ருத்ரமாதேவி - 54
அத்தியாயம் 54
தமிழ் வேந்தன் தன் பிறந்த நாள் அன்று ருத்ரா காதலை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு, அவள் என்ன பதில் கூறுவாள் என்று ஆவலுடன் அவளின் முகத்தை பார்த்து அமர்ந்திருந்தான்.
அவன் நேரடியாக கேட்டதும் அவளுக்கு சிறிது குற்ற உணர்வாகவும் வெட்கமும் கலந்து வந்தது. அவளும் சிரித்துக்கொண்டே தலையை ஆட்ட, "நாளை உனக்காக ஒரு சின்ன பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளேன், வருவாயா?" என்றான்.
அவளும் "கண்டிப்பாக" என்று கூறி வீட்டிற்கு சென்றாள். மறுநாள் காலையில் வழக்கம் போல் எழுந்த ருத்ரா குளித்து முடித்து மெரூன் நிற புடவையை அணிந்தாள்.
மகாதேவி என்ன இன்று புடவை என்று கேட்க, சும்மா கட்டணும் போல் இருந்தது என்று அவரிடம் கூறி கல்லூரிக்குச் சென்றாள்.
மதியம் வரை கல்லூரியில் இருந்த ருத்ரா மதிய உணவுக்கு பிறகு தமிழ் வேந்தனுடன் சென்று விட்டாள்.
கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஒரு பீச் ரெசார்ட்டில் அவளுக்கு டின்னர் ஏற்பாடு செய்திருந்தான். அவர்கள் அங்கு போய் சேர மூன்று மணி ஆனது. நேராக சென்று பீச்சில் சிறிது நேரம் அமர்ந்திருக்க தமிழ் வேந்தன் அவளை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டே இருந்தான்.
அவன் பார்ப்பது அவளுக்கு தெரிந்தாலும், அவள் கடல் அலையை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் பொறுமை இழந்த தமிழ் வேந்தன் மணலில் இருந்த அவள் கை மேல் தன் கையை வைத்து அழுத்தி "ருத்ரா" என்றான்.
அவனின் கையின் அழுத்தத்தில் அவள் உடல் சிறிது நடுங்கியது. அந்த நடுக்கத்துடன் அவனைக் காண, "இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்து இருக்க வேண்டும்?" என்று மெதுவாக அவன் கேட்டான்.
அவள் கைகளில் இருந்து மெதுவாக தன் கையை உருவிய ருத்ரா, தன் கல்லூரி பையில் இருந்து கிப்ட் ராப்பர் செய்யப்பட்ட பரிசு பெட்டி ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்து "ஹேப்பி பர்த்டே" என்றாள்.
அவனும் அவ்வளவு தானா என்னும் விதமாக ஏக்கமாக பார்க்க புன்னகைத்துக் கொண்டே, "ஐ லவ் யூ. ஐ லவ் யூ சோ மச்" என்றாள் அவனின் கண்களை பார்த்து.
அவள் கூறியதும் அவனுக்குள் வானத்தில் பறப்பது போல் ஓர் உணர்வு. "தேங்க்யூ சோ மச் ருத்ரா. ஐ டூ லவ் யூ" என்று சிறிதாக அவளை அணைத்தான். பின் அந்த பரிசை பிரிக்க அழகிய ரிஸ்ட் வாட்ச் இருந்தது அதைப் பார்த்ததும் அவனின் கண்களில் சிறு கண்ணீர் துளி வர புறங்கையால் துடைத்துக் கொண்டு அந்த வாட்சை பார்த்துக் கொண்டே இருந்தான்.
அவனின் நிலை அவளுக்கு புரியாமல் "என்ன உங்களுக்கு இந்த வாட்ச் பிடித்திருக்கிறதா?" என்று கேட்டாள் ருத்ரா.
அவனும் "ரொம்ப" என்று கூறி உடனே தன் கையில் அணிந்து கொண்டான்.
"நீங்கள் இதுவரை வாட்ச் அணியவில்லை. ஆகவே உங்களுக்கு இது பரிசாக வாங்கினேன். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. வாட்ச் உங்களுக்கு பிடிக்காதோ? ஆகையால் தான் அணியவில்லையோ? என்று" என்றாள்.
தமிழ்வேந்தன் புன்னகைத்துக் கொண்டே "இல்லை. என் தங்கையின் ஞாபகம் வந்துவிட்டது. அவள் ஓர் வாட்ச் பைத்தியம். பள்ளிக்கு செல்லும் பொழுது என்னுடையது அப்பா உடையது என்று அனைத்தும் ஒவ்வொரு நாளும் கட்டிக் கொண்டு செல்வாள்.
