ருத்ரமாதேவி - 37
அத்தியாயம் 37
ருத்ரா தேவியின் பதினெட்டாம் ஆண்டு பிறந்தநாளை, திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்தனர் வேங்கை நாட்டு மக்கள்.
தினமும் காலை ருத்ரமாதேவி கோயிலுக்கு செல்லும் பழக்கம் சிறு வயதிலிருந்து ருத்ரா தேவிக்கு உண்டு.
அன்றும் வழக்கம்போல் காலையிலேயே முதல் பூஜைக்கு தன் குடும்ப சகீதமாக கோயிலை நோக்கிச் சென்றார்கள். அகம்பனன் தவிர மற்ற அனைவரும் பூஜையில் கலந்து கொண்டார்கள். பூஜை முடிந்த பிறகு அரண்மனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சியை கண்டு கழித்தாள். அண்டை நாடுகளின் இருந்து வந்திருந்த விருந்தினர்கள் ருத்ரா தேவிக்கு பொன்னும் பொருளும் கொடுத்த அவளை பரிசு மழையில் நனைவித்தனர்.
சிலர் ருத்ரா தேவியை தங்கள் மகனுக்கோ, சில இளவரசர்கள் தங்களுக்கோ மணம் முடிக்க கேட்டார்கள். அவர்களுக்கு பதில் கூறும் விதமாக சிறிது காலம் தாமதித்து பின்னர் தான் திருமணம் என்று அவர்களிடம் பதில் உரைத்து அனுப்பி வைத்தான் மகாதேவன்.
அன்றைய பொழுது அப்படியே இனிமையாக சென்றது ருத்ரா தேவிக்கு. அன்றைய இனிமையான நினைவுகளுடன் கண்ணயர்ந்தாள்.
அன்றைய நாள் அனைவரும் ருத்ராவின் பிறந்தநாளில் கவனம் செலுத்த, அகம்பனன் ஒரு சிறு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டான்.
மறுநாள் அரண்மனை தோட்டத்தில் இறந்து கிடந்தாள் ருத்ராவின் தோழி ஒருத்தி. பதினேழு வயது நிரம்பிய அப்பெண்ணின் உடலை சோதித்த வைத்தியர் கூறியதை கேட்டு மகாதேவனும் சகாதேவனும் அதிர்ந்தனர். ஆம் பெண்ணை ஒருவன் கற்பழித்து கொண்றுள்ளான். அதுவும் அரண்மனையில் இப்படி செய்ய எவ்வளவு தைரியம் என்று மகாதேவன் சகாதேவன் இருவரும் கொதிக்க, செய்ததே அவர்கள் மகன் என்று அறியும் பொழுது துடிதுடித்தனர்.
இச்செய்தியை கேட்டு, அது உண்மை என்று அறிந்ததும் மகாதேவன் மிகவும் மனமுடைந்து போனான். விரைவாக சென்று தன் மகனை விலாசு விலாசு என்று விலாச அவனோ எதுவும் உணராமல் போதையில் கிடந்தான்.
என் பையனை ஏன் இப்படி அடிக்கின்றீர்கள் என்று குறுக்கே வந்த உமையாளுக்கும் இரண்டு சவுக்கடி விழுந்தது. "எப்படி வளர்த்து வைத்திருக்கிறாய்? பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கவில்லையா!" என்று மேலும் இரண்டு அடி தன் மனைவியை சவுக்கால் அடித்து விட்டான்.
தன் மகனின் கீழ்த்தரமான இந்த செயலாலும் மற்றும் எந்த சூழ்நிலையிலும் பெண்களை சிறிதும் மனதாலும் உடலாலும் துன்புறுத்தக் கூடாது என்று கொள்கை வைத்திருந்தவன், இன்று தன் மனைவியை அடித்தது என்று அவன் மனம் மேலும் மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக நெஞ்சை பிடித்துக் கொண்டு உடல் வியர்த்து மயங்கி கீழே விழுந்தான்.
அதைக் கண்ட சேவகர்கள் உடனே அவனை தூக்கிக் கொண்டு அரண்மனை வைத்தியரிடம் செல்ல, அவனை சோதித்த வைத்தியர் தீவிரமாக சிகிச்சை அளித்தனர். அவர்கள் செய்த எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் சகாதேவன் அவர்கள் செய்த சிகிச்சைக்கு சிறிதும் ஒத்துழைக்கவில்லை.
தன் இளவல் மயங்கிய செய்தி கேட்டு வைத்தியரை காண விரைந்து வந்தான் மகாதேவன். அவர் மரணம் அடைந்து விட்டான் என்ற செய்தியே அங்கு வந்த மகாதேவனிடம் தெரிவிக்கப்பட்டது.
