கரை தந்த கடலே!
🌊கரை தந்த கடலே!🌊ஜனவரி -16 -2026 முதல் மாலைமதியில் வெளியாகியுள்ள எனது புத்தம் புதிய நாவல்.
வாய்ப்புள்ளவர்கள் வாங்கி படிங்க. விலை:30/-
அருகிலுள்ள பேப்பர் கடைகளில் கிடைக்கும். சிலது ஏரியாவுக்கு இத்தனை புக் விற்பனை என்று இருக்கும் போல. ஒன்னு சொல்லி வச்சி வாங்கலாம். இல்லை கேட்டு வரவழைக்கலாம்.
பெரும்பாலும் ராணி கண்மணி மாலைமதி அனைத்தும் பேப்பர் கடைகளில் கிடைக்கும்.
ஒகே... கதையைப் பற்றி...
கரை தந்த கடலே! குட்டி டீஸர்....
டேய்... யாரு அடிச்சா? கன்னம் சிவந்திருக்கு. கைரேகை பதிந்திருக்கு" என்றதும் அகில் முகத்தை நிமிட்ட, முகத்தில் கண்ணீர் தீண்டியது.
"யார் அடிச்சா பிரசன்னா?" என்று கேட்க எந்த பதிலும் இல்லை.
"இப்படி தான்டா.. வந்ததிலருந்து அழறான். ஒரு வார்த்தை வரமாட்டேங்குது. கன்னம் ரெட்டிஷா இருந்ததே இப்ப தான் பார்க்கறேன்." என்றான் அகில்.
வருணோ "அங்கிளுக்கு போன் போடுடா" என்றான்.
அகில் எடுக்க முனைய,
.
.
.
.
சலீமோ "ஆங்" என்று விழிக்க, வருணோ, "அகில் ஒரு நிமிஷம். போன் போடாத" என்று அடக்கினான்.
"இப்ப அழறதை நிறுத்திட்டு விஷயத்தை சொல்லலை. அப்பறம் அங்கிளிடம் போன் பண்ணுவோம்" என்று மிரட்டவும், அதற்கு வாய் திறக்கவில்லை.
அவனுக்கு தன் நண்பர்களிடம் பகிர்ந்தாலாவது வலி குறைகின்றதா என்று கூறத் தயாரானான்.
"பொண்ணு பார்க்க போனோம்டா. ஆல்ரெடி அப்பாவுக்கு தான் அந்த பொண்ணை பேசி முடிக்கலாம்னு அங்க போனது. ஒன்னு தெரியுமா? அங்க அந்த பொண்ணு வீட்ல கூட அப்பா தான் மாப்பிள்ளை பையன்னு நினைச்சி காபி ஸ்வீட் எல்லாம் தந்தாங்க. ஆனா அப்பா பேச ஆரம்பிக்கவும் தான், என்னை மாப்பிள்ளைனு சொல்லிட்டார்'' என்று சுஹாசினி வீட்டில் நடந்ததை விவரித்தான்.
"ஏன்டா... அப்பாவுக்கு தான் மேரேஜ் பண்ணற ஐடியா இல்லாதப்ப, நீயா பிரச்சனையை இழுத்து வச்சிட்ட" என்று சலீம் திட்டினான்.
-முழுவதும் வாசிக்க மாலைமதி புத்தகத்தை வாங்கவும்.
*தனக்கு பொண்ணு பார்க்க போய் அப்பாவுக்கு பொண்ணு பார்த்த பையனோட கதை.
பிரதீப்(தந்தை) பிரசன்னா(மகன்)வின் இருவரை ஒட்டிய கதை.
வாசித்தால் உங்கள் கருத்தை பகிர்ந்துக்கொள்ளவும்
Leave a reply
- 143 Forums
- 2,640 Topics
- 3,149 Posts
- 6 Online
- 2,163 Members
