆரம்பித்து விட்டாள்.
அவள் கைகளை எடுத்து விட்டு "இங்கே பார். என்னை பார்" என்று சொல்ல, அவளோ அவனை பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்து அமர்ந்தாள்.
அவனின் நாடி பிடித்து முகம் உயர்த்தி அவனை காணச் செய்து, "நீ என் மனைவி. அதை மட்டும் நினைவில் கொள்" என்று கோவமாக கூறிவிட்டு அறையில் இருந்து வெளியேறி, மகாதேவனிடம் "அவள் இங்கேயே இருக்கட்டும் அங்கிள்" என்று கூறி வெளியேறினான்.
அவன் நேராகச் சென்றது தமிழ் வேந்தனிடம். நடந்ததை விசாரித்து யார் என்று எதுவும் தெரிந்ததா என்று கேட்டான்.
காவல்துறையினர் கூறியவற்றை கூறி, அவர்களுக்கு தண்டனை கொடுத்தாகி விட்டது என்றான்.
அம்மூவர்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி இருக்க ஏன் இப்படி கலைச்செல்விக்கு நடக்க வேண்டும்? என்று யோசிக்கலானான்.
ஆனால் அவர்கள் நினைத்ததை போல் எளிதாக அக்கயவர்களுக்கு தண்டனை வாங்கித் தர இயலவில்லை. அவர்கள் செல்வாக்கால் அவர்கள் மேல் தவறு இல்லை என்று சொல்லி விடுதலையாகி விட்டார்கள்.
இரு நாட்கள் கழித்து கல்லூரிக்கு செல்ல வேண்டியது இருப்பதால் ஹாஸ்டல் சென்றாள் கலைச்செல்வி.
அரை மணி நேரத்தில் மகா தேவனுக்கு போன் செய்தான் அன்பரசு. கலைச்செல்வி இரண்டாம் மாடியில் இருந்து குதிக்க முயன்றதால் அவளை ஹாஸ்டலில் இருந்த பெண்கள் காப்பாற்றி வார்டனிடம் கூறியிருக்கிறார்கள்.
வார்டன் லோக்கல் கார்டியன் என்ற முறையில் அன்பரசுவை அழைத்து விஷயத்தை கூற அவன் சதாசிவத்துக்கு அழைத்து அவரையும் அங்கு வரும்படி கூறினான்.
சதாசிவம் ஹாஸ்டல் சென்றதும் வார்டன் நடந்தவற்றை கூறிட அவளின் செயல் பற்றி அவளது பெற்றோரிடம் தெரிவிக்க கூற, முதலில் மருத்துவமனை அழைத்துச் சென்று அவளுக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம் என்று அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றார்கள்.
பின்னர் அவளின் பெற்றோர்களுக்கு விஷயம் தெரிவிக்கப்பட, அவர்கள் பயந்து சென்னைக்கு வந்தார்கள். தன் மகளின் நிலையை கண்டு கலங்கிய தாய் அவளை அழைத்துக்கொண்டு ஊருக்கு செல்வதாக கூற, அன்பரசுவும் சதாசிவமும் அவர்களுக்கு எடுத்துக் கூறி புரிய வைக்க முயன்றனர். ஆனால் அவர்கள் பிடிவாதமாக அவள் படித்தவரை போதும் இனி எங்களுடனே இருக்கட்டும் என்று கூறி அவளை ஊருக்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.
அன்பரசுவிற்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் சதாசிவனை பார்க்க, அவர் பொறுத்து இருக்குமாறு கூறி அன்பரசுவின் பெற்றோருக்கும் விஷயத்தை தெரியப்படுத்த அவர்களிடம் அன்பரசு பிடிவாதமாக கூறிவிட்டான். உடனே நான் அவளை திருமணம் செய்வேன் என்று.
சதாசிவத்திற்கும் இருவரின் படிப்பு முடியவில்லை என்ற எண்ணம். அன்பரசுவின் பெற்றோர் படிப்பை பற்றி கவலை இல்லை. கலைச்செல்வி யின் சம்மதம் தான் முக்கியம் என்று கூறி விட்டார்கள்.
அன்பரசு அவள் தனியாக இருந்தால் ஏதேனும் விபரீதமான முடிவு எடுத்து விடுவாள். தயவுசெய்து உடனே திருமணம் செய்து வையுங்கள். நான் அவளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வேன் என்றான் உறுதியாக.
