ருத்ரமாதேவி - 45
அத்தியாயம் 45
தன் காதலை ராஜ மாதாவிடம் தெரிவித்த மகிழ்ச்சியில் தன் அறைக்குள் நுழைந்த ருத்ராவிற்கு அறையில் ஏதோ மாற்றம் இருப்பது போல் தோன்ற தன் அறையை சோதனை செய்ய ஆரம்பித்தாள்.
'தான் இல்லாத பொழுது யார் இங்கு வருவார்கள்' என்று யோசித்துக் கொண்டே சோதனை செய்ய அவளுக்கு எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை. அறை முழுவதையும் சோதித்து விட்டு மஞ்சத்தில் வந்து சோர்வுடன் அமர்ந்து இப்படியே மல்லாக்க படுத்தாள்.
அவளின் முதுகில் ஏதோ அழுத்தம் கிடைக்க உடனே சற்றென்று எழுந்து படுக்கையின் மேல் விரித்திருக்கும் விரிப்பை இழுத்தாள்.
அவளின் மஞ்சம் முழுவதும் மலர்களால் அலங்கரித்து இருந்தது. அதுவும் அவள் விரும்பும் கானகத்தில் மலர்ந்திருக்கும் மலர்கள். அதிலேயே தெரிந்தது இது யாழ் வேந்தனின் செயல் என்று.
அறை முழுவதும் யாழ் வேந்தனை தேட அவன் அங்கு இருக்கும் சுவடே இல்லை. சோர்வாக உட்பரிகையில் போய் நின்றாள்.
நிமிர்ந்து வானத்தைப் பார்க்க நிலவு மகள் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நிலவைப் பார்த்து கோபமாக "நீ ஏன் இப்பொழுது என்னை பார்த்துக் கொண்டிருக்கிறாய்? நான் யாழ் வேந்தன் மேல் வெகு கோபமாக இருக்கிறேன். என் அறைக்கு வந்து மஞ்சத்தை அலங்கரித்துச் சென்று இருக்கின்றார். அதை நீ பார்த்துக் கொண்டு தானே இருந்திருப்பாய்" என்று நிலவுடன் அவள் பேசிக் கொண்டிருக்க அவளின் கழுத்தில் மலர் மாலை விழுந்தது.
கழுத்தில் விழுந்த மாலையைக் கண்டு அதிர்ந்து, மாலை வந்த திசை நோக்க மரத்தின் மேல் அமர்ந்து கொண்டிருந்தான் யாழ் வேந்தன். அவள் அவனை கண்டதும் அவள் அருகில் குதித்து தன் கையில் இருக்கும் மலர் மாலையை அவள் கையில் கொடுத்து தனக்கு அணிவித்து கொண்டான்.
தன்னருகில் வந்து நிற்கும் யாழ் வேந்தனை கண்டு அதிர்ந்து ஒரு அடி பின்னால் நகர முயன்றாள் ருத்ரா. ஆனால் அவளின் கை அவனின் கைக்குள் இருப்பதால் அவளால் நகர முடியவில்லை.
அவளை இழுத்து தன்னுடன் நெருக்கமாக நிறுத்தி இந்த நிலவு சாட்சியாக இன்று நான் உன்னை மணந்துள்ளேன் என்று மென்மையாய் அனைத்து அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
அவன் இதழ் ஒற்றலில் அவள் தேகம் சிலிர்த்து அடங்கியது. அவனிடம் இருந்து விலகப் போராட அவன் வலிமையான கரங்களுக்குள் சிக்கிய அவளால் வெளியேற முடியவில்லை.
அவளின் போராட்டம் உணர்ந்து சிறிது நேரத்தில் அவளுக்கு கைச் சிறையில் இருந்து விடுதலை அளித்தான். அவனை விட்டு இரண்டு அடி பின்னே நகன்று நின்ற ருத்ரா அவனைப் பார்த்து முறைத்து, "என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள். தயவு செய்து இங்கிருந்து செல்லுங்கள்" என்றாள்.
அவனும் அவளின் அருகில் வந்து "தேவி உண்மையில் நான் இங்கிருந்து செல்ல வேண்டுமா?" என்று காதல் கண்களில் தாங்கி அவன் விழி நோக்கி கேட்டான்.
அவனின் விழியில் கண்ட காதலில் அவள் நெகிழ்ந்தாலும், "ஆமாம் தயவு செய்து இங்கிருந்து செல்லுங்கள். என்றாள் மீண்டும்.
"ஆனால் என்னால் இயலாது தேவி" என்று அவன் அவளை மீண்டும் நெருங்க, அவளோ பின்னே நகர்ந்து கொண்டே இருக்க, அதற்கு மேல் நகர முடியாமல் தடுத்து நின்றது தூண்.
தூணின் மேல் அவள் முதுகு மோதி அவளின் நகர்வு நின்றதும் அவளின் இருபுறமும் தூணில் கை வைத்து அவளை மேலும் நகர விடாமல் சிறை செய்து "என்னை உன் கணவனாக ஏற்க மாட்டாயா தேவி?" என்றான் ஏக்கமாக.
