👇 கதைகள் வாசிக்க / கேட்க 👇
💎 Premium Site🛒 Amazon Kindle▶️ YouTube Audio
Skip to content
Share:
Notifications
Clear all

ருத்ரமாதேவி - 42

1 Posts
1 Users
0 Reactions
80 Views
Arulmozhi Manavalan
(@arulmozhi-manavalan)
Posts: 148
Member Author Access
Topic starter
 

அத்தியாயம் 42

 

        அரசரை வணங்கிய ஒற்றன் "யாழ் வேந்தன் தெரிவித்த அனைத்து விஷயங்களும் உண்மையானவை தான் அரசே. அவரின் தாய் மாதவி. அவரும் அந்த கானக தலைவரின் மனைவியும் தோழியாக இருக்கின்றார்கள். நிறைமாத கர்ப்பிணியாக அவர் அங்கு வந்துள்ளார். அதன் பிறகு அந்த கானகத்தையே வசிப்பிடமாகக் கொண்டுள்ளார் என்று கூறினான். 

 

அதே சமயத்தில் ருத்ரா அனுப்பிய ஒற்றனும் அவளின் அறை நாடி வந்தான். ருத்ரா தேவியை வணங்கிய ஒற்றன் யாழ் வேந்தன் கூறிய அனைத்தும் உண்மை என்றும், அவன் தென்கானகத்தின் தலைவர் பகலவன் மகன் குகனின் உற்ற நண்பன் ஆவான் என்றும் கூறினான். மேலும் அவனின் தாய் மாதவி நிறைமாத கர்ப்பிணியாக அக்கானகத்திற்கு வந்ததாக தெரிகிறது. விலங்குகளிடமிருந்து அப்பெண்ணை காப்பாற்றி உள்ளனர். ஒரு மாத கைக்குழந்தையான  குகனின் தாய்க்கு தோழியாகி விட்டார். அங்கு வந்த மறுநாள் மாதவிக்கு  யாழ் வேந்தன் அந்த கானகத்தில் பிறந்துள்ளான்" என்று கூறி வணங்கி சென்றான். 

 

இப்படியாக யாழ் வேந்தனை பற்றி தந்தையும் மகளும் விசாரித்து தெரிந்து கொண்டார்கள். 

 

வேங்கை நாட்டின் கோட்டையில் இருந்து கிளம்பிய யாழ் வேந்தன் நேராக ருத்ராவை சந்தித்த அந்த கானகத்திற்கு சென்றான். அந்த தடாகத்தின் அருகில் சென்றதும் அவனின் புரவி அவனின் மனம் அறிந்து தானாக நின்றது. 

 

அவனின் பின்னாடியே வந்த குகனும் அவன் அருகில் நின்று, "என்ன வேந்தா? ஏன் நின்று விட்டாய்?" என்றான். 

 

அவனைப் பார்த்து புன்னகைத்தவாறு வலக்கையில் குதிரையின் கடிவாளத்தை பிடித்துக் கொண்டு இடக்கையின் நடுவிரல் மோதிரவிரல் இரண்டையும் நடு நெஞ்சில் வைத்து அழுத்திக் கொண்டே, "ஏதோ இங்கிருந்து செல்ல மனது வரவில்லை குகா" என்றான். 

 

அவனின் முகத்தில் இருந்த உணர்வை புரிந்து கொண்ட குகன் "வேண்டாம் வேந்தா. நாம் வந்த வேலையை முதலில் முடிப்போம். பிறகு உன் வேலையை பார்ப்போம்" என்றான் புன்னகைத்துக் கொண்டே. 

 

தன் நண்பன் தன் மனதை புரிந்தது கொண்டதில் சிறிது வெக்கம் தோன்ற "எல்லாம் ஒன்றுதான் குகா. இரண்டையும் ஒன்று போலவே முடிப்போம்" என்றான் அவனும் சிரித்துக் கொண்டே. 

 

அவர்கள் அமைதியாக குதிரையை விட்டு இறங்கி தடாகத்தின் கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அவர்களை நோக்கி வரும் குதிரையின் காலடி ஓசை கேட்டது.  

 

ஓசை வந்த பக்கம் இருவரும் திரும்பி பார்க்க, பால் போல் வெண்ணிற குதிரையிலிருந்து வெண்ணிற ஆடை உடுத்தி வானிலிருந்து இறங்கிய ரம்பை போல் குதிரையிலிருந்து குதித்து இறங்கினாள் ருத்ரா தேவி. 

 

இறங்கிய வேகத்தில் யாழ் வேந்தன் அருகில் வந்து, "ஏன் தாங்கள் என்னிடம் கூறாமலே சென்று விட்டீர்கள்?" என்று வருத்தமாக அவனை பார்த்து கேட்டாள் ருத்ரா. 

 

முகத்தில் குழப்பம் தாங்க, "உங்களிடம் கூறி விட்டு செல்ல வேண்டுமா? உங்களிடம் தெரிவித்து செல்ல நான் யார்? உங்களை நான் எங்கு தேடி வந்து உங்களிடம் கூறிச் செல்ல முடியும்?" என்று அவளைப் பார்த்து கேட்டான் யாழ் வேந்தன். 

