Anusha David review for இணையவலை கட்செவி அஞ்சல்
விமர்சனம் வழங்கியவர்: அனுஷா டேவிட்
இணையவலை கட்செவி அஞ்சல் ~ பிரவீணா தங்கராஜ்
விழிப்புணர்வு கதை அருமையான கதைகளம். இன்றைய நடைமுறையில் இருப்பது ரொம்ப எதார்த்தமா சொல்லியிருக்காங்க. இன்றைக்கு எல்லாத்துக்கும் போன் வேனும் போன் இல்லனா எதுவுமே பண்ண முடியாது போல சூழல் வந்துடுச்சு. இப்ப குழந்தைகளுக்கு கூட ஆன்லைன் கிளாஸ்க்கு வேணும்னு போன் வாங்கி குடுக்கிறாங்க. எந்த ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பிலும் எந்த அளவுக்கு நன்மை இருக்கோ அதே அளவுக்கு தீமையும் நிறைஞ்சி தான் கிடக்குது . நேரில் பார்த்து ரெண்டு வார்த்தை பேச நேரம் இருப்பது இல்லை ஆனால் முகமே அறியாதவரிடம் ஹாய்ல இருந்து சாப்டியா குளிச்சியா என்ன பண்ற என்ன பிடிக்கும் பிடிக்காதுனு பேசுறாங்க. எதுக்கு இப்படி.
ஆரம்பித்தில் நட்பாக பழகி பின் காதல் எனும் பசுந்தோலை போர்த்திய ஓநாய்கள் காதல் வசனம் பேசி அதையே பிளாக் மெயிலாக (என்ன லவ் பண்றல்ல செய், நம்பிக்கை இருக்கு இல்ல செய்) ஆடையற்ற உடலை காட்டும் அளவுக்கு கொண்டு வந்து அதற்கு மேலும் தவறு செய்வது. இப்படி நடந்த ஒரு பெண் தற்கொலை செய்ய அதன் பின்னான கதையே கதை நகர்வு. முடிவு நைஸ் சிஸ். என் யூகம் தவறா இருந்தது நான் எதிர்பாக்காத ட்விஸ்ட். முன் படித்த கதையை விட இது எழுத்து நன்றாக உள்ளது சிஸ்.
பெண் குழந்தைகளை மட்டும் அல்ல ஆண் குழந்தைகளுக்கும் நல்லது கற்று கொடுக்க வேண்டும். ஒழுக்கம் என்பதை இருபாலருக்கும் கற்று கொடுக்க வேண்டும். பெற்றவர்கள் குழந்தைகளோடு நண்பர்களா பழகி எல்லா விஷயங்களையும் ஷேர் செய்ய பழக வைக்க வேண்டும். கணவன் மனைவிக்கு மனைவி கணவனுக்கு என்று நேரம் ஒதுக்கி மனம் விட்டு பேசுவதிலும் தவறு தவிர்க்கபடும்.
- 130 Forums
- 2,085 Topics
- 2,353 Posts
- 3 Online
- 978 Members