👇 கதைகள் வாசிக்க / கேட்க 👇
💎 Premium Site🛒 Amazon Kindle▶️ YouTube Audio
Skip to content
Share:
Notifications
Clear all

ருத்ரமாதேவி - 38

1 Posts
1 Users
0 Reactions
86 Views
Arulmozhi Manavalan
(@arulmozhi-manavalan)
Posts: 148
Member Author Access
Topic starter
 

ருத்ரமாதேவி 38 

 

        தன் சிறிய தந்தையின் மரணத்திற்குப் பிறகு தான் பிறந்த நாள் கொண்டாடுவதை நிறுத்தி விட்டாள் ருத்ரா தேவி. 

 

      இன்று அவளின் இருபதாவது பிறந்த நாள். வழக்கம் போல் காலையில் எழுந்து ருத்ரமாதேவியின் கோயிலுக்குச் சென்றது விட்டு, ராஜமாதாவிடம் ஆசி வாங்கினாள்.  பின்னர் தன் தாய் தந்தையரின்  அறைக்குச் சென்று அவரிடம் ஆசி பெற்றுவிட்டு, தன் சித்தியின் அறையை நோக்கி சென்றாள். 

 

உமையாளின் காலில் விழுந்து ஆசி வாங்கிய ருத்ராவின் வாயில் இனிப்பை தினிக்க முயன்றார் உமையாள். புன்னகையுடன் அந்த இனிப்பை கைகளில் வாங்கிக் கொண்டு, அவரிடமிருந்து செல்வதற்கு உத்தரவு வாங்க, 

உமையாளோ "ஏன் ருத்ராமா! நான் கொடுக்கும் இனிப்பை உண்ண மாட்டாயோ? என்று சோகமாக கேட்பது போல் கேட்க, ஒரு கணம் தயங்கி பின்னர், "இல்லை சித்தி. என் அன்னையின் உத்தரவு. அவர் கையால் தவிர வேறு எவரிடமும் நான் சிறு உணவு கூட உண்ணக்கூடாது என்று" என்றாள் அவரின் பொய் சிரிப்பை வெறுக்கும் பாவனையில். 

 

"ஏன் ருத்ரா, நான் உன் சித்தி தானே! உனக்கு ஒரு அன்னை போல் தானே! என் கையால் இந்த சிறிய இனிப்பை கூட ஏற்க மாட்டாயா? 

 

"கண்டிப்பாக ஏற்கின்றேன் சித்தி. என் அறைக்குச் சென்ற பிறகு வெளியில் கிடைக்கும் எந்த உணவானாலும் சோதித்த பின்னே உண்ண எனக்கு சிறு வயது முதலே கற்பிக்கப்பட்டது. அதை என்னால் இடையில் மாற்ற இயலாது" என்று உறுதியாக கூறிவிட்டு, அந்த இனிப்பையும் எடுத்துக் கொண்டே செல்ல முயன்றாள்.  

 

"இங்கிருந்து உண்பது என்றால்  உண். இல்லையென்றால் என்னிடமே கொடுத்துவிடு" என்று உமையாள் இனிப்பிற்கு கையேந்தி நின்றாள். 'அந்த இனிப்பை அவளை உண்ண வைக்க வேண்டும் அல்லது அவளிடம் இருந்து வாங்கி விட வேண்டும் என்று'  

 

புன்னகைத்துக் கொண்டே, "நிச்சயம் என்னால் இங்கு உண்ண இயலாது. அதேபோல் இதை நான் உங்கள் கைகளிலும் கொடுக்க மாட்டேன். சோதித்து விட்டு உண்கின்றேன் என்று வெளியே சென்று விட்டாள் ருத்ரா தேவி. 

 

அவள் சென்ற பிறகு வியர்வையில் குளித்து விட்டார் உமையாள். அவளுக்கு அந்த இனிப்பில் அவளை கொல்ல மருந்து கலந்திருந்தாள். 

 

முன்னாள் சரித்திரம் திரும்புகிறது. உமையாளின்  மாமியார் ருத்ராவின் தாய் கருவுற்று  இருக்கும் பொழுது செய்த தவற்றை இன்று ருத்ராவிற்கு செய்துள்ளாள் உமையாள். 

 

மயூராவிற்கு மருந்து கொடுத்த பெண்ணிற்கு கிடைத்த தண்டனையை பற்றியும் தன் மாமியாருக்கு கிடைத்த தண்டனை பற்றியும் நன்கு அறிந்திருந்த உமையாளுக்கு, தான் செய்த செயலுக்கு கிடைக்கும் தண்டனையை நினைத்து கதிகலங்க நின்றார். 

 

மயூரா தேவிக்கு மருந்து கொடுத்து கொலை செய்ய இருந்த செய்தியை சிறு வயதிலேயே ருத்ராவிற்கு தெரிவித்து, அரச குடும்பத்தில் இப்படி நடப்பது எல்லாம் சாதாரண விஷயம் தான் ஆகையால் நாம் தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை செய்து, அவளுக்கு உணவில் கலந்து இருக்கக்கூடிய விஷத்தை கண்டறியும் முறையை சிறு வயதிலேயே கற்பித்து இருந்தார்கள். 

