ஐயங்காரு வீட்டு அழகே-29


ஐயங்காரு வீட்டு அழகே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 29)
அச்சச்சோ..! இந்த வேற வேற ரிலிஜன் சம்பந்தப் பட்டவங்கன்னாலே இது மாதிரி பிரச்சினையெல்லாம் அதிகம் வரும் போல, அதுலேயும் புதுசா கல்யாணமானவங்களுக்குள்ள.
ஆனா, ஷாலினி பண்ணதும் தப்பு தானே, புருசனுக்கு பொண்டாட்டி சமைச்சு கொண்டு வரப்போறா, அதை விட்டு நிதைக்கும் இந்த ஷாலினி அவனுக்காக சமைச்சு கொண்டு வந்தா, அந்த இடத்துல யாராயிருந்தாலும் கடுப்பு வரத்தானே செய்யும், அதுலேயும் அவ ஏற்கனவே ராவணனை விரும்பி வேற இருக்கா... அப்ப வெறுப்பு வரத்தானே செய்யும்.
அட.. ஒண்ணும் வேணாங்க, இவனை மாதிரியே காருண்யா அடுத்த ஆம்பிளை கொண்டு வரதை இஷ்டப்பட்டு சாப்பிட்டு, அவன் கூட ஆபிஸ் முடிச்ச பிறகும் நின்னு நிதானமா பேசிட்டு, புருசனை அலட்சியப் படுத்த மாதிரி நடந்துக்கிட்டா அவன் அமைதியா போயிடுவானா...? இவ்வளவு ஏன், அந்த ஹரன் வந்து அவ கிட்ட பேசினதுக்கே முகத்தை காட்டி அவனை அரை மண்டையன்னு கமெண்ட் அடிச்சவன் தானே..?
ஆக மொத்தம், இவனுக்கு வந்தா ரத்தம், அவளுக்கு வந்தா தக்காளி சட்னின்னு நினைக்கிறான்.
இதுல உண்மை என்னென்னா,
அப்பவும் சரி இப்பவும் சரி ரெண்டு பேருமே ஒருத்தரையொருத்தர் இன்னும் விரும்பவே, காதலிக்கவே ஆரமபிக்கலைன்னு தோணுது,
இவங்களுக்குள்ள இருக்கிறது தாலி கட்டியாச்சு, வாழணும்ங்கிற கான்சப்ட் மட்டுமே. அதை தவிர்த்து ரெண்டு பேரும் டீப்பா நேசிக்கவே ஆரம்பிக்கலையோன்னு தோணுது. உண்மையான நேசம் இருந்தா அங்க பொறாமை கொஞ்சம் இருந்தாலும், புரிதல் அதிகமாக இருக்கிறபட்சத்துல இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன்னு மூணாவது மனுசங்க முன்னாடி, அதுவும் பொது இடத்துல அடுத்தவங்க பார்க்குற அளவுக்கு வார்த்தைகளை விட்டு, சண்டை போட்டு சொதப்பி வைச்சிருக்க மாட்டாங்க. வீட்டுக்குப் போய் பொறுமையா பேசி தீர்த்து இருப்பாங்க. நாலு பேர் பார்க்க ஸீன் க்ரியேட் பண்ணியிருக்க மாட்டாங்க. இவங்க விஷயத்துல கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்ங்கிற மாதிரியே நடந்திட்டிருக்கு. என்னத்தை சொல்ல போங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Leave a reply
-
ஐயங்காரு வீட்டு அழகே-2821 hours ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-272 days ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-263 days ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-254 days ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-245 days ago
Currently viewing this topic 1 guest.
- 137 Forums
- 2,214 Topics
- 2,532 Posts
- 2 Online
- 1,510 Members