Chitrasaraswathi review for நீயென் காதலாயிரு
Chitrasaraswathi amma review
நீயென் காதலாயிரு எனது பார்வையில். ப்ரியதர்ஷினியின் அம்மா கவிதாவின் ஒன்று விட்ட அண்ணன் சிங்கமுத்து அவர் மனைவி பானுமதி. பானுமதிக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் சந்தோஷிற்கு ப்ரியாவை திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள். அவர்களது பெரிய பெண் சந்திராவின் திருமணத்தில் நகை காணாமல் போகிறது . அந்த நகை ப்ரியாவின் பெட்டியில் இருப்பதால் அவள் அக்கா யமுனாவிற்கு திருமணத்தின் போது போடாத நகையை ஈடு செய்ய திருடியிருப்பாள் என்று நினைத்து சந்தோஷ் அம்மா மற்றும் அப்பா ப்ரியா மீது பழி சுமத்துவதால் ப்ரியா தன் அம்மாவுடன் வெளியேறிவிடுகிறாள்.
தான் நண்பனாக நினைக்கும் சந்தோஷ் கூட தனக்கு உதவிக்கு வராத நேரத்தில் அவன் நண்பன் இந்திரஜித் அவளுக்கு பரிந்து பேசுகிவது மனதில் பட்டாலும் இந்தரை அவன் அந்த திருமண நிகழ்வுகளில் அவளை அதிகம் கேலி செய்ததை நினைத்து அவன் மீது அவளுக்கு நல்ல அபிப்பிராயம் வராது போகிறது.
மாமா வாங்கிக் கொடுத்த உள்ளூர் வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வேலை தேடி சென்றுவிடுகிறாள். சந்தோஷிற்கு ப்ரியாவின் ஒன்றுவிட்ட சித்தியின் பெண்ணுடன் பெண் கொடுத்து பெண் எடுத்து திருமணம் முடிவாகியது. ப்ரியாவை விரும்பும் இந்திரஜித் அவளை கண்டுபிடித்து தன் காதலை ஏற்றுக் கொள்ள வைத்தானா என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். வாழ்த்துகள்.
Leave a reply
-
Kodhaihariram prasad review for உயிரில் உறைந்தவள் நீயடி7 months ago
-
Kokila Balraj review for மௌனமே வேதமா& பிரம்மனின் கிறுக்கல்கள்7 months ago
-
Sharnyah Lingeswaran review for பிரம்மனின் கிறுக்கல் & துஷ்யந்த7 months ago
-
Selvarani review for நீயின்றி வாழ்வேது1 year ago
-
Chitrasaraswathi review for நீயின்றி வாழ்வேது1 year ago
- 145 Forums
- 2,445 Topics
- 2,847 Posts
- 5 Online
- 1,938 Members