ருத்ரமாதேவி - 56
அத்தியாயம் 56
தமிழ் வேந்தனுக்கு தாங்கள் இருந்த நிலை ஞாபகம் வர, எப்படி இப்படி நடந்து கொண்டேன் என்று ஒன்றும் புரியாமல் தலையை பிடித்து கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.
ருத்ராவின் முனங்கல்கள் தவிர அந்த அறையில் எந்த ஒரு சத்தமும் இல்லை. அந்த அமைதியை களைக்கும் விதமாக கதவை வேகமாக திறந்து கொண்டு மூவர் உள்ளே வந்தனர்.
உள்ளே வந்தவர்கள் அங்கு இத்தனை பேர் உள்ளே இருப்பதை எதிர்பார்க்க வில்லை. உடனே வெளியே செல்ல பார்க்க, ராஜசேகர் வேகமாக கதவின் அருகில் சென்று, "நீங்க எப்படி இங்கே?" என்றான்.
அன்பரசுக்கும் இவர்கள் மூவரும் யார் என்று தெரிந்து இருந்ததால் "அங்கிள் அவர்களை பிடியுங்கள் சீக்கிரம்" என்று கூறி விட்டு விரைவாக அவர்களை பிடித்தான்.
மூவரும் சேர்ந்து அறைக்குள் வந்த அந்த மூவரையும் பிடித்து கட்டி வைத்தனர். அவர்கள் ஒரு வித போதையில் இருந்ததால் அவர்கள் கட்டுண்டது கூட தெரியாமல் அங்கு மயக்கத்தில் கிடக்கும் ருத்ராவை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் பார்வை சென்ற இடத்தை பார்த்த சதாசிவத்திற்கு ரத்தம் கொதிக்க அவர்களின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
அவர் அடிப்பதை தடுத்து நிறுத்தி, "அங்கிள் எதுவும் உணரும் நிலையில் அவர்கள் இல்லை. முதலில் எதற்கு இங்கு வந்தார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும்" என்றான் ராஜசேகர்.
அதுதான் சரி என்று உணர்ந்த சதாசிவம் உடனே தன் நண்பன் கமிஷனருக்கு போன் செய்து நடந்தவற்றை சுருக்கமாக கூறி என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டார்.
கமிஷனரும் நம்பகரமான இன்ஸ்பெக்டர் ஒருவரை அங்கு அனுப்புவதாக சொல்லி விட்டு, தானும் உடனே அங்கு வருவதாக கூறினார்.
அடுத்த அரை மணி நேரத்தில் காவல் துறையினர் அங்கு வந்து விட கமிஷனரும் இன்ஸ்பெக்டரும் உடன் இருந்தனர்.
தமிழ் வேந்தன் ருத்ரா இருவரையும் மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
காவல்துறையினர் தங்கள் பொறுப்பில் அம்மூவரையும் எடுத்துக் கொண்டு அவர்கள் முறையில் விசாரிக்க ஆரம்பித்தனர்.
அவர்களிடம் இருந்த போன் மற்றும் ஐடி அனைத்தையும் அலசி ஆராய ஒருவன் போன் அடித்தது. அதில் காமு என்று காண்பிக்க அடித்து ஓய்ந்ததும், அடுத்தவன் போன் அடித்தது. அதிலும் அதே பெயர் காண்பித்தது. இப்படியாக மூன்று போன்களும் அடித்து ஓய்ந்தது. அவர்களிடம் யார் அந்த காமு என்று கேட்க மூவரும் பதில் சொல்லாமல் மௌனம் காத்தனர்.
அதற்குள் அந்த போன் தஞ்சையில் இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. காமு என்பது காமேஷ். இவர்களின் நண்பன் என்றும் இவர்கள் செய்யும் செயல் ஒவ்வொன்றுக்கும் மூல காரணமாக இருப்பவன் காமேஷ் என்று தெரிந்தது.
சற்றும் தாமதிக்காமல் உடனே கைது செய்ய முடிவு செய்தனர் காவல்துறையினர். தஞ்சை காவல் நிலையத்திற்கு தெரிவிக்க அங்கிருந்த உயர் அதிகாரி அவர்கள் சொன்ன முகவரிக்கு சென்று பார்க்க அது ஒரு சொகுசு பங்களா.
பல பெண்களும் ஆண்களும் போதையில் சல்லாபித்துக் கொண்டிருந்தார்கள்.
அனைவரையும் கைது செய்தனர் காவல்துறையினர். திடீரென்று அங்கு நுழைந்த காவல்துறையினரை கண்டு அதிர்ந்த காமேஷின் காவலர்கள் காமேஷிடம் தங்கள் இடத்திற்கு போலீஸ் வந்துள்ளதை தெரிவித்தனர்.
போதையில் பெண்களுடன் உறவாடிக் கொண்டிருந்தவன் சுதாரிப்பதற்குள் அங்கும் நுழைந்த காவல்துறையினர். பெண்களையும் அவனையும் கைது செய்து தனியாய் ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க தொடங்கினார்கள்.