 

தன்னை யார் என்று தெரியவில்லை என்பதில் வருத்தம் கொண்டு, "என்ன நீங்கள் இளைய ராணியின் இறுதி சடங்கிற்கு அரண்மனைக்கு வரவில்லையா?" 

 

"இல்லை நான் அச்சமயம் கோட்டையைச் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தேன்" 

 

"அரண்மனையில் ஒரு துக்கம் நடக்கும் பொழுது, அந்த இடத்தில் நீங்கள் இருக்கும் பொழுது, அங்கு இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றவில்லையா?" என்றாள் சிறிது வருத்தமாக.

 

"எனக்கும் அரண்மனைக்கும் என்ன சம்பந்தம்? நான் ஏன் அரண்மனையின் துக்கநிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்? அப்படி கலந்து கொள்ளும் அளவிற்கு நான் ஒன்றும் அரசுக்கு நெருக்கமானவன் அல்லவே அதேபோல் நான் இந்நாட்டின் பிரஜையும் அல்லவே?" என்றான் அவனும் விடாப்பிடியாக. 

 

"இதுவரை நீங்கள் இந்நாட்டு பிரஜையாக இல்லாவிட்டாலும் இனிமேல் ஆகலாம் அல்லவா?" என்றாள் அவளும் ஏதோ அவனுக்கு உணர்த்தும் விதமாக. 

 

அவளின் உள்ளம் புரிந்தாலும் அவளுடன் விளையாடும் பொருட்டு "என்ன எங்கள் கானகத்தையும் உங்கள் நாட்டுடன் சேர்த்து எங்களை அடிமையாக்கும் எண்ணம் உங்களுக்குள் உதிர்த்து உள்ளதோ?" என்றான் சற்று பொய் கோபமாக. 

 

அவனின் கோபத்தை கண்ட ருத்ரா அவசரமாக, "நான் அப்படி கூறவில்லை" என்று மறுத்து அவனுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல் விழித்தாள். 

 

ஏன் அரண்மனை விட்டு இவனைத் தேடி வந்தாள். எதற்கு இவனிடம் இப்படி பேசிக் கொண்டிருக்கிறாள்  என்று எதுவும் அவளுக்கு புரியவில்லை. அவனின் கோபம் அவளுக்கு வருத்தத்தை ஏன் தருகிறது. அவனின் கோபத்திற்கு இவள் ஏன் விளக்கம் கொடுக்கின்றாள் என்று எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டு நின்றாள். 

 

அவளின் இந்த விழிப்பில் அவன் மயங்கியே விட்டான். இருந்தும் அதை அவன் முகத்தில்  காட்டிக் கொள்ளவில்லை. அப்படியே அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். 

 

இனிமேலும் தயங்குவது பயனில்லை என்று உணர்ந்த ருத்ரா அவனின் அருகில் இன்னும் சற்று நெருங்கி சென்று, "உங்களுக்கு உண்மையில் எதுவும் புரியவில்லையா?" என்றாள். 

 

அதற்கு யாழ் வேந்தன் "என்ன புரிய வேண்டும்?" என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான். 

 

அந்த செயலில் அவள் மனது அவனின் புறம் மேலும் இழுக்க அவனிடம் தயங்கித் தயங்கி அவளுக்கு அவனை பிடித்து இருப்பதாக கூறினாள். 

 

அவன் அவளை முறைத்து விட்டு "யார் என்று தெரியாத ஆடவனிடம் இப்படித்தான் உரைப்பாயா நீ?" என்று கோபமாக கேட்டு விட்டு, "தயவு செய்து நீ உனது வீட்டிற்கு செல். உன் பெற்றோரிடம் சொல். உனக்கு வரன் பார்க்கச் சொல்லி" என்று கோபமாக கூறினான். 

 

அவன் இப்படி கூறி அவளின் உணர்வை அவமானப்படுத்த அவளுக்கு வருத்தமும் கோபமும் வந்தது. 

 

ஒரு பெண் தானாய் முன்வந்து தன் மனதில் இருக்கும் எண்ணத்தை கூறினால் உங்களுக்கு என்னை பார்த்து நான் கீழ்தரமானவள் என்ற எண்ணம் தோன்றி விட்டதோ? 

 

"என் மனதில் இருப்பதை உங்களிடம் தெரிவித்தேன். அதற்கு நீங்கள் என்னை இப்படி அவமானப்படுத்தி விட்டீர்கள். இனி ஒருபோதும் நான் உங்களின் முன் வந்து  நிற்க மாட்டேன். இது நான் வணங்கும் என் ருத்ரமாதேவி மீது சத்தியம்" என்று கோபமாக கூறி வேகமாக தன் புரவியில் ஏறி அங்கிருந்து பறந்தாள் ருத்ரா. 

 

யாழ் வேந்தன் திகைத்து நின்றான். அனைத்தும் நொடிப்பொழுதில் விரைவாய் முடிந்து விட்டது.  அவளுடன் பேசிக் கொண்டு இருந்தவனின் விளையாட்டில்  கோபித்துக் கொண்டு பறந்து விட்டாள். 

 

யாழ் வேந்தனுக்கு என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே திகைத்து நின்று விட்டான். 

 

தொடரும்....

 

- அருள்மொழி மணவாளன்


 
Posted : December 21, 2025 7:10 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved