Skip to content

Selvarani review for ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்

1 Posts
1 Users
0 Reactions
242 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 520
Member Admin
Topic starter
 

விமர்சகர் : Selvarani

பிரவீணா தங்கராஜின் ஒரு நம்பரின் தவறிய அழைப்பில்.

இளம்பெண்களின் ஆர்வக்கோளாறினால் இன்றைய கால கட்டத்தில் வெளி நபர்களின் ஆசை வர்த்தைகளில் மாட்டிக் கொள்வதுண்டு. வீட்டில் பெற்றவர்கள் பிஸியாக இருப்பது எதனால் என அவர்களும் சொல்லத் தவறுவதே இதற்கு பாதிக்காரணம்.

நண்பர்கள் அரைவேக்காடுகளாய் இருந்தால் நிலைமை இன்னும் மோசம். இந்தக்கதையில் வரும் ஸ்வேதா தன் தோழி வித்யா வீட்டுக்கு தெரியாமல் இன்னொரு ஸிம் பயன்படுத்தி தன் ஆண் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதை பார்த்து இவளும் இப்படி நடந்து கொள்ளத் தொடங்குகிறாள். ரவீஷ் மெல்ல மெல்ல அத்து மீறுவதை உணர்ந்து விலகும்போது அவன் இவள் நம்பரை பொது இடங்களில் எழுதிவைத்து இவளை அசிங்கப்படுத்த, தினம் வேறு வேறு நபர்கள் தொந்தரவு செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

தைரியமாக அதை கடக்கிறாள் .ஒரு நாள் யாரோ ஒருவர் திரும்பவும் போன் பண்ணி நல்லவன் போல பேச ஆரம்பிக்கிறான். வழக்கம் போல உன்னிடம் பேசுவதே எனக்கு ஆறுதல், என் மனைவி ஒழுங்கா பேச மாட்டாள் என ஆரம்பித்து நேரில் வர சொல்கிறான்.

அதன் பின் நடப்பது சபல கேஸ்களுக்கு செருப்படிதான். நாற்பதை தாண்டியவர்கள்தான் இன்று இப்படி அலைபவர்களில் பெரும்பான்மையோர்.

நல்லா எழுதியிருக்காங்க.

 


 
Posted : June 18, 2024 1:02 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved