Skip to content

ApsareezBeena Loganathan review for நிலவோடு கதை பேசும் தென்றல்

1 Posts
1 Users
0 Reactions
85 Views
Site-Admin
(@veenaraj)
Prominent Member
Joined: 12 months ago
Posts: 257
Topic starter  

விமர்சன கவிதை வழங்கியவர்.: ApsareezBeena Loganathan

நிலவோடு கதை பேசும் தென்றல் 

ஆசிரியர்:

பிரவீணா தங்கராஜ் 

 

அவந்திகா தன்ஷிகா

கவியரசன்.....

 

தன் அக்காவிற்கு குழந்தை பாக்கியம் இல்லை என 

தன் முதல் மனைவியின்

கண்ணெதிரேயே 

தாய் தந்தை முன் 

தங்கையின் கழுத்தில்

திருமாங்கல்யம் பூட்டி 

திருமணம் செய்யும் கணவன் 

தொடங்கும் கதை.....

தனக்கு என்ன நடந்தது என 

அறியா நிலையில் இருக்கும்

தன்ஷிகா.......

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

அப்பா அம்மாவும் துணை 

அக்காவுக்கும் மாமாவுக்கும் 

அப்படி என்ன நிலை....

அக்கா கணவனை எப்படி

அவள் வாழ்க்கையில் ஏற்க....

ஆயிரம் கேள்வியுடன்

அதிகமான குழப்பத்துடன்

ஆரம்பம் ஆகிறது கதை......

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

முதல் பார்வையிலேயே 

மனதை கொள்ளை செய்தவள் 

மனதுக்குள் மனைவியாக எண்ண 

மாறியது பெண்....

மனம் வருந்தினான் கவியரசன்

மனதை மாற்றிக் கொண்டு

மணம் முடித்தான் அவந்திகாவை..

😊😊😊🙂🙂🙂🙂🙂

அக்காவாக அவந்திகா

அவளுடன் கூட பிறந்தவள் 

அவள் தங்கை தன்ஷிகா

அன்னைக்கு 

அடுத்தநிலையாக இருக்க வேண்டியவள் 

அவளின் மேல் பொறாமை கொண்டவள்......

😷😷😷😷🤕🤕🤕🤕

சின்ன பெண் தன்ஷிகா 

சிட்டாக பறந்து 

சிறகை விரித்து பறக்கும்

சிட்டுகுருவியாக ...

சேட்டைகள் செய்து 

சிரிப்பும் தைரியமான

கல்லூரி படிக்கும் 

கலாட்டா பெண்......

😍😍😍😍😍😍😍

கல்யாணத்தில் தோற்றாலும் 

கடமையாக வாழ நினைத்தாலும் 

கணவனாக நடக்க முயன்றாலும் 

காலம் முட்டுக் கட்டையாக மாற 

கணவனாக கூடாமல்

கர்ப்பம் தரிக்கும் மனைவி.....

கலங்கி நின்று பின் நிதானித்து 

காதலனை தேடி சேர்த்து வைக்க நினைக்க....

கர்ப்பம் கலைத்து தன் 

காரியம் சாதித்து கொள்ளும் காதலன் காமுகன் மகேஷ்.....

🤧🤧🤧🤦🤦🙆🙆🥺🥺🥺

தன் மனைவியை 

தள்ளி வைத்து

தன்ஷிகாவை திருமணம் செய்து

தன் நிலை பாதி கூறி 

தன்னை பற்றி பாதி 

தன்னவளே புரிந்து கொள்ள எண்ணி தவிர்க்க.....

தன்னுடன் இருக்கும் போது

தவறாக தெரிந்தவன் 

தள்ளி நின்று பார்க்கும் போது

உண்மை விளங்கிட...

காதல் மலர .....

💕💕💕💕💕💕💕💕

பழிவாங்குதல் 

கடத்தல், செய்த குற்றத்திற்கு தண்டனை என 

அதிரடியாக கதை நகர....

விறுவிறுப்பாக முடிந்து.....

அன்பு கொண்ட நெஞ்சம் 

காதல் கொண்ட உள்ளம் 

நிலவின் ஒளியில் 

தென்றலின் மெண்மையில்

வருடிச் செல்லும் காதல் கதை....

நிலவோடு க

தை பேசும் தென்றல்

👏👏👏👏👏👏👏👏

அருமையாக இருந்தது சகி....

வாழ்த்துக்கள்💐💐💐💐💐

 


   
ReplyQuote