Skip to content
Home » Forum

Forum

Notifications
Clear all

Chicken momos(சிக்கன் மொமோஸ்)

1 Posts
1 Users
0 Reactions
81 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 7 months ago
Posts: 424
Topic starter  

தேவையான பொருட்கள்:

மைதாமாவு

எலும்பில்லாத சிக்கன்-¼கிலோ 

தேவையான அளவு :உப்பு மஞ்சள் தூள், மிளாகாய் தூள், எண்ணெய்

வெங்காயம்-2 

தக்காளி -1 

கரம் மசாலா-½டீஸ்பூன்

பச்சை மிளகாய்-2

இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு

சீரகம் 

கரீவேப்பிலை ,மல்லித்தழை 

செய்முறை :

¼கிலோ காதல் சேச்சே சிக்கனை 🤭 தனியாக நீரில் வேகவைத்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும்‌. அதனை மிக்ஸியில் பொடியாக ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ளவும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு பேஸ்ட், உப்பு, கருவேப்பிலை, பச்சை மிளாகாய் இரண்டு பொடியாக நறுக்கி ஒவ்வொன்றாய் வதக்கி கொள்ளவும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கி கடைசியாக அரைத்து வைத்த சிக்கனையும் சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும். இக்கலவையில் மல்லிதழையை தூவி உள்ளே வைக்க தயாராகும். 

மைதா மாவை பூரிக்கு பிசைந்தது போல பிசைந்து வைத்து தட்டையாக உருட்டி, கொழுக்கட்டைக்கு பூரணமாக வைப்பது போல சிக்கனை சேர்த்து மடித்து இட்லி பாத்திரத்தில் எண்ணெய் தடவி இட்லி வேகவைப்பது போல வைக்க வேண்டும். 

  வேகவைத்த மொமோஸ் சூடாக சாஸ் மயோஸ் தொட்டு சுவைக்கலாம். இதே முறையில் மீட்டரை மொமோஸ் மற்றும் வெஜ் மொமோஸ் செய்யலாம். 

எல்லாம் காலியாகிவிடும். 

 


   
ReplyQuote