அவள் இறந்த பிறகு வாட்ச் வாங்குவதை விட்டுவிட்டேன் என்றான் சோகமாக.
"உங்கள் தங்கையை ஞாபகம் படுத்திவிட்டேனோ? மன்னித்து விடுங்கள்" என்றாள்.
"பரவாயில்லை" என்று கடலை அமைதியாக வேடிக்கை பார்க்க, "அவள் தண்ணீரில் விளையாடலாமா?" என்று ஏக்கமாக கேட்டாள்.
"தாராளமாக" என்று அவனும் எழுந்து தன் கால் சட்டையை முட்டி வரை தூக்கி விட்டு தண்ணீரில் இறங்கினான்.
அவளும் அவனுடனே வர, சிறிது நேரத்தில் அலையுடன் சேர்ந்து அவர்களும் விளையாட ஆரம்பித்தனர். ஒரு பெரிய அலை வர அதை கவனிக்காத ருத்ரா அலையின் வேகத்தில் தண்ணீரில் விழ, அவளை காப்பாற்ற தமிழ் வேந்தனும் விழ, இருவரும் முழுவதும் நனைந்தனர். பின்னர் சிறிது நேரம் விளையாட அவளுக்கு குளிருவது போல் இருக்க தண்ணீரை விட்டு இருவரும் வெளியே வந்தனர்.
மணி ஆறை கடந்திருக்க நேரம் ஆகிவிட்டது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அவள் கூற, "இப்படியே ஈரத்துடன் செல்வாயா? இரவு உணவு ஏற்பாடு செய்துள்ளேன். சாப்பிட்ட பிறகு செல்லலாம்" என்று தான் புக் பண்ணி இருக்கும் அறைக்கு அவளை அழைத்துச் சென்றான்.
அங்கு வந்த சிற்பந்தியிடம் தான் ஆர்டர் செய்த உணவை உடனே எடுத்து வரும்படி கூறினான். பத்து நிமிடத்திற்கு அவன் சொன்ன உணவுகள் அவனின் அறைக்கு வந்தது.
முதலில் அதிலிருந்த ஜூஸை அவளுக்கும் கொடுத்து தானும் குடித்து முடித்துவிட்டு "நீ உடை மாற்றிக் கொள்" என்றான். அவளோ நான் மாற்று உடை கொண்டு வரவில்லை என்றாள்.
அவன் தான் கொண்டு வந்த பையில் இருந்து அவளுக்கு புதிதாய் ஒரு சுடிதார் வாங்கி வந்திருந்ததை கொடுத்தான்.
அவளும் மகிழ்ச்சியாக அந்தப் புதிய உடையை பார்த்து, "ரொம்ப அழகாக இருக்கிறது" என்று கூறி மேலே வைத்து பார்த்தாள்.
பிறகு குளித்துவிட்டு வருகிறேன் என்று கூறி குளியலறை நோக்கி செல்ல அவளுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. கீழே விழப் பார்க்க சற்றென்று வந்து தாங்கி பிடித்தான் தமிழ் வேந்தன்.
அவன் வந்த வேகத்தில் அவனுக்குமே தலை சுற்ற அவளுடன் சேர்ந்து அவனும் கீழே விழுந்தான். அவளின் மேல் விழுந்த தமிழ் வேந்தனுக்கு முகத்தின் அருகே அவளின் முகம் காண அவனுள் ஏதோ தோன்ற அவளின் இதழில் இதழ் பதித்தான்.
அவனின் செயலில் அதிர்ந்தாலும் அவனை எதிர்க்காமல் அவனுக்கு இசைந்தாள்.
சிறிது நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்க தமிழ் வேந்தன் தான் என்ன சத்தம் என்று சுற்றும் மற்றும் பார்த்தான். மீண்டும் அவளை அணைத்து அவளை அறியும் ஆவலில் அவளின் கழுத்தில் முகம் பதித்து ஆழ்ந்து சுவாசித்து இதழ் பதிக்க, மீண்டும் கதவை தட்டும் சத்தம். மெதுவாய் அவளை விட்டு விலகி எழுந்து கதவை திறக்க அங்கு சதாசிவம், அன்பரசு, ராஜசேகர் என்று அனைவரும் பதட்டமாக நின்றனர்.
அவர்களைப் பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டு நின்றான் தமிழன். ராஜசேகர் அவனை தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல முயல அவனைத் தடுத்து நிறுத்தினான் தமிழ் வேந்தன்.
அதற்குள் சதாசிவம் அறைக்குள் நுழைந்து தரையில் கிடக்கும் தன் மகளின் நிலையை கண்டு அதிர்ந்து நின்றார்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்7 days ago
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
- 143 Forums
- 2,622 Topics
- 3,131 Posts
- 6 Online
- 2,140 Members
