Skip to content
வெண்மேகமாய் கலைந்தத...
 
Notifications
Clear all

வெண்மேகமாய் கலைந்ததே

2 Posts
2 Users
1 Reactions
185 Views
(@kothaihariram)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 28
Topic starter  

வெண்மேகமாய் கலைந்ததே
கதையின் கரு எளிமையானது ... ஆரம்பமே குழந்தை விட்டைவிட்டு வெளியே செல்லவது தற்போதைய காலத்தில் குழந்தைகள் பெற்றோர் கொஞ்சம் அதிகமா திட்டினால் விட்டைவிட்டு செல்வது தவறான முடிவு எடுக்கிறார்கள் என்பதையும் அதனால் வாழ்க்கையில் அவர்கள் படும் கஷ்டம் அவர்களின் இந்த குணத்தால் குடும்பத்தில் எப்படி பட்ட சுழ்நிலை உருவது பற்றியும் எப்போதும் போல எளிமையாக சொன்னது
குடும்பம் பகையாக இருந்தாலும் தன்னோட காதலை விட்டு தறாமல் திருமணம் செய்பவன் காவல் துறை வேலையில் கிடைக்கும் கேஸின் மூலம் தன்னோட உயிரை பணையம் வைத்து அங்கு மாட்டிய குழந்தைகளையும் காதலினால் ஏமாற்றம் பட்டு இருக்கோம்னு தெரியாத பெண்ணையும் காப்பாற்றும் சர்வா செம ❤️❤️❤️ தன்னை ஓருவன் ஏமாற்றிகிறான் தெரியாமல் அவனின் கூடத்திடம் சிக்கி அங்கேயிருந்த தப்பிக்க உதவும் சர்வாவின் வார்த்தைக்காக தன்னோட உயிரை பணையம் வைத்து ஊரிலிருந்து ஓடிவந்த பையனை காப்பாற்றும் மான்ஸ்வி செம
குடும்பத்தை எதிர்த்து அவனுக்காக வாழும் பிருந்தா செம கணவன் இறந்துவிட்டான் நினைத்து கஷ்டப்டும் பிருந்தாவின் நிலை பாவம்
சர்வா இறக்கவில்லை தெரியவரும் போது குடும்பத்திலுள்ள உறவினர்களுக்கு ஆனந்தம்
விஹான் ஆரம்பத்திலேருந்தே தந்தையின் தவறான புரிதலால் மணமுடைந்து மாறுபவன் அண்ணனிற்காக வருபவன் எல்லாரையும் வார்த்தையாலே கஷ்டப்படுத்திகிறான்
அண்ணனை கஷ்டப்படுத்தியவர்களை அழிக்க நினைக்கும் யதார்த்தமான நபர்
மானஸ்வியை ஆதட்டி உருட்டி நியாயத்தை ஏற்றுக்கொள்ள வைக்கும் பாங்கு சூப்பர் தந்தை செய்த சிறு தவறால் அவரின் மேல கோபத்தை கூட எளிதாக வெளிப்படுத்தி அவரை ஏங்க வைத்தவன் செம மாஸ் இறுதியில் மானஸ்வி விஹான் ஜோடிகள் யதார்த்தமான வாழ்க்கையை ஏற்பது சூப்பர்


   
ReplyQuote