இளைய ராஜாவின் மரணம் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டது. மக்கள் மிகவும் வருந்தினர். அவரிடம் உடலை காண கூடிய மக்களை கண்டு ராஜ மாதா, தன் மகனின் உயரிய குணத்திற்கு கிடைத்த பரிசாகவே நினைத்தார்.
சகாதேவனின் இறுதிச்சடங்கு அரசாங்க முறை படி நடந்தேறியது. இதில் எதிலும் கலந்து கொள்ளும் நிலையில் அகம்பனன் இல்லை. ருத்ராவோ தன் சிறிய தந்தையின் காலடியில் அமர்ந்து கதறி அழுது கொண்டே இருந்தாள். அவளை பாசமுடன் வளர்த்தவர் அல்லவா.
தன் கணவன் அடித்த அடியில் மயங்கி சரிந்த உமையாளுக்கு, கண் விழிக்கும் பொழுது தன் கணவன் இறந்து விட்டான் என்ற செய்தியை கேட்க, சித்த பிரம்மை பிடித்தது போல் அமர்ந்திருந்தாள்.
அனைத்தும் முடிந்து இரு நாட்கள் கழித்தே அகம்பனன் போதை இறங்கி தெளிவானான். தெளிந்ததும் அவனுக்கு அவனின் தந்தை இறந்த செய்தியை மகாதேவன் நேரடியாக தெரிவிக்க, அவனோ அவரைப்பற்றி சிறிதும் கவலை இல்லாமல் தன் மேல் இருந்த காயத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
அவனின் செய்கையே மகாதேவனுக்கு உணர்த்தியது, இனி இவன் தன் சொல் படி கேட்டு நடக்க மாட்டான் என்று. அந்த சமயம் அங்கு வந்த உமையாளிடம் அவனின் செய்கை பற்றி கூற, அவளும் அவனின் பேச்சு எதையும் காதில் வாங்காமல் நேராக தன் மகனிடம் சென்று அவனின் தலை கோதி, "இப்பொழுது எப்படி இருக்கிறாய் அகம்பனா?" என்று அவனிடம் பேச ஆரம்பித்தாள்.
இருவரும் தன்னை உதாசினம் செய்தாலும், இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று யோசித்துக் கொண்டே, தனது தாயின் அறைக்குச் சென்றான் மகாதேவன்.
கவலையாக வந்து தன் அருகில் அமர்ந்த தன் மகனின் தலையைக் கோதி, "என்ன கண்ணா? ஏன் இந்த கவலை?" என்றார்.
அவனும் அகம்பனன் மற்றும் உமையாள் செய்கையை பற்றி கூற, அவரும் பெருமூச்சுடன், "இனி காலம் தான் அவர்களை திருத்த வேண்டும். பொறுத்திருப்போம்" என்று தன் மூத்த மகனுக்கு ஆறுதல் கூறினார் ராஜமாதா.
நாட்கள் கடக்க வருடங்கள் உருண்டோடியது. ருத்ரா தேவி கல்வி கேள்வி அனைத்திலும் வெற்றி பெற்று, வீரத்திலும் விவேகத்திலும் சிறந்து விளங்கினாள். குதிரைப்படை யானைப்படை காலாட்படை என்று எந்த படையில் அவளை சேர்த்தாலும் அதில் சிறந்து இருக்க பயிற்சி எடுத்துக் கொண்டாள். அனைத்து ஆயுதங்களை கையாளும் யுத்தியையும் பெற்று தலைசிறந்த வீராங்கணையாக உருமாறி நின்றாள்.
அகம்பனன், அவனும் அனைத்து பயிற்சியை மேற்கொண்டு தன் உடலை வளர்த்தாலும், நாளின் முடிவில் இரவு தொடங்கியதும் அவன் போதையையும், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை என்று வயது வித்தியாசம் பார்க்காது பெண் பித்தனாக, காம கொடூரனாக இருந்தான்.
முழு கருப்பு நிற குதிரையை வாகனமாகக் கொண்டு கருப்பு நிற உடையையும் கருப்பு நிற ஆபரணங்களையும் அணிய தொடங்கினான். வீதியில் அவனின் கருப்பு குதிரையின் சத்தத்தை கேட்டாலே பெண்கள் மட்டும் அல்ல ஆண்களுமே பயந்து ஓடி ஒளிய ஆரம்பித்தனர். அவனின் குறுக்கே எவர் வந்தாலும் சாட்டை அடிகள் நிச்சயம். சமயத்தில் அதுவே மரணமாகவும் நிகழ்ந்துவிடும்.
இப்படி ஒரு கொடூரனாக வளர்ந்து நின்றான் இரு ஆண்டுகளில்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்1 week ago
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
- 143 Forums
- 2,623 Topics
- 3,132 Posts
- 5 Online
- 2,142 Members