அதற்கு அவள் உங்களை பார்த்த நாள் முதலிலேயே என் கணவனாக என் மனதில் உங்களை ஏற்றுக் கொண்டேன். ஆனாலும் நம் பெற்றோர் பெரியவர்கள் ஆசியுடன் மனம் முடித்த பின்னே தான் இந்த உலகத்திற்கு முன் நீங்கள் என் கணவனாக முடியும். அதுவரை நீங்கள் தனியே என் அறைக்கு வர கூடாது.
ஆகவே தயவு செய்து இப்பொழுது செல்லுங்கள் என்று அவள் கூற அவளை மேலும் பேச விடாமல் அவளின் இதழில் தன் இதழ் பொருத்தினான்.
அவனிடமிருந்து விலக போராட, விலகத் தான் முடியவில்லை அவளால். ஒரு கட்டத்தில் மூச்சுக்கு ஏங்கி அவள் உடல் தளர, அவளை கைகளில் ஏந்தி மஞ்சத்தில் கிடத்தி, தன் ஆளுமையால் அவளை ஆட்கொண்டான்.
அவனின் ஒவ்வொரு செயலிலும் அவள் உடல் இளக ஒரு கட்டத்தில் அவளால் அவனை மறுக்க முடியாமல் அவனின் ஆளுமைக்கு உட்பட்டாள்.
அவர்களின் இந்த கூடலுக்கு நிலவு மகளே சாட்சியாக நின்றாள். கூடி கழித்து ஓய்ந்து அவளை விட்டு விலகி மஞ்சத்தில் படுத்து அவளை தன் மார்பின் மேல் தாங்கினான் யாழ் வேந்தன்.
நாழிகை கடக்க முதலில் எழுந்த ருத்ரா தாங்கள் இருக்கும் நிலை அறிந்து வெட்கமும் கோபமும் கொண்டு அவன் மார்பில் கைகளால் குத்திக் கொண்டே "என்ன காரியம் செய்து இருக்கின்றீர்கள்? இனி நான் என் பெற்றோர் முகத்தில் எப்படி விழிப்பேன்? சிறிதேனும் என்னை பற்றி சிந்தித்தீர்களா?" என்று கைகளால் குத்தினாள்.
அவள் அடிக்கும் அடி ஒவ்வொன்றையும் ஏதோ பரிசு தருவது போல் புன்னகையுடன் வாங்கிக் கொண்டு "ஏய்... வலிக்குதுடி..." என்று அவள் கைகளை விலக்க, அவள் பொத்தென்று அவன் மேல் விழ, சரியாய் அவள் இதழ் அவனின் இதழில் பொருந்தியது. அவ்வளவுதான் அவளுக்குத் தெரியும் அதன் பிறகு நடந்த செயல் அனைத்தும் யாழ் வேந்தன் தான் பொறுப்பு.
விடியலில் அவளை விட்டு பிரிந்த யாழ் வேந்தன் அவள் நெற்றியில் இதழ் பதித்து விலகினான்.
"என்னை இப்படியே விட்டு விட்டு ஏமாற்றி செல்லம் எண்ணமா வேந்தே?" என்று அவனைப் பார்த்து சோர்வாக கேட்டாள்.
அவளை இறுக்கி அணைத்து "அப்படி நான் செய்வேன் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா தேவி?" என்றான்.
"உங்கள் தந்தையிடம் கேட்டு உங்களை மனம் முடிப்பேன் தேவி" என்றான்.
உங்களுக்கு என்னை மனம் முடிக்க என் தந்தை சம்மதிக்கவில்லை என்றால்?.
"இப்போது நான் சென்று என் அன்னையையும் என் உறவினர்களையும் அழைத்து வந்து உன் தந்தையிடம் பெண் கேட்கின்றேன். எப்படி அவர் மறுக்கின்றார் என்று பார்ப்போம்" என்றான்.
"நீங்கள் கேட்டதும் மணமுடித்து தரும் அளவு தாங்கள் குடும்பம் பேரரசு குடும்பமா?"
"அதை அன்று தெரிந்து கொள்வீர்கள் தேவி. நான் இப்பொழுது கிளம்பவா? என்று ஏக்கமாக அவளை மேலிருந்து கீழ் பார்த்தான்.
அவனின் பார்வையில் வெக்கம் கொண்டு "தயவுசெய்து சென்று சீக்கிரம் வாருங்கள்" என்றாள் தன் கன்னச் சிகப்பை மறைந்துக் கொண்டு.
அவளின் நாடி பிடித்து தன் முகம் காண செய்து "வரும் உந்தன் பிறந்த நாள் அன்று நம் திருமணம் நம் பெற்றோர் பெரியவர்கள் ஆசியுடன் உன் ருத்ரமாதேவி சந்நிதானத்தில் நடக்கும். கவலை வேண்டாம் தேவி. விரைந்து வருகிறேன் என்று கூறி வந்த வழியாகவே சென்றான்.
அவனின் கூற்று விரைவில் நடக்கும் என்று மனம் மகிழ்ந்து ருத்ரா தேவி துயில் கொள்ள, அது என்றும் நடக்காது என்று தெரிந்த ருத்ரமாதேவி அதேபோல் நின்று அருள் பாளித்துக் கொண்டு இருந்தாள்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்1 week ago
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
- 143 Forums
- 2,623 Topics
- 3,132 Posts
- 1 Online
- 2,142 Members