அவனின் கூற்றில் இருந்த நியாயத்தை உணர்ந்த சதாசிவமும் அன்பரசுவின் பெற்றோரும் அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாம் என்று கலைச்செல்வியின் வீட்டில் சென்று பேச, கலைச்செல்வியோ எனக்கு திருமணமே வேண்டாம் என்று ஒரே பிடிவாதமாக கூறினாள்.
அவளின் பெற்றோருக்கும் அவளின் கூற்றில் அதிர்ச்சி அடைய, அன்பரசு அவளின் எதிரில் நின்று "இப்பொழுது நீ என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் என்னை உயிருடன் பார்க்க முடியாது" என்று மிரட்ட, கலைச்செல்வியோ அதிர்ந்து அவனைப் பார்த்து "என்ன கூறுகிறீர்கள் அத்தான். அப்படி பேசாதீர்கள் என்று அவனின் வாயை பொத்த, "அப்படி என்றால் நீ என்னை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்றான்.
அதற்கு அவள், "என்னால் எப்படி உங்களை திருமணம் செய்து கொள்ள முடியும்? என்னை... என்னை... என்று ஏங்கி அழ ஆரம்பித்து விட்டாள்.
அன்பரசு அவளை இறுக்கி அணைத்து, "இங்க பார் கலை. நான் உன்னை மிகவும் விரும்புகிறேன். அது ஏன் உனக்கு புரியவில்லை. அந்த வீடியோ அன்றே டெலிட் செய்து விட்டோம். எங்கும் அந்த வீடியோ வெளியாகவில்லை. தயவு செய்து என்னை நம்பு" என்று அவளின் விழி பார்த்து கூறினான்.
மேலும் அவனே தொடர்ந்து "என்னை நம்பினால் திருமணத்திற்கு ஒத்துக் கொள். இல்லாவிட்டால் விட்டுவிடு" என்று அவன் வாசல் நோக்கி செல்ல… "சம்மதம்" என்று உரக்க கூறினாள்.
அவள் சம்மதித்ததும் இரு பெற்றோர்களும் அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணம் செய்து முடிவு செய்தனர்.
சதாசிவத்திற்கு விஷயத்தை தெரியப்படுத்த அவர் தன் குடும்பத்துடன் அவர்களின் திருமணத்திற்கு ஐஸ்வர்யாவையும் அழைத்துக் கொண்டு வந்தார்.
ஒரு வாரத்திற்குள் சொந்த பந்தம் அனைவருக்கும் கூறி அவசர அவசரமாக கோவிலில் வைத்து திருமணம் என்றாலும் சீரும் சிறப்புமாகவே நடந்தது. திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் மறு வீடு சாஸ்திர சம்பிரதாயங்கள் சடங்குகள் முடிய அன்பரசு கலைச்செல்வியை அழைத்துக்கொண்டு சென்னை வந்தான்.
சிறிது நாட்கள் தங்கள் வீட்டில் இருவரையும் தங்க கூறி, மாடி அறையை அவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.
வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல தொடங்கினார்கள் அனைவரும்.
நாட்கள் கடக்க ருத்ரா தமிழ் வேந்தனிடம் சகஜமாக பேச ஆரம்பித்து இருந்தாள். அது மட்டுமல்ல அவனின் காதலையும் உணர்ந்து இருந்தாள்.
அனைத்தும் சுமூகமாக சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் கல்லூரி முடியும் வேளையில் ருத்ராவிற்காக கேண்டினில் காத்திருந்தான் தமிழ் வேந்தன்.
அவனை அதிகம் காத்திருக்க வைக்காமல் அங்கு வந்த ருத்ரா என்ன என்று கேட்க, நாளை எனக்கு பிறந்தநாள் என்றான்.
அவளும் மகிழ்ந்து, "அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே" என்று அவனுக்கு கை கொடுக்க, அதெல்லாம் இருக்கட்டும் "இதுவரை நீ என்னிடம் ஐ லவ் யூ என்று கூறவில்லை. உன் பிறந்த நாளில் என் காதலை உன்னிடம் தெரிவித்தேன். அதுபோல் என் பிறந்தநாளில் உன் காதலை என்னிடம் தெரிவிப்பாயா?" என்று ஏக்கமாக கேட்டான்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்1 week ago
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
- 143 Forums
- 2,623 Topics
- 3,132 Posts
- 4 Online
- 2,141 Members
