ருத்ரமாதேவி - 36
அத்தியாயம் 36
சகாதேவனின் தாய்க்கு தண்டனை நாளையிலிருந்து தொடங்கும் என்று கூறிச் சென்றான் மகாதேவன். அவனுடன் அவரின் மகனும் சென்று விட தன் அக்காவும் தன்னை முறைத்து விட்டுச் செல்ல, ஏதோ தண்டனை பலமாக இருக்கும் என்று பயந்து நடுங்கினார்.
தனித்து விடப்பட்ட சகாதேவனின் தாய்க்கு எவ்வளவு யோசனை செய்தும் என்ன தண்டனையாக இருக்கும் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. யோசனையுடனே தன் மருமகளையும் தன் பேரனையும் காண அவளின் அறைக்குச் செல்ல, அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் அகம்பனனை கண்டதும் மனது சற்று லேசானது போல் இருந்தது.
அவரின் இயற்கை குணமான தீய குணங்களே அவரை இப்பொழுதும் வழி நடத்தியது. தன் பேரனை பார்த்து, இனி இவன் தான் இந்த ராஜ்யத்தின் வாரிசாக வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்து அதை தன் மருமகளிடமும் விதைத்தார்.
ஏற்கனவே அவளுக்குள் அந்த எண்ணம் ஓடிக்கொண்டிருக்க, தன் மாமியாரின் பேச்சுக்கு உடனே, "சரிங்க அத்தை நீங்கள் என்ன சொன்னாலும் அப்படியே செய்கிறேன்" என்றாள் உமையாள்.
இரு தீய எண்ணங்கள் கொண்ட இரு மாதர்கள் சேர்ந்து ஒரு சிறு குழந்தையை வளர்த்தால் அக்குழந்தை எப்படி வளரும். நாம் படித்த இதிகாசங்களில் தான் கூறியுள்ளனவே. அதை போலவே வளர்ந்தான் அகம்பனன்.
நாட்கள் கடக்க மயூரா தேவி பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள். பெண் குழந்தை என்றதும் அண்ணனும் தம்பியும் மிகவும் மகிழ்ந்து போயினர். தன் குலதெய்வமான ருத்ரமாதேவியே தனக்கு மகளாக பிறந்து விட்டதாக கூறி தன் இளவலை அணைத்து கொண்டான் மகாதேவன்.
சுபயோக சுப தினத்தில் தங்களின் பெண் குழந்தைக்கு ருத்ரா தேவி என்று நாமகரணம் சூட்டி மக்களுக்கு தங்கள் குழந்தையை காண்பித்தார்கள்.
மகாதேவனுக்கு பெண் பிள்ளை பிறந்ததில் மிகவும் மகிழ்ந்தது சகாதேவனின் தாயே. இந்த ஒரு வருடத்தில் அவளின் உடல் சிறிது சிறிதாக பலகீனப்பட்டு மெலிந்து எலும்பும் தோலும் ஆக காட்சியளித்தார்.
எப்படி தன் மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிப்பதற்கு மருந்து கொடுத்தாரோ, அதேபோல் அவரை அழிப்பதற்கு அவரது உணவில் மெதுவாக உயிர் கொள்ளும் விஷத்தை கலந்து விட்டான் மகாதேவன். அது அவருக்கு தெரியவே ஆறு மாத காலங்கள் ஆகிவிட்டது. அதன் பிறகு எதுவும் செய்ய முடியாத நிலைமை. வைத்தியர்களும் அவரவக்கு உதவவில்லை. ஆகவே தன் உயிர் பிரிவதை ஏற்க தயாராகி விட்டார். இப்பொழுது அவனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தி கேட்டதும் மிகவும் மகிழ்ந்து போனார். எப்படியும் ஆண் வாரிசு தானே அரசால முடியும் என்ற நினைப்பில், இனி தன் பேரன் அகம்பனன் தான் அரசாள்வான் என்று மிகவும் மகிழ்ந்தார். நன் மகிழ்ச்சியை தன் மருமகளிடமும் தெரிவிக்க, உமையாளுக்கும் மயூரா தேவிக்கு பெண் குழந்தை பிறந்தது மகிழ்ச்சி உண்டானது.
பெண் குழந்தை என்றாலும் ருத்ரா தேவிக்கு ஆண் குழந்தைகளுக்கு ஈடாக பயிற்சி அளிக்கப்பட்டது. குழந்தை வளர வளர கல்வி அறிவிலும் வீரத்திலும் சிறந்து விழங்கினால் ருத்ரா தேவி.
நாட்கள் கடக்க முதலில் உயிர் துறந்தார் சகாதேவனின் தாய். பின்னர் இரு ஆண்டுகள் கழித்து அரசரின் தந்தையும் உயிர்த் துறந்து விட்டார். இப்பொழுது அரண்மனையில் ராஜமாதா மட்டுமே பெரியவர் என்ற ஸ்தானத்திலிருந்து தன் இரு மகன்களையும் மருமகளையும் பேரன் பேத்தியையும் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார்.