 

தன் அறைக்கு வந்த ருத்ரா தேவி தன் சிற்றன்னை கொடுத்த இனிப்பை சோதிக்க, அதில் உயிர் கொள்ளும் மருந்து கலந்திருப்பது  தெரிந்தது. 

 

ஆனால் அவள் அதில் சிறிதும் அதிர்ச்சி அடையவில்லை. தன் சிறிய தந்தை இறந்த பிறகு ருத்ரா மிகவும் கவனமாக தன்னைச் சுற்றி நடப்பவற்றை கவனிக்க தொடங்கி விட்டாள். ஆகையால் அவளுக்கு அகம்பனன் பற்றியும் உமையாள் பற்றியும் தெரிந்திருந்தது. 

 

இப்படி வீட்டிற்குள் இருக்கும் துரோகிகளை மன்னிக்க அவள் சிறிதும் தயாராக இல்லை. 

 

நடந்தவற்றை தன் தந்தையிடம் தெரிவித்துவிட்டு தன் தோழிகளுடன் அவள் வழக்கமாக செல்லும் கானகத்திற்குச் சென்றாள். 

 

அவளுக்கு பாதுகாப்பாக சில வீரர்களும், உணவு தயாரிப்பவர், தங்கும் கூடாரம் அமைப்பவர் என்று ஒரு குட்டி படையை அவளுடன் சென்றது. 

 

சென்றது அனைவரும் பெண்கள். மாதம் ஒருமுறை இவ்வாறு இவர்கள் சென்று இரண்டு மூன்று நாட்கள் தங்கி வேட்டை ஆடிவிட்டு வருவார்கள். 

 

ருத்ரா தேவிக்கு அந்த கானகத்தின் ஒவ்வொரு பகுதியும் அத்துபடி. அவளின் பெண் வேங்கை படை அவளுக்கு ஒரு பலத்த பாதுகாப்பு. 

பெண்கள் படை தன் அன்னைக்கு இருந்ததை தந்தை அவளிடம் கூறி இருந்தார். அதைக் கேட்ட பின்பு தன் பத்து வயதில் இருந்தே ருத்ரா தன்னுடன் தன் வயதுடைய பெண்களை வீராங்கனைகளாக உருவாக்கி இருந்தாள். 

அவளின் பத்து ஆண்டு உழைப்பு இன்று நூறு வீராங்கனைகளை தயார் படுத்தி ஒரு சிறு படையாக உருவாக்கி இருந்தாள் ருத்ரா தேவி. 

 

பார்க்க சிறு பெண்கள் போல் தோன்றினாலும், ஒவ்வொருவரும் பத்து ஆண்களுக்கு சமமாக போரிடும் திறனோடு இருக்க பயிற்சி கொடுத்திருந்தாள் ருத்ரா தேவி. 

 

அத்தனை பேரும் அவளுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள். அப்படி தன்னுடன் இருக்கும் அந்த நூறு வீராங்கனைகளில் சிலரை மட்டும் தன்னுடன் அழைத்து வந்திருந்தாள். மற்றவர்களை அரண்மனையில் பெண்களுக்கு பாதுகாப்பாக  இருக்க வைத்திருந்தாள். இவளின் இந்த ஏற்பாடுகள் அகம்பனனினால்  தன் தோழி இறந்த பிறகு வேறு எந்த பெண்ணிற்கும் அப்படி நடக்கக் கூடாது என்று அன்றிலிருந்து மிகவும் கவனமாக செயல்பட ஆரம்பித்திருந்தாள் ருத்ரா தேவி. 

 

இப்படியாக எதையும் யோசித்து செயல்படும் திறமையான ருத்ரா தேவி இந்த கானகத்திற்கு  வருவதை வாடிக்கையாக வைத்திருந்தாள்.  அது மட்டுமல்லாது இக்கானகத்தில் அவளுக்கு ஏதோ ஒரு அமைதி கிடைப்பது போல் இருக்கும். எந்தெந்த இடத்தில் என்னென்ன மூலிகைகள் கிடைக்கும் என்பதிலிருந்து அங்கு இருக்கும் விலங்குகள் பற்றியும் அத்தனையையும் அறிந்து வைத்திருந்தாள். அந்தக் கானகம் அவளுக்கு அவளின் மாளிகை போன்றதாகிவிட்டது. 

 

அவர்கள் ஓய்வு எடுக்க கூடாரங்கள் அமைத்துவிட்டு, உண்ணுவதற்கு பழங்களை எடுத்து வைத்துவிட்டு அவள் வழக்கமாக குளிக்கும் தடாகத்திற்கு தன் தோழிகளுடன் வந்தாள். 

 

மரங்கள் அடர்ந்த கானகத்தின் நடுவே அழகிய செந்தாமரை மலர்கள் நிறைந்த குளம். தன் உடலைச் சுற்றி ஒற்றை ஆடை அணிந்து தோழியர் புடை சூழ அத்தடாகத்தில் நளினமாக இறங்கினாள் ருத்ரா தேவி.

 

அவள் மேல் தண்ணீர் அள்ளி தெளித்து தோழியர் விளையாட, அவளும் அனைவரின் மீதும் தண்ணீரை அடித்து விளையாடிய படி இருக்க, திடீரென்று குளத்தின் நடுவில் சலசலப்பு தோன்றியது. 

 

தொடரும்...

 

- அருள்மொழி மணவாளன்...


 
Posted : December 19, 2025 12:06 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved