ருத்ரமாதேவி - 44
அத்தியாயம் 44
திடீரென்று தன் முன் தோன்றி தன்னுடன் வாள் சண்டையிடும் யாழ் வேந்தனை வியந்து பார்த்து கொண்டே அவனுடன் வாள் போர் புரிந்தாள் ருத்ரா.
இருவரும் சம பலத்துடன் வாள் வைத்து விளையாடிக் கொண்டிருக்க அந்த கானகத்தில் கிளிங் கிளிங் என்ற வாள் மோதும் சத்தம் மட்டும் கேட்டது.
தோழிகள் மிரண்டு அமைதியாய் ஒதுங்கி நிற்க ருத்ராவின் கண்கள் தன்னை எதிர்த்து போரிடும் யாழ் வேந்தனை அளவெடுக்க ஆரம்பித்தது.
தோள் வரை வளர்ந்த கூந்தல் அவனின் ஒவ்வொரு அசைவிற்கும் நடனமாட, ஆறடிக்கு மேல் உயரமாக இருப்பவனின் அசைவுகள் ஒவ்வொன்றும் வெகு சாதாரணமாகவே அவளின் வாள் வீச்சை தடுத்துக் கொண்டு இருந்தது.
அதில் அவள் வியந்து ஒரு கனம் தடுமாற, அந்த கன நேரத்தில் அவள் வாளை தட்டிப் பறித்தான். தன் கையில் இருந்த வாள் தவறியதில் அதிர்ந்து யாழ் வேந்தனை காண, அவன் அவள் கழுத்தில் வாள் வைத்திருந்தான்.
சிறிதும் அதிர்ச்சியோ பயமோ இன்றி அவன் விழிகளை பார்த்தவாறு அவனை நோக்கி ஒரு அடி முன்னேறினாள் ருத்ரா.
அவள் விழியின் அசைவிலேயே அவள் தன்னை நோக்கி நகர்கிறாள் என்று உணர்ந்து சற்றென்று வாளை பின் நகர்த்தி நிமிர்ந்து நின்றான்.
"என்ன ஆயிற்று வேந்தே. ஏன் உங்கள் வாள் நிலம் நோக்குகிறது என்றாள்?" அவனை வெறுப்பேற்றும் விதமாக.
அவனும் அவள் கண்களை பார்த்து புன்னகைத்துக் கொண்டே "என் வாள், என் உயிரை எப்படி எடுக்கும்?" என்றான் ஒற்றைப் புருவம் உயர்த்தி.
அவனின் கூற்றிலும் அவனின் செயலிலும் வியந்து அவனைப் பார்த்து "உங்கள் உயிர் இந்த வேங்கை நாட்டிலா?" என்றாள் எதுவும் தெரியாதது போல்.
அவனும் சற்றும் சலைக்காமல் "ஆம், இந்த வேங்கை நாட்டின் இளவரசி தான் எந்தன் உயிர்" என்றான்.
அவள் சிரித்துக் கொண்டே "என்ன ஆயிற்று. உங்கள் கானகத்தை வேங்கை நாட்டிற்கு அடிமை ஆக்கும் எண்ணம் உதித்து விட்டதோ?" என்றாள்.
தன் வார்த்தையை தனக்கே அவள் திருப்பிக் கொடுக்கின்றாள் என்று உணர்ந்து புன்னகைத்துக் கொண்டே "இவ்வளவு பரந்த நாட்டை எதிர்த்து அந்த சின்ன கானகம் போட்டியிட முடியுமோ? ஆகவே இந்த நாடுடன் இணைந்து விடலாம் என்று எண்ணி இருக்குமோ என்னவோ?" என்றாள்.
இவர்கள் இருவரின் வாள் போரை அமைதியாக வேடிக்கை பார்த்தது போலவே சொற்போரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவளின் தோழிகள்.
தன்னைத் தொடர்ந்து வராத தோழியை தேடி அவ்விடம் வந்த அத்வைதா தோழியின் அருகில் வந்து "என்ன ருத்ரா ஏன் இங்கேயே தங்கி விட்டாய்?" என்று யாழ் வேந்தனை பார்த்துக்கொண்டே தன் தோழியிடம் கேள்வி கேட்டாள்.
யாழ் வேந்தன் புன்னகையுடன் அத்வைதாவை பார்த்துக்கொண்டே "உனது தோழியிடம் சொல். காதல் தோல்வியில் கானகமே கதி என்று இல்லாமல் மாளிகைவாசத்தையும் சிறிது காலம் இருக்கச் சொல். இன்னும் சிறிது காலம் தானே அந்த மாளிகை வாசம். அதன் பிறகு என்னாளும் கானகத்திலேயே தானே வாழ வேண்டும். இருக்கும் கொஞ்ச நாளை தன் தாய் தந்தையருடன் மாளிகையில் இருக்கச் சொல்" என்று புன்னகைத்தபடி கூறி வாய் குவித்து ஓசை எழுப்ப அவனின் அடர் சாம்பல் நிற புரவி அவனின் அருகில் வந்து நின்றது.
குதிரையில் ஏறி அமர்ந்து ருத்ராவை பார்த்து ஒற்றைக் கண்ணடித்து வாய் குவித்து பறக்கும் முத்தம் கொடுத்து அங்கிருந்து மின்னலென கிளம்பினான்.
அவனின் கண் சிமிட்டலில் அதிர்ந்து நின்ற ருத்ரா அவன் தந்த பறக்கும் முத்தத்தில் கன்னம் சிவந்து அதிர்ந்து தன் தோழியை கண்டாள்.
அத்வைதா புன்னகைத்துக் கொண்டே தன் தோழியை அணைத்து "நான் அன்றே சொன்னேன் அல்லவா அவர் உன்னிடம் விளையாடுகிறார் என்று. இப்பொழுது புரிந்ததா அவர் உன்னை விரும்புகிறார்" என்று கூறி, "அவர் கூறியது போல் உன் திருமணத்திற்குப் பிறகு அவரின் கானகத்தில் தானே வாழ வேண்டும். அதுவரை எங்களுடன் ஒருமனதாக வசிக்கலாமே என்று அவளிடம் உடல் வளைத்து கேட்டாள்.
"ச்சீ... போடீ" என்று வெட்கப்பட்டு கொண்டு கால்களால் கோலமிட, "ஏய்... ருத்ரா... என்ன இது என்று மேலும் அவளை கேலி செய்தாள் அத்வைதா.
அன்று வேட்டையை அத்துடன் முடித்து விட்டு தங்கள் கோட்டைக்கு வந்தார்கள் ருத்ராவின் குழுவினர்.
ருத்ரா நேராக தன் பாட்டியின் அறைக்குச் செல்ல, அவளின் முகத்தில் இருந்த பூரிப்பை கண்ட ராஜமாதா அவள் கன்னம் தேய்த்து திருஷ்டி சொடுக்கி. "என்ன? என் செல்வத்தின் முகம் இன்று இவ்வளவு பிரகாசமாக இருக்கிறது?" என்றார்.
"போங்க பாட்டி" என்று வெட்கமாக கூறி தன் பாட்டியை இறுக அணைத்து விட்டு பின்னர் அவரின் மடியில் படுத்துக்கொண்டாள். அவரும் அவளின் தலையை வருடியபடி "சொல்லு ருத்ரா. இன்று கானகத்தில் நீ யாரைப் பார்த்தாய்?" என்று கேட்டார்.
அவரின் நேரடி கேள்வியில் அதிர்ந்து எழுந்து அமர்ந்து அவரை பார்த்த ருத்ராவை, அவள் பதில் கூறாமல் இங்கிருந்து நகர முடியாது என்று தோணியில் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜமாதா.
ருத்ராவிற்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. அவள் கைகளை பிசைந்து கொண்டு தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
தலை குனிந்து அமர்ந்திருந்த அவளின் நாடி பிடித்து முகம் உயர்த்தி தன்னை காண செய்து "வேங்கை நாட்டு இளவரசி என்றும் தன் செயலால் தலைகுனிந்து நிற்கக்கூடாது" என்று கூறி, "சொல் இன்று கானகத்தில் யாரைப் பார்த்தாய்?" என்றார் மீண்டும்.
தன் பாட்டியிடம் மறைக்க முடியாது என்று உணர்ந்த ருத்ரா இன்று கானகத்தில் பார்த்த யாழ் வேந்தனை பற்றி என்றிலிருந்து தெரியுமோ அது அனைத்தையும் கூறினாள். பின்னர் தன் பாட்டியின் தோளில் சாய்ந்து கொண்டு நான் அவரை மிகவும் விரும்புகிறேன் பாட்டி என்றாள்.
இரு கைகளாலும் அவள் கண்ணம் பற்றி நெற்றியில் இதழ் பதித்து "உன் ஆசை கண்டிப்பாக நிறைவேற ருத்ரமாதேவி அருள் புரியட்டும்" என்று கூறி ஆசி வழங்கினார் தன் மனதில் இருப்பதை தன் பாட்டியிடம் தெரிவித்த மகிழ்ச்சியில் தன் தாய் தந்தையரையும் சென்று பார்த்துவிட்டு தன் மாளிகைக்கு வந்தாள்.
தன் அறைக்குள் நுழைந்த ருத்ராவிற்கு அறையில் ஏதோ வித்தியாசம் தெரிவது போல் இருந்தது. தன் அறைக்குள் யாரோ வந்து சென்றிருக்கின்றார்கள், என்று தன் அறையை அங்குலம் அங்குலமாக சோதனை செய்ய ஆரம்பித்தாள்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்1 week ago
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
- 143 Forums
- 2,623 Topics
- 3,132 Posts
- 1 Online
- 2,142 Members