சகாதேவனின் தாய் இறந்த பிறகு அந்த வேலையை எடுத்துக் கொண்டாள் உமையாள். அதன் விளைவு தீய குணங்களின் மொத்த உருவமாக வளர்ந்து நின்றான் அகம்பனன்.
ருத்ரா தேவிக்கும் அகம்பனனுக்கும் ஆண்டுகள் இரண்டு வித்தியாசம். அதே போல் குணங்கள் முழுவதும் வித்தியாசம். நாட்டின் நலனுக்காக தன் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் ருத்ரா தேவி. தன் உயிரை காக்க பிறர் உயிரையும் தயங்காது எடுக்கும் அகம்பனன்.
அகம்பனனின் குணம் தெரிந்த பிறகு மகாதேவனும் சகாதேவனும் எவ்வளவு மாற்ற முயற்சித்தும் அவனின் குணம் மாறவே இல்லை. மிகவும் மனது வருத்ததுடன் இருந்த சகாதேவனை ஆறுதல் படுத்திய மகாதேவன், "என்ன இருந்தாலும் அவன் நம் மகன் தானே!. அவன் அரசாண்டால் என்ன?அவனுக்கு முடி சூட்டிவிடுவோம்!" என்றான்.
உடனே தடுத்த சகாதேவன், "அரசாலும் மன்னன் குடிமக்களை கவனித்துக் கொள்ள வேண்டுமே தவிர, அவர்களை அழிக்கக்கூடாது. அவனுக்கு முடி சூட்டுவதும் இந்த நாட்டை படுகுழியில் தள்ளுவதும் ஒன்றுதான். எந்தன் ஆசை ருத்ரா தேவியே அரசாள வேண்டும் என்பதே" என்று கூறினான்.
இவர்கள் இருவரும் இப்படி பேசிக் கொண்டிருக்க ருத்ரமாதேவி பதினைந்து வயது இளம் பெண்ணாக தன் தோழியர்களுடன் அவளின் மாளிகையில் விளையாடிக் கொண்டு இருந்தாள்.
பார்ப்பதற்கு விளையாட்டுப் பெண் போல் தோன்றினாலும், அவளுள் வீரம் பொதிந்து கிடந்தது. சிறுவயதில் தன் தாய் தந்தையர் செய்யும் வாள் பயிற்சியை பார்த்தே வளர்ந்தவள் அல்லவா. மேலும் அத்தனை ஆயுதங்களையும் கையாளும் யுத்தியை தந்தையும் சிறிய தந்தையும் அவளுக்கு சிறுவயதிலிருந்தே பயிற்சி கொடுத்து வந்தனர்.
மேலும் சூழ்ச்சிகள் நிறைந்த இவ்வுலகில் எப்படி தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற சூட்சுமங்களையும் சொல்லிக் கொடுத்தே வளர்த்தனர். இப்படியாக தாயும் தன் தாய் தந்தை மற்றும் சிறிய தந்தை மூவரும் அவளுக்கு பயிற்சி அளிக்க வைத்திய நுணுக்கங்களை வைத்தியரும் போர் பயிற்சியை சேனாதிபதியும் என்று அவளுடைய ஒவ்வொரு நாளினையும் பெரியவர்கள் பயன்படுத்தி அவளை ஒரு சிறந்த வீராங்கனையாகவும் சிறந்த பெண்மணியாகவும் உருவாக்கினார்கள்.
இப்படி நல்ல விஷயங்களையும் நல்லவர்களுடன் சேர்ந்து கற்று வளர்ந்து கொண்டிருந்தாள் ருத்ரா தேவி. அதற்கு நேர்மறையாக அகம்பனன் வளர்ந்தான். தந்தையும் பெரிய தந்தையும் கூறும் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் அவன் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
அவன் தாய், தாய் வழி பாட்டனார் இவர்களின் போதனையை கேட்டு அரசாள்வது ஒன்றே குறியாக வளர்ந்தான். காலங்கள் ஓட இருபது வயது வாலிபனாக அகம்பனன் உலகில் உள்ள எல்லா கெட்ட பழக்கங்களையும் கற்றுக்கொண்டு தன்னை சிறந்த வீரனாகவும் சிறந்த ஆண்மகன் என்றும் எண்ணிக் கொண்டு வளர்ந்து நின்றான்.
ருத்ரமாதேவி கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி தனது பதினெட்டாவது அகவையில் கால் எடுத்து வைத்தாள்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்1 week ago
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
- 143 Forums
- 2,623 Topics
- 3,132 Posts
- 6 Online
- 2,142 Members