காமேஷுக்கு தஞ்சைக்கு அருகில் உள்ள ஒரு ஊர். பெரிய குடும்பத்தில் ஒரே பையன். சிறுவயதிலிருந்தே அவனுடைய தவறுகள் தொடங்கிவிட்டது தந்தைக்கு தெரியாமல் வீட்டிலிருந்து சிறு சிறு காசுகளை எடுத்து மிட்டாய் வாங்க ஆரம்பித்தான்.
அதனை அவன் தந்தை தண்டிக்கும் பொழுது அவனின் தாய் அவனுக்கு ஆதரவாக பேசி நம்ம பிள்ளை தானே என்று அவனை காப்பாற்றி விடுவார்.
தன் மனைவியிடம் இப்படி செய்யாதே மகனின் வாழ்வு கெட்டுப் போய்விடும் என்று கூறி விட்டு, மகனிடம் வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் எந்த பொருளையும் எடுக்க கூடாது என்று அறிவுரை கூறினார்.
அவரின் அறிவுரையை அவன் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு விடுவான். இப்படியே நாட்கள் கடக்க அவனது பத்தாவது வயதில் தந்தையின் பையில் இருந்து பணத்தை திருடி சென்று புகை பிடிக்க ஆரம்பித்தான். ஒரு நாள் அவன் தந்தை அவன் புகை பிடிப்பதை கண்டு அவனை அங்கேயே அடித்துவிட்டார்.
பத்து வயது சிறுவன் செய்யும் காரியமா இது என்று நினைக்க நினைக்க அவருக்கு வருத்தமாக இருந்தது. அவனை தர தர என்று இழுத்து வந்து வீட்டில் விட்டு அடிக்க கையோங்க, அவனின் தாய் அவரிடமிருந்து தன் மகனை காத்து அவன் இனி அப்படி செய்ய மாட்டான் என்று அவனை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
நீ ரொம்ப செல்லம் கொடுக்காதே அவன் கெட்டுப் போய்கிட்டு இருக்கான் பத்து வயது பையன் செய்யும் காரியமா இது என்று மனைவியையும் சேர்த்து திட்டினார். ஆனால் அவரின் கூற்றை அவரின் மனைவி கவனிக்காமல் அலட்சியம் செய்து மகனின் செயலில் உள்ள தீவிரம் உணராமல் தன் மகனிடம் "அவர் கிடக்கிறார் விடு" என்று கூறினார்.
தந்தையின் பேச்சை கொஞ்சமும் மதிக்காமல் தான்தோன்றி தனமாக நடக்க ஆரம்பித்தான். அவனது தாயும் இந்த சொத்து முழுவதுக்கும் தன் மகன் ஒருவன் தானே வாரிசு என்று அவன் கேட்கும் போதெல்லாம் எதற்கு என்று கேட்காமல் பணம் கொடுத்து அவன் தீய வழியில் நடக்க தானே காரணமானார்.
இப்படியே காலங்கள் கடக்க அவனுடைய பெரும் தவறு 15 ஆவது வயதில் நடந்தது. பெரிய மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு சினிமாவிற்கு சென்று அந்த வயதில் பார்க்க கூடாத படத்தை பார்த்தான். அதிலிருந்து அவனுக்கு பெண் ஆசை வந்தது.
தன்னுடன் படிக்கும் ஒரு மாணவியை காதலிப்பதாக நாடகமாடி தன் ஆசையை தீர்த்துக் கொண்டான்.
அதுவே தொடர, அந்த பெண் பயத்தில் இனி வேண்டாம் என்று மறுக்க, நீ என்னுடன் இருந்ததை ஃபோட்டோ எடுத்து வைத்துள்ளேன். அதை உன் வீட்டில் காட்டி விடுவேன் என்று மிரட்டி அடிபணிய வைத்தான்.
அவனின் கொடுமைக்கு பயந்து அந்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாள்.
அதில் அவனுமே சிறிது பயந்து விட்டான். சிறிது காலம் அமைதியாக இருந்தான். பள்ளி படிப்பு முடிந்து கல்லூரியில் சேர்ந்ததும் மீண்டும் தனது வேலையை ஆரம்பித்து விட்டான்.
பண தேவைக்கு அந்த பெண்களை மிரட்டியே அவர்களிடம் இருந்து பணம் பெற்றான். பெண்களிடம் இருந்து ஐநூறு ஆயிரம் என்று கிடைக்கும் பணம் அவனின் ஆடம்பரமான வாழ்க்கைக்கும் போதை பொருட்களை வாங்கவும் அவனுக்கு போத வில்லை.
அப்போது அவனுக்கு நண்பன் ஆனான் கோடீஸ்வரர் ஒருவன். அவனிடம் பெண்களை அனுப்பி பணம் சம்பாதிக்க ஆரம்பித்தான்.
பின்னர் அதையே மறைமுக தொழிலாக கொண்டான். அதில் அதிக பணம் கொடுக்கும் வாடிக்கையாளர் தான் இம்மூவரும்.
பெண்களை காம பொருளாகவே பார்க்கும் காமுகர்கள். அவர்களைப் போல் உள்ளவர்களுக்கு துணை புரிபவன் இந்த காமேஷ்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்7 days ago
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 552 weeks ago
- 143 Forums
- 2,622 Topics
- 3,131 Posts
- 5 Online
- 2,140 Members
