அருள்மொழி மணவாளன் review for நில் கவனி காதல் செய்
விமர்சனம் வழங்கியவர்: அருள்மொழி மணவாளன்
நில் கவனி காதல் செய்.
எழுத்தாளர் பிரவீணா தங்கராஜ்.
அருமையான கதை...
இனிமையான முடிவு.
அகரன், இதயா அல்டிமேட்....
இவர்களிடம் காதல் கலாட்டாவில் மாட்டி தவிக்கும் அபி, ஜெனி பாவம் தான்.
வழக்கம்போல் பிரவீணா மாவின் எழுத்து என்னை பிரம்மிக்க வைத்தது. ❤️❤️
கதையின் உயிரோட்டம் தேரடி, ராஜா கடை, டோல்கேட் சிக்னலை கடக்கும் போது அபிநந்தனை தேட தூண்டியது. 😍😍
கதையின் சொல்லிய இடம் தெரிந்த இடங்கள் என்பதால் நம் பக்கத்தில் தான் நடப்பது போலவே இருந்தது.
அபிநந்தனின் வேலையின் மேல் உள்ள காதலிலும் சரி, இதயாவின் மேல் உள்ள காதலிலும் சரி, அக்கா தம்பி என்று குடும்ப பாசத்திலும் சரி மிக நேர்த்தியாக எடுத்து சென்று உள்ளார் எழுத்தாளர்.
இதயா அம்மாவின் திட்டிக்கொண்டே செலுத்தும் பாசம் நம் எல்லோர் வீட்டிலும் நடப்பது போல அருமையான இருக்கிறது. அவளின் அப்பா அவளுக்கு கொடுத்த சுதந்திரம் சூப்பர்.... அதை அவள் பயன்படுத்தி கொண்ட விதத்தையும் அருமையாக கூறியிருக்கிறார்.
இதயாவின் தோழி, ஜெனியின் அப்பா, தனபாலன், தீபன் மற்றும் அவன் மனைவி இன்னும் ஒவ்வொரு சீன் மட்டுமே வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நம் மனதில் தங்கும் படி அமைத்து இருக்கிறார். சூப்பர்....
தர்ஷன் சித்து நற்பவி அஸ்யூஸ்வெல் சூப்பர்.....
மொத்தத்தில் கதை அருமை. உங்கள் எழுத்து நடை அருமையோ அருமை....
சூப்பர் பிரவீணா மா....
உங்கள் எழுத்தில் மனதை தொலைத்த அன்பு வாசகி
அருள்மொழி மணவாளன்...
- 130 Forums
- 2,078 Topics
- 2,346 Posts
- 4 Online
- 975 